சனி, 18 ஏப்ரல், 2020

1522. ஐன்ஸ்டைன் - 2

அமரர் ஐன்ஸ்டீன்


ஏப்ரல் 18. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நினைவு தினம். 
அவர் 1955-இல் மறைந்தபின், விகடனில்  வந்த அஞ்சலிக் குறிப்பு.

==


விஞ்ஞான உலகிற்குக் கடந்த 18-ந் தேதி (18.4.55) ஈடு செய்ய முடியாத நஷ்ட தினமாகும். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது 76-வது வயதில் அன்று இறைவன் திருவடி சேரலானார்.

பிரபஞ்சத்தின் இயற்கை விநோதங்களைக் கணிதம் மூலம் விளக்குவதில் ஐன்ஸ்டீன் பல அற்புதங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர். அணுசக்தியின் அடிப்படைத் தத்துவத்தைக் கண்டறிந்த முதலாவது விஞ்ஞானி ஐன்ஸ்டீனேயாகும். அவருடைய கோட்பாடுகளின் மீதுதான் இதர விஞ்ஞானிகளும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். 

ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பிறந்த ஓர் ஏழை யூதர். இளமையில் வறுமைத் துன்பத்தில் உழன்றவர். சாதித் துவேஷம் காரணமாக நாஸி சர்க்கார் அவருடைய அறிவுத் திறமைக்கு ஆதரவளிக்க மறுத்து, அவரை ஒதுக்கி வைத்தது. சாதி வெறியின் இன்னல்கள் தாளாமல் அம்மேதை நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவரது திறமைக்கும் அறிவுக்கும் பிற நாடு கள் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பளித்து, ஆதரவளித்தன. ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் குடி யேறியபோதிலும் தமது தாய் நாடு ஜெர்மனியின்பால் கடைசி வரை அன்பு செலுத்தியே வந்தார்.

அவரது மறைவு உலக விஞ்ஞானத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்
=====
[ நன்றி; விகடன்]

'கலைக்கதிர்' 1956 இதழ்  ஒன்றிலிருந்து ஒரு பக்கம்:



ஐன்ஸ்டீனின் 'சார்புநிலைக் கோட்பாடு'  ( Theory of Relativity) பற்றி ஒரு குறும்பா:

ஐன்ஸ்டைனின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னாளில் வீடுவந்து சேர்ந்தாள் ! 


  தொடர்புள்ள மேலும்  சில   குறும்பாக்களை இங்கே படிக்கலாம்.  

தொடர்புள்ள பதிவுகள்;

ஐன்ஸ்டைன்





கருத்துகள் இல்லை: