சனி, 23 ஆகஸ்ட், 2014

தென்னாட்டுச் செல்வங்கள் - 13

கங்கை கொண்ட சோழபுரம் -3 
இந்தக் கோவிலைப் பற்றிய மூன்றாவது கட்டுரையின் தொடக்கத்திலேயே, இதுவரை ’தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடரில்  நாம் பார்த்த எல்லாச் சிற்பங்களைவிடப் பரிபூரண அழகுள்ள சிற்பம் ஒன்றைச் சில்பியின் கைவண்ணம் மூலமாய்ப் பார்க்கப் போகிறோம் என்பதைச் சுட்டுகிறார் ‘தேவன்”. சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்று இதைக் குறிப்பிடுவர். அருகில் பார்வதி வீற்றிருக்கச் சண்டேசருக்குப் பரிவட்டம் கட்டும் சிவன், சோழராஜனுக்கே பரிவட்டம் கட்டும் சிவன் என்ற இரு கருத்துகளும்  தோன்ற வைக்கும் சிற்பம் இது என்பர் அறிஞர். தஞ்சைப் பெரிய கோவிலில் இல்லாத ஓர் அற்புதச் சிற்பம் என்று பலரும் இதைப் போற்றுவர்.


கட்டுரைத் தலைப்பான “ அரனார் மகனார் ஆயினார்”  பெரியபுராணத்தில் சண்டேசுர நாயனாரின் வரலாற்றில் வரும் பாடல் ஒன்றில் உள்ள ஒரு சொற்றொடர்.

அந்தப் பாடல்:

வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் 
அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார் 
இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கு அன்பு 
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால்  

கட்டுரையில் உள்ள சண்டேசுரரின் கதையைப் படித்தபின் இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறை படிக்கவும்!

123. ‘அரனார் மகனார் ஆயினார்! 
  


   
பின் குறிப்பு : 
’சில்பி’ சண்டேசரை வேறு கட்டுரைகளில் வரைந்துள்ளாரா? 
எனக்குத் தெரிந்து, ஒரு தென்னாட்டுச் செல்வங்கள் கட்டுரையில் சண்டேசர் ...உண்மையில், இரண்டு சண்டேசர்கள் ...வருவார்கள்!  இவர்கள் திருவாரூரில் உள்ள ‘உத்ஸவ சண்டேசர்’, யம சண்டேசர் என்ற இருவர் ! தஞ்சை பெரிய கோவிலில் ராஜா மண்டபத்தில் உள்ள சண்டேஸ்வரையும் ‘சில்பி’  வரைந்துள்ளார்.  இவர்களைப் பற்றிய தகவல்கள், ஓவியங்கள்  மிக அருமையானவை!  அறிய விரும்புவோர் ‘விகடன்’ அண்மையில் வெளியிட்டுள்ள ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ நூல்களை வாங்கிப் படிக்கவும். 

’சண்டேசுரர் வரலாறு’ பற்றித் தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் ஒரு சுவையான, வேறுபட்ட விளக்கம் தந்திருக்கிறார்.  அதை எஸ். ராஜம் அவர்களின் ஓவியங்களுடன் விளங்கும் ”சித்திர பெரிய புராணம்” என்ற நூலில் பார்த்து, படித்து மகிழலாம். 


[ நன்றி: விகடன் ]

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக