பசுபலேடி கண்ணாம்பா - ஆந்திரம் தந்த அற்புதம்!
பா.தீனதயாளன்
======
‘புராணத்துல வர காமரூபன் சாராயம் போட்டிருக்கான்னு கதையில வருதா?’ என்று பி.யூ.சின்னப்பாவைப் பார்த்துக் கடும் கோபத்துடன் கேட்டார் கண்ணாம்பா.
சின்னப்பா என்றால் எல்லாருக்கும் சிம்ம சொப்பனம்! அவர் மது அருந்தி விட்டுப் படப்பிடிப்புக்கு வருவது சர்வ சாதாரணம். ஒட்டுமொத்த செட்டும் அதிர்ந்து நின்றது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சம் அனைவரின் முகத்திலும்.
‘என்னை மன்னிச்சுடு கண்ணாம்பா. இனிமே நம்ம ஷூட்டிங்கிலே குடிக்க மாட்டேன்.’ என்று உறுதி அளித்துக் கண் கலங்கி நின்றார் சின்னப்பா.
வேறொரு நடிகை அப்படிக் கேட்டிருந்தால் அடுத்த நொடியில் கன்னம் பழுத்திருக்கும்.
‘எனக்கென்னமோ நீங்க குடிக்கிறது பிடிக்கல. நான் அப்படி சொன்னதுக்கு மன்னிச்சுக்குங்க.’ கண்ணாம்பா பெருந்தன்மையுடன் தன் கருத்துக்கு வருத்தமும் தெரிவித்துக் கூடுதல் வலிமையும் சேர்த்தார்.
எதிர்பாராமல் மிக இளம் வயதில் அகால மரணம் அடைந்த பி.யூ.சின்னப்பாவின் இறுதி, ஊர்வலம்.
’அய்யா போயிட்டீங்களா... இனி உங்கள மாதிரி நடிக்கிறவங்கள எங்கே பார்ப்பேன்...?’ என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார் கண்ணாம்பா.
கண்ணாம்பா-பி.யூ.சின்னப்பா இருவருக்கும் இடையில் ஆத்மார்த்தமான நேசம் உண்டு. என்பது பகிரங்கமானது அன்று.
எண்பத்தைந்து ஆண்டு கால பேசும் பட வரலாற்றில் பசுபலேடி கண்ணாம்பா போன்றதொரு அற்புதமான தமிழ் உச்சரிப்பு உடைய நடிகையைக் காண்பது மிக அரிது.
மாஸ் ஹீரோக்களுடன் நடித்தபோதும் தனித்துக் கைத்தட்டல்களைப் பெற்ற நடிப்பரசி.
ஆந்திரம் தந்த அற்புதம்!
கண்ணாம்பாவுக்கு ஆந்திர மாநிலம் மேல் கோதாவரி ஜில்லா எல்லூர் சொந்த ஊர். பசுபலேடி என்பது கண்ணாம்பாவின் வம்சப் பெயர்.
1910-ல் பிறந்தவர். பதிமூன்று வயதில் ராஜராஜேஸ்வரி நாடக சபா மூலம் அறிமுகமாகி, புராணகால சாவித்ரி, அனுசுயாவாக நடிப்பில் சக்கை போடு போட்டவர்.
1935-ல் தெலுங்கில் ஸ்டார் கம்பைன்ஸின் ஹரிச்சந்திரா வெளியானது. அதில் சந்திரமதியாக கண்ணாம்பாவின் சினிமா கணக்கு தொடங்கியது.
‘கிரஹலட்சுமி ’ சித்தூர் வி.நாகையாவின் முதல் படம். நாகையா - கண்ணாம்பா ஜோடியின் நடிப்பாற்றல் கிரஹலட்சுமியைத் தென்னகம் முழுவதும் ‘பாகுபலி’யாக்கியது. தமிழ் டாக்கிகள் வசூல் குவிக்கவும் அதே ஜோடி அவசரமாகத் தேவைப்பட்டது.
வசனமும் உச்சரிப்பும்
அடுத்துப் புகழின் உச்சியில் அமர்த்தியது முருகன் டாக்கீஸாரின் ‘அசோக்குமார்’. எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகத்தான வெற்றிச் சித்திரம். கண்ணாம்பா அதில் மாறுபட்ட வில்லி.
வசனகர்த்தா இளங்கோவன். கண்ணாம்பாவுக்குச் செந்தமிழில் பேசி நடிக்கப் பயிற்சி அளித்தார். கண்ணாம்பா வசனங்களைத் தெலுங்கில் எழுதி வாசித்து, வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் பாகவதருக்கே சவால் விட்டார். போனஸாகப் படத்தில் அவரது பரத நாட்டியமும் உண்டு.
கண்ணாம்பாவுக்கு நடனம் தெரியாது. நேரம் ஒதுக்கி அபிநயம் பிடித்து முடிந்த வரையில் முத்திரை பதித்தார்.
அசோக்குமாரில் நடித்த அனுபவம் கண்ணாம்பாவுக்கு நன்றாகத் தமிழில் பேச வந்தது. தொடர்ந்து கண்ணாம்பா ஜூபிடரில், கண்ணகியாக வலம் வர மெனக்கெட்டு உழைத்தவர் இளங்கோவன். அவரது படைப்பாற்றலில் தமிழ் எத்தனை தித்திப்பு என்பதை கண்ணகி திகட்டத் திகட்டக் காட்டியது.
