திரை எழும்புகிறது
தேவன்
தேவன்
தேவனின் பல கதை, கட்டுரைத் தொடர்களுக்குச் சித்திரங்கள் வரைந்தவர் அமரர் ராஜு. ‘துப்பறியும் சாம்புவிற்கு’ உயிரூட்டியவர் அவரே. பிறகு, விகடனில், தேவனின் மறைவுக்குப் பின்,1958-இல்‘சாம்பு’ ஒரு சித்திரத் தொடராக வந்தபோது ‘கோபுலு’ படங்கள் வரைந்தார்.
ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய தொடர் ‘துப்பறியும் சாம்பு.’
ஆகஸ்ட், 30, 1942 -இல் “ஆனந்த விகடனில்” தொடங்கிய தொடர் ‘துப்பறியும் சாம்பு.’
ராஜுவின் படங்களுடன் உள்ள ‘துப்பறியும் சாம்பு’ கதைகளைப் படிப்பதே ஒரு தனி அனுபவம். ’தேவனின் நாவல்களை, அவருடைய நூற்றாண்டு வருடமான 2013-இல் ராஜுவின் மூலச் சித்திரங்களுடன் வெளியிடுவதே சரியான நினைவுச் சின்னமாக விளங்கும். தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் அப்படி ஒரு பதிப்பு வரவேண்டும். ’ஷெர்லக் ஹோம்ஸ்’ கதைகளை அப்படிப்பட்ட ஒரு பதிப்பில் நான் பார்த்திருக்கிறேன்.
மாதிரிக்கு ஒரு சாம்பு கதையை, இங்கே இணைக்கிறேன்:
( படத்தில் சாம்புவுடன் இன்ஸ்பெக்டர் கோபாலன், சாம்புவின் மகன் சுந்து.....)
[ நன்றி: விகடன் ]
2 கருத்துகள்:
அழகானக் கட்டுரைகள், கவிதை, காதை
அளிக்கின்ற பசுபதியார் வலைப்பூ விற்கே
வழிகாட்டும் தினமணியைக் கண்டேன் கண்டேன்
மகிழ்ந்தளிக்கும் வாழ்த்திதனை ஏற்றுக் கொள்க!
மொழியார்வம் உள்ளோர்கள் பயன டைய
முன்வந்து உதவுவலைப் பூநீ வாழ்க!
எழுஞாயிற் றைப்போலே நீயும் நன்றே
எஞ்ஞான்றும் இதுபோலத் தொண்டு செய்க!
சிவ சூரியநாராயணன்.
Oh! What a treasure! "Raju", unfortunately didn't live long. There is a rumor that he took his own life because he couldn't marry the girl ( Gemini Vasan's daughter?) he fell in live with. I agree with you that an new edition of Suppariyum Sambu with Raju's picture will be well received.
As for you, Dr. Pasypathy, I think you are the modern version of U.V. Swaminatha Iyer. God bless you and your marvelous work.
A. sundararajan
கருத்துரையிடுக