ஐயோ! சுண்டெலி!
தேவன்
நான் கரூருக்குப் போன வாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள் ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப் போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலந்தள்ளி விட்டு நிஷ்கவலையாக வருகிறான் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் இந்த பொல்லாத உலகத்தில் கண் முன்னால் காண்பதை நம்ப முடிகிறதா? நான் பட்ட கஷ்டம் எனக்கல்லவா தெரியும்?- நான் படப் போகிற கஷ்டமும் தான்! எல்லாம் ஒரு சுண்டெலி செய்த வேலையென்றாலும் கூட நம்பப் போகிறதில்லை.
வியாழக்கிழமை சாயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஆசாமி தலைதெறிக்க ஓடிப் போய், ரயில் வண்டிக்குள் புகுந்ததை ஸ்டேஷன் மாஸ்டர், நாலைந்து போர்டர்கள், ஒரு கார்டு சுமார் ஐம்பது ஜனங்கள் இத்தனை பேரும் பார்த்திருப்பார்கள். அப்படி ஓடினவன் நான்தான் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். இவ்வளவு அடித்துப் பிடித்துக்கொண்டு வந்ததெல்லாம் ஒரு சுண்டெலியின் வாயில் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதற்குத்தானா என்று இப்போது நினைக்கும்போது என் மனது எவ்வளவு வேதனைப் படுகிறதென்கிறீர்கள்!
நான் கரூரில் வீட்டுக்கு வந்ததும், எங்கள் வீட்டு சொந்தக்காரார் எனக்குப் படுக்க ஒரு அறை ஒழித்துக் கொடுத்தார். அங்கே தான் முதல் முதலாக நான் அந்தச் சுண்டெலிக்கு அறிமுகமானேன். நான் குறட்டை விட்டுக்கொண்டு ஆழ்ந்து தூங்கியிருக்க வேண்டும். ஒரு அழகான சொப்பனம்; அதில் ஹல்வாவினாலேயே ஒரு பெரிய மலை தெரிந்தது. அதை ஒரு ரம்பத்தைப் போட்டு யாரோ விடாமல் அறுக்கிறார்கள். "கொர்ர்... கொர்ர்... கொர்ர்..." என்று கேட்கிறது. நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். நான் ரம்பத்தால் அறுப்பதாகக் கேட்ட சப்தம் உண்மையில் ஒரு சுண்டெலியின் பல்லிலிருந்து வந்தது என்று உடனே தெரிந்து கொண்டேன். எங்கேயோ மோட்டு வளையில் "கொர்ர்... கொர்ர்..." என்று அது ஓயாமல் ஒழியாமல் அறுத்துக்கொண்டேயிருந்தது. சட்டென்று விளக்கை ஏற்றினேன்; அந்தக் கணமே சுண்டெலி அறுக்கும் சப்தமும் நின்றது. சுத்தப் போக்கிரித்தனம், வேறொன்றுமில்லை! நான் இந்தச் சுண்டெலிக்குத் தோற்று விடுவேனா? விளக்கை இரவு பூராவும் ஏற்றியபடியே வைத்திருந்தேன், சுண்டெலி ஏமாந்து போயிருக்க வேண்டும். நான் எடுத்த எடுப்பில் அதை ஜயித்து விட்டேன்.
இரண்டாவது நாள் நான் படுக்கும்போது என் தாயார், "விளக்கில் துளிக் கூட எண்ணெயைக் காணோமே! ராத்திரி பூராவும் விளக்கை எரித்துக் கொண்டு படித்தாயா என்ன? கிரோஸின் எண்ணெய் காசு கொடுத்தாலும் கிடைக்கவில்லையே!" என்றாள். ஆகவே அன்று விளக்கை எரிக்கக் கூடாதென்று தீர்மானித்தேன். வீட்டுக்காரரிடம் ஒரு 'டார்ச்' விளக்கை வாங்கி வைத்துக் கொண்டு படுத்தேன்.