தமிழ்த் திரையில் முழுமையானதொரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கண்ணகி பாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்த முதல் பெண் கலைஞர் கண்ணாம்பா! எத்தனை முதல் தரமான அக்மார்க் நடிப்பு!
தமிழ் நடிகையர் வியக்கும் அளவுக்கு, ஒரு தெலுங்கு நட்சத்திரம், அனல் வீசும் தமிழ் உரையாடலைப் பேசி நடித்த ஆவேசமும் எழுச்சியும் அபாரம்!
சூப்பர் ஹிட் ஜோடி
கண்ணகியில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ. சின்னப்பா சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார். அவர்களது அடுத்த சூப்பர் ஹிட் மங்கையர்க்கரசி.
சுமார் அரை டஜன் படங்களில் பி.யூ. சின்னப்பா-கண்ணாம்பா ஜோடி இணைந்தது. கண்ணாம்பாவின் சொந்தத் தயாரிப்பான தமிழ் ஹரிச்சந்திராவில் நாயகன் பி.யூ. சின்னப்பா. தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி அவர்கள்!
கதையின் மையமாக கண்ணாம்பா
கண்ணாம்பாவுடைய நடிப்பாற்றலைக் காசு பண்ண ஜூபிடர் தயாரித்த துரிதச் சித்திரம் மஹா மாயா. தமிழில் ஒரு நடிகைக்காகக் கதை எழுதப்பட்டது அதுவே முதல் முறை.
பின்னாள்களில் சாவித்ரி, கே.ஆர். விஜயாவுக்காக அநேக கதாசிரியர்கள் பேனா பிடித்ததற்குப் பிள்ளையார் சுழி கண்ணாம்பா!
கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பாவை இன்று வரை மறக்க முடியாமல் செய்தவை நடிகர் திலகத்துடன் அவர் போட்டி போட்டு நடித்த மனோகரா, மக்களைப் பெற்ற மகராசி,வணங்காமுடி, உத்தமபுத்திரன், காத்தவராயன், படிக்காத மேதை, புனர் ஜென்மம், படித்தால் மட்டும் போதுமா போன்றவை.
அவற்றில் ‘மனோகரா’ மிக முக்கியமானது. மாதரசி பத்மாவதியாக கண்ணாம்பாவின் நடிப்பு மு.கருணாநிதியின் எழுத்தில் உச்சம் தொட்டது.
‘சிவாஜி கணேசனும் கண்ணாம்பாவும் தாய்- மகன் பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.’ என்று ஆனந்தவிகடன் ‘மனோகரா’வுக்கு மகுடம் சூட்டியது.
‘பொறுத்தது போதும்! பொங்கியெழு!’ என்று கண்ணாம்பா பேசிய வசனம் தலைமுறைகளைக் கடந்தும் ஜீவனோடு வாழ்கிறது!
எம்.ஜி.ஆரின் அம்மாவாக கண்ணாம்பா நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களும் சூப்பர் ஹிட் ஆயின. அவை புரட்சி நடிகருக்கு பொற்காலத்தை உருவாக்கின.
கடைசி நாட்கள்
கண்ணாம்பா ராஜராஜேஸ்வரி அம்மனின் பக்தை. அதே தெய்வத்தின் பெயரில் சொந்த சினிமா கம்பெனி தொடங்கினார். அவரது கணவர் நாகபூஷணம் டைரக்டர்.
கண்ணாம்பாவின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக அதே கதையம்சத்துடன் ஏவி.எம்.மின் படங்கள் வெளி வந்தன. தொடர்ந்து நிறைய நஷ்டம் வரவே எல்லாரையும் போல எம்.ஜி.ஆரை நாடிச் சென்றார்.
கண்ணாம்பா தயாரித்த ‘தாலி பாக்கியம்’ எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி நடித்த பிரபல தோல்விப் படம். தேவர் பிலிம்ஸ் பொறுப்பில் குறுகிய காலத்தில் உருவாகி வந்தது. எதிர்பாராமல் கண்ணாம்பாவைப் புற்றுநோய் தின்னத் தொடங்கியது. அவர் காலமான பின்பு வெளி வந்தது.
ரா.கி. ரங்கராஜன் குமுதத்தில் எழுதிய ‘இது சத்தியம்’ கண்ணாம்பாவின் நடிப்பாற்றலுக்கான கடைசி அத்தியாயம். சரவணா ஃபிலிம்ஸ் தயாரிப்பு. கே. சங்கர் இயக்கியது.
‘சர்வாதிகாரிப் பாட்டியின் குணத்தைச் செவ்வனே புரிந்துகொண்டு, தண்ணீருக்கு வெளியே வாழும் எட்டு கை ஆக்டோபஸாகக் கம்பீரத்துடன் கண்ணாம்பா நடித்திருக்கிறார்’ என்று குமுதம் தன் விமர்சனத்தில் குதூகலித்திருந்தது.
[ நன்றி: https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/62329-.html ]
தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்
கண்ணாம்பா: பசுபதிவுகள்

1 கருத்து:
அருமையான பார்வை
கருத்துரையிடுக