சனி, 3 அக்டோபர், 2015

ம.பொ.சி -2

மீசைக்காரர் சிவஞானம் 
கொத்தமங்கலம் சுப்பு 

அக்டோபர் 3
. ம.பொ.சி. அவர்களின் நினைவு தினம்.



‘ சாட்டை’  என்ற இதழ் 1956-இல் ம.பொ.சி அவர்களின் பொன்விழா மலர் ஒன்றை வெளியிட்டது. அப்போது கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அம்மலரில் எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறேன். 

சிலப்பதிகாரம் திருக்குறள் ஆகிய
  செல்வம் தந்தவர் சிவஞானம்
கலப்படமில்லாத் தமிழைப் பேசக்
  கற்றுக் கொடுத்தவர் சிவஞானம் .

அடுக்கு மல்லிகைப் பூவைப்போல
   அழகும் வாசமும் சேர்ந்திடவே
அடுக்குச் சொல்லால் தமிழன்னைக்கு
    அழகைச் சேர்த்தவர் சிவஞானம்.

தாயை மறந்து கட்சியைப் பேசும்
   தலைவர் இல்லை சிவஞானம்
தாயாம் தமிழையும் தன்னையும் மறவா
   சாதா மனிதன் சிவஞானம்.

வீரத்தமிழர் பேரை வளர்க்கும்
   மீசைக்காரர் சிவஞானம்
நாரத்தம் பழம்போல் மணக்குந்தமிழ்
   நடையை