காலனை வென்ற கண்ணதாசன்
அகிலன்
அக்டோபர் 17. கண்ணதாசனின் நினைவு தினம். அவர் மறைந்தபின் கல்கியில் வந்த அஞ்சலி.
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
கண்ணதாசன்
2 கருத்துகள்:
திரு.பசுபதி அவர்களுக்கு,
வணக்கம்.
நான் உங்கள் தளத்தின் நீண்டகால வாசகன்.
விமரிசனம் (vimarisanam.wordpress.com ) என்கிற
பெயரில் தமிழில் ஒரு வலைத்தளத்தை இயக்கி
வருகிறேன். நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ -இல்லையோ தெரியவில்லை;
உங்கள் தளத்தைக் கண்டு, உங்கள் பதிவுகளைக்கண்டு, பல காலமாக நான் வியந்து
வருகிறேன்... எப்படி இத்தனை விஷயங்களை,
தலைப்புகளை கையாண்டு வருகிறீர்கள். முக்கியமாக முதியவர்கள் விரும்பக்கூடிய,
ரசிக்கக்கூடிய பல தலைப்புகளில் தகவல்களை
தருகிறீர்கள்.
பல சமயம் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும்
என்று நினைத்ததுண்டு. ஆனால், அது உங்களை
தொந்திரவு செய்வதாக ஆகி விடுமோ என்று நினைத்து பிறகு பின்வாங்கி விடுவேன்.
இப்போது, சரி இனியும் தயங்கவேண்டாமென்று
நினைத்து இதை எழுதுகிறேன்.
நீங்கள் கனடாவில் வசிப்பதாக அறிகிறேன்.
வயது முதிர்ந்தவர் என்பதும் தெரிகிறது.
பேராசிரியராக பணி புரிந்தவர் என்பதும் தெரிகிறது.
எத்தனை ஆண்டுகளாக நீங்கள் கனடாவில்
வசிக்கிறீர்கள்...? நீங்கள் 1940-50 களில் வெளிவந்த
கல்கி, விகடன் இதழ்களில் இருந்தெல்லாம்
எடுத்துத் தருகிறீர்களே - எப்படி ? கனடாவில்
நல்ல தமிழ் நூலகம் இருக்கிறதா...? இவையெல்லாம் நூலகத்தில் உங்களுக்கு
சுலபமாக பார்க்க, புழங்க -கிடைக்கிறதா ?
அல்லது நீங்களே தனிப்பட சேமித்து வைத்திருக்கிறீர்களா...?
இந்த கேள்விகள் எல்லாம் - கனடாவில் தமிழ் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஒரு ஆவல் தான்.
இவற்றையெல்லாம், ஸ்கேன் செய்து
பதிவிடும் அளவிற்கு உங்களால் செய்ய
முடிகிறதா...?
என்னைப்பற்றிய சுய-விவரங்கள் எல்லாம்
விமரிசனம் தளத்தில் about பக்கத்தில் விவரமாக
தந்திருக்கிறேன். இப்போது நான் 78 வயதை
கடந்து கொண்டிருக்கிறேன்.
நீங்களும் கிட்டத்தட்ட என் வயதில் தான்
இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு சிரமம் இல்லையெனில்,
எனக்கு சில வார்த்தைகளில், மேற்படி விஷயங்கள் பற்றி விவரம் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
kavirimainthan@gmail.com
@kavirimainthan நன்றி. விரைவில், நேரம் கிட்டியவுடன் உங்களுக்கு மடல் எழுதுகிறேன்.
கருத்துரையிடுக