ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 23

'சிரிகமபதநி’ -1

’ஆனந்த விகடனை’ அலங்கரித்த ஓவியர்கள் அநேகர். ஓவியர் கோபுலு , “மாலி முதல் மதன் வரை” என்று தான் அறிந்த பலரைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறார். அவர்களில் பலரும் சங்கீதப் பிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். பலர் சங்கீதத்தை அடிப்படியாகக் கொண்ட நகைச்சுவைச் சித்திரங்களை விகடனில் அள்ளி வீசியிருக்கின்றனர். அவ்வகையில், வெவ்வேறு ஓவியர்களின் தூரிகைகள் பாடும் சில ‘சிரிகமபதநி’ படங்கள் இதோ ! ஏழு ஸ்வரங்களும் ‘விகடன்’ இதழ்களிலிருந்து !

1.
ராஜு( இயற்பெயர்: ஸ்ரீ நாராயணசாமி ) ‘மாலி’ கண்டெடுத்து ‘விகடனில் சேர்த்துக் கொண்ட ஒரு மாணிக்கம். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகைச்சுவைச் சைத்திரிகர்களில் இவர் ஒருவர். 1953-இல் மிக இளம் வயதில் காலமாகி விட்டார்.


2.
”கோபுலு ஓவியர் கோ ...”என்பது ஒரு வெண்பாவின் ஈற்றடி. அதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்? எஸ். கோபாலனுக்குக் ‘கோபுலு’ என்று பெயர் சூட்டியவர் ‘மாலி’. 44-இல் கோபுலு விகடனில் சேர்ந்தார்; அங்கே 20- ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். 1972-இல் ஒரு விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு அங்கிருந்தும் நீங்கி, ’கல்கி’, விகடன். குங்குமம், அமுதசுரபி என்று பல இதழ்களுக்கும் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். ’ஓவியப் பிதாமகர்’ கோபுலு இன்னும் பல ஆண்டுகள் நம்மிடையே இருந்து, ஓவியக் கலைக்குத் தொண்டாற்ற ஆண்டவனை வேண்டுவோம்!3.


4.
ஓவியர் ‘ரவி’ 40-களில் ’விகடனில்’ பணி ஆற்றிப் பின்னர் ‘குமுத’த்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். ( கல்கியிலும் இருந்திருக்கிறார்.) குமுதத்தின் முதல் இதழின் அட்டைப்படத்தை அவர்தான் வரைந்தார்.
( ‘தேவ’னின் “வாரம்-ஒரு-பக்கம் நாவல்” மாலதி -க்கு அவர் வரைந்த 14 படங்கள் என் முந்தைய பதிவுகளில் உள்ளன. ) கோட்டோவியத்தில் நிபுணர். இயற்பெயர் : லக்ஷ்மிநாராயணன்.

5.
விகடனின் தொடக்க காலத்திலிருந்தே அங்கே பணியாற்றிய ‘சிவ’த்தின் இயற்பெயர் : எம்.எஸ்.சிவராமன். பேராசிரியர் கல்கி விகடனின் ஆசிரியராய் இருந்தபோது சிவம் கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்தார். பிறகு ஒரு துணை ஆசிரியராய் அவர் 1975-இல் மறையும் வரை விகடனில் பணி புரிந்தார்.


6.

பாகவதர்: காம்போதி ராகம் பாடட்டுமா?
ரஸிகர்: அந்த ராகம் எனக்குப் பிடிக்காது!
பாகவதர்: அப்படீன்னா கல்யாணி ராகம் பாடட்டுமா? 
ரஸிகர்: ஊஹும்! வேண்டாம்! அது எனக்கு ரொம்பப் பிடித்த ராகம்! 7.  ‘ மதன்’ வரைந்தது.


[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

சிரிகமபதநி

சங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம் 


சங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி

மாமாங்க மாறுதல்கள் ! ..மாலி-சில்பி


சங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்


6 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

சங்கீத சங்கதிகள் அனைத்தும் அருமை.

bandhu சொன்னது…

அனைத்தும் அருமை.. பொக்கிஷத்தை பகிர்ந்து கொள்ள பெரிய மனது வேண்டும். உங்களுக்கு அது இருக்கிறது.. மிக்க நன்றி!

இராய செல்லப்பா சொன்னது…

அழகான தொகுப்பு! குபீரென்று சிரிப்பு வருகிறது! அமர ஓவியங்கள்!

Unknown சொன்னது…

ஓவியர்கள் வாயால் பேசாமல் தங்கள் கைகளால் பேசுவதை ரசிக்க நேரம் போதாது.

Pas S. Pasupathy சொன்னது…

இங்கு வந்து கருத்துரைத்த யாவருக்கும் என் உளமார்ந்த நன்றி. மற்ற சங்கீத சங்கதிகளையும் பார்க்க வேண்டுகிறேன்.

Param Eswar சொன்னது…

My first visit based on a link. Excellent. What a humorous sense. Thanks for sharing. P.A.Parameswaran

கருத்துரையிடுக