" அப்பவே சொன்னேனே, கேட்டாயா?”
நாடோடி
ஆனந்தவிகடனில் 1936-இல் அதிகமாக எழுதியவர்கள் மூன்று பேர்கள் என்கிறது ‘விகடன்’ பொக்கிடம் என்ற நூல் : அவர்கள் “ கதிர்”, “சசி”, “நாடோடி”. மூன்று பேருக்கும் இயற்பெயர் ஒன்றே! வெங்கடராமன் !
விகடன், கல்கி, விகடன் என்று மாறி மாறிப் பணியாற்றியவர் நாடோடி. (எம்.வெங்கடராமன்)
’கல்கி’யில் 40-களில் அவர் எழுதிய “எங்கள் குடும்பம் பெரிது”, "இதுவும் ஒரு பிரகிருதி" போன்ற ஹாஸ்யத் தொடர்கள் மிகப் பிரபலம். அடுத்த வீட்டு அண்ணாசாமி அய்யர், மனைவி சரசு, மகள் அனு ...இவர்கள் அவர் கட்டுரைகளில் அடிக்கடி உலா வருவார்கள். 50-களில் விகடனில் ஒவ்வொரு வாரமும் அவருடைய கட்டுரை ஒன்று வரும்!
சென்னையில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் பக்கத்தில் அவர் குடியிருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். ஷெர்வானி அணிந்து மோட்டார் சைகிளில் ‘ஜம்’மென்று போவார். கடைசியில் அவர் தினமணி, ராமகிருஷ்ண விஜயம் இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வந்தார். எனக்குத் தெரிந்து அவருடைய எந்த நூலும் இப்போது அச்சில் இல்லை.
அதனாலேயே அவருடைய சில கட்டுரைகளை இங்கிடுவேன்!
[ நன்றி : விகடன் ; நாடோடியின் படம்: “அது ஒரு பொற்காலம்” நூல் ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தொடர்புள்ள பதிவுகள்:
நாடோடி படைப்புகள்
தொடர்புள்ள பதிவுகள்:
நாடோடி படைப்புகள்
12 கருத்துகள்:
இன்புறுவதற்கு இப்படியும் ஒரு வழியா.?:))
மறக்கப்பட்ட இது போன்ற ஆளுமைகளை மீண்டும் கண்முன் நிறுத்துவது பெரிய சேவை.
மஞ்சள் பூத்த இந்த இதழ்களைப் பார்க்கும் போது கணினி கடந்தும் என் அறையில் நிறைகின்ற பழைய புத்தகங்களின் வாசம்..............................................
நன்றி அய்யா!
தொடர்கிறேன்.
Pasupathy saar,
can you publish some music vimarsanams about Madurai Mani iyer?
thanks
Krish
Krish, Will keep it in mind. If I get some , will post. Thanks.
நல்லது. நாடோடி எழுதியதாக சென்னை எழுத்தாளர் இடையே வேறு புத்தகங்களும் சொல்லப்படுகின்றன
>> நாடோடி எழுதியதாக சென்னை எழுத்தாளர் இடையே வேறு புத்தகங்களும் சொல்லப்படுகின்றன >> சில பெயர்களோ , இணையச் சுட்டியோ தரமுடியுமா?
அமர்க்களமான கட்டுரை! அந்தக் காலத்திலேயே எப்படி எழுதி இருக்கிறார்கள் பார்த்தீர்களா! இப்படிப்பட்ட அரிய படைப்புகளைப் படிக்கத் தருகிறமைக்கு மிக்க நன்றி ஐயா!
அறுபதுகளில் விகடனில் ஒரு நகைச்சுவைச் சித்திரத்தொடர்கதை வெளியானது. சங்கரனும் கிங்கரனு' என்று பெயர். மறக்க முடியாத தொடர். அதனை எழுதியவர் நாடோடி என்று நினைவு.
எனக்கு நினைவில்லை. தேடுவேன்!
>>சங்கரனும் கிங்கரனு' என்று பெயர். மறக்க முடியாத தொடர். அதனை எழுதியவர் நாடோடி>> எழுதியவர் 'மெரினா" ( பரணிதரன்) என்கிறார் ஒரு நண்பர்.
'நாடோடி'யின் அக்கா செல்லம் என்ற செல்லலெட்சுமியும் சிறுகதை எழுத்தாளர்தாம்! 40 சிறுகதைகள், இரு நாவல்கள், 15 சிறார் கதைகள் எழுதியுள்ளார். கல்கி, ஆனந்த விகடன், நாடோடி ஆகிய வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன.
தகவலுக்கு நன்றி, இரா.குமரகுருபரன். 'செல்லம்' என்ற பெயரில் எழுதினாரா? கல்கியில் அவர் எழுதிய ஏதேனும் ஒரு சிறுகதையின் தலைப்பை, இதழ் வந்த தேதி கொடுத்தால் முடியும்போது தேடி எடுக்க முயல்வேன். ( 'தேவ'னும் 'செல்லம்' என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். )
//சங்கரனும் கிங்கரனு' என்று பெயர். மறக்க முடியாத தொடர். அதனை எழுதியவர் நாடோடி>> எழுதியவர் 'மெரினா" ( பரணிதரன்) என்கிறார் ஒரு நண்பர்.// தகவலுக்கு நன்றி. அப்பருவத்தில் நான் விரும்பி வாசித்த சித்திரக்கதை.
கருத்துரையிடுக