அன்று ரம்பம் அறுப்பது கேட்கவில்லை. ஆனாலும் நான் 'டார்ச்'சை ஏற்றத் தயாராக இருந்தேன். சுமார் 12 மணி இருக்கும் அறைக்குக் குறுக்கே திருதிருவென்று ஓடும் சப்தம் கேட்டது. சுண்டெலி கிளம்பி விட்டது திடீரென்று 'டார்ச்'சை ஏற்றினேன்; தலைகாணியை எடுத்து எலியைப் பார்த்து ஓங்கி அடித்தேன். தலைகாணி எலிக்கு நான்கு அடி தள்ளி விழுந்தது.
சுண்டெலி நின்று என்னைப் பார்த்து. கண்ணைச் சிமிட்டி அது ஒரு சிரிப்புச் சிரித்ததாகக் கூட எனக்குச் சந்தேக்ம்.
என் கோபம் அதிகமாகி விட்டது. இன்னோரு தலைகாணியைப் பிடுங்கி வீசினேன், அதற்குள் சுண்டெலி வாசற்படியிலிருந்த சின்ன ஓட்டைக்குள் பதுங்கிக் கொண்டது. போகும்போது மறுபடியும் கண்ணைச்சிமிட்டி, நாக்கை நீட்டிக்காட்டி விட்டுத்தான் போயிற்று.
அப்புறம் அன்று ராத்திரி சுண்டெலி வரவில்லை. இருந்தாலும் எனக்குத் தூக்கம் என்னமோ வரவில்லை. ஒரு சுண்டெலி இருக்கிறது, அதுவும் பொல்லாத சுண்டெலி என்று தெரிந்த பிறகு எப்படித் தூக்கம் வரும்? கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டிருந்தேன். கண்ணயர்ந்தால் சுண்டெலி சொப்பனம்தான்; திடுக்கிட்டு விழித்துக்கொள்ள வேண்டியதுதான். காலையில் கண் விழித்த போது - விழிக்க வேண்டிய அவசியமேயில்லை; இரவெல்லாம் விழித்துக் கொண்டிராமல் வேறென்ன செய்தேன்?- என் உடம்பெல்லாம் வலித்தது; கண் எரிந்தது; தூக்கம் தூக்கமாக வந்தது. அன்று எனக்குத் தோல்வி, எலிக்குத்தான் ஜயம்.
காலையில் வீட்டுக்காரரிடம், "உங்கள் வீட்டில் சுண்டெலி நடமாடுகிறதோ?"
என்றேன்.
"ஹும்... சொப்பனம் கண்டிருப்பீர்" என்றார் அவர்.
"இல்லை. நிஜமாக வருகிறது" என்றேன்.
"ஏங்காணும் வீணாய்? இந்த வீட்டிற்கு வருந்தி வருந்தி அழைத்தால் கூடச் சுண்டெலி வராதே! ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஒரு சுண்டெலி காண்பியும்" என்றார்!
அவர் சொல்கிறதைப் பார்த்தால், நான் ஆயிரரூபாயைக் கண்டிராதவன். அதைச் சம்பாதிக்கிறதற்காக அவரிடம் சுண்டெலி இருப்பதாகச் சொல்கிறேன் என்றுதான் அவர் எண்ணுகிறார் என்று தோன்றிற்று. "ஓய்! எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டாம். எலி வராமல் இருந்தால் போதும்" என்றேன்.
ஊரெல்லாம் வீடு காலி இல்லை என்று பேச்சாயிருக்கும்போது, சுண்டெலி விஷயமாக வீட்டுக்காரருடன் வாக்குவாதம் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அவர், "என் வீட்டிற்குச் சுண்டெலிதான் முக்கியம். உம்ம குடும்பம் முக்கியமில்லை” என்று சொல்லி விடலாமல்லவா?
மூன்றாவது நாள் இரவு வழக்கத்தை விட ஒரு பிடி கூடவே சாப்பிட்டேன், அப்போதே தூக்கம் தள்ளிக் கொண்டு வந்தது. போய் அறையில் படுத்ததுதான் தெரியும். காலையில் சிங்கம் மாதிரி துள்ளி எழுந்தேன். சுண்டெலியும் சிங்கம் மாதிரி கம்பீரமாக அறையை விட்டு அப்போது வெளியேறியது. அதோடு கூட தோல் பெட்டியில் ஒரு மூலை மாயமாக மறைந்து போயிருந்தது! மூன்றாம் நாள் எலிக்கே வெற்றி!
பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டுக்காரரிடம் காண்பித்தேன். அவர் பொடியை மூக்கில் இழுத்து விட்டுப் பெட்டியைப் பார்த்தார்.
"ஓய் ! ஐதர் காலத்துப் பெட்டிங்காணும் இது."
"எலி தின்றிருக்கிறது பார்த்தீரா?"
"கதை தான்! எங்கேயாவது எலி தோலைத் தின்று கேள்விப்பட்டிருக்கிறீரா?"
"தின்று விட்டு ஓடிற்று? நான் கண்ணால் பார்த்தேன். அப்புறம்?"
"நம்மாத்தில் என் சம்சாரம் அடை தட்டித் திறந்தே வைத்திருக்கிறாள். ஒரு எலி அண்டவில்லை; உம்ம பெட்டியைத் தின்ன வந்து விட்ட தாங்காணும்?"
அது அடையின் பெருமைதான். உம்ம பெண்டாட்டி தட்டிய அடையை நீர் ஒருத்தர் தான் தின்ன முடியும் என்று நான் சொல்லவில்லை. மனதில் நான் நினைத்துக் கொண்டேன். வாயை விட்டுச் சொன்னால், வீட்டுக்காரர் வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவார். உங்களுக்குத்தான் தெரியுமே, ஊரில் ஒரு வீடு காலியில்லை என்று!
வீட்டுக்காரரோ, நம்ப மாட்டேனென்று பிடிவாதமாக இருந்தார்; சுண்டெலியும் பிடிவாதமாகத் தினம் வந்து கொண்டிருந்தது. எலிப் பொறி வாங்கி, அதில் வெங்காய அடைகளையும் வடைகளையும் வைத்தேன். வெங்காய அடைகளும் வடைகளை மாயமாக மறைந்தன. கம்பியை ஆட்டி, எலிப்பொறியை மூடும். நான் பக்கத்தில் போகும் வரை பொறிக்குள்ளேயே உட்கார்ந்திருந்துவிட்டு, என்னைப் பார்த்து இளித்து விட்டு கம்பிகள் வழியாகத் தப்பித்துக் கொண்டு ஓடும்.
ஒரு வார லீவ் கழிந்தது. "அப்பாடா! இந்தச் சனியன் பிடித்த சுண்டெலியின் தொல்லை தீரச் சென்னைக்குப் போகலாம்" என்று கிளம்பினேன். இந்த வீட்டுக்காரரே இந்த சுண்டெலியைக் கட்டிக்கொண்டு புரளட்டும் என்று எண்ணியபோது நான் களுக்கென்று சிரித்து விட்டேன்.
மூட்டையைக் கட்டிக் கொண்டு ராத்திரி மெயிலில் புறப்பட்டு ஊருக்கு வந்தேன். மெயில் கூட்டத்தில் ராத்திரி முழுவதும் விழிப்புதான். இருந்தாலும் சுண்டெலி தொல்லை நீங்கிய சந்தோஷத்தில் அதை நான் பொருட்படுத்தவே இல்லை.
வீட்டுக்கு வந்து என் அறையில் பெட்டியை வைத்தேன். "என்ன என்ன வாங்கிண்டு வந்தேள்? என்று என் மனைவி பெட்டியைத் திறந்தாள். நான் வேறு பக்கம் திரும்பிச் சட்டையைக் கழட்டிக்கொண்டிருந்தேன்.
"அய்யோ!" என்று அவள் கதறியதைக் கேட்டு, அவசரமாகத் திரும்பினேன்.
என் பெட்டிக்குள்ளிருந்து அந்தச் சுண்டெலி குதித்து ஓடிக் கொண்டிருந்தது! வாசற்படி ஓட்டையண்டை சற்று நின்று, என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி விட்டு அதன் வழியாக மறைந்தது!!
இன்னும் நான் தூங்கவில்லை; சுண்டெலியும் தூங்குவதாகக் காணவில்லை.
=====
தொடர்புள்ள சில பதிவுகள்;
நாகப்பன்
ஸரஸ்வதி காலெண்டர்
எனது மனமார்ந்த நன்றி
தேவன் நூற்றாண்டு விழா -2
தேவன் நூற்றாண்டு விழா -1
தேவன் படைப்புகள்
துப்பறியும் சாம்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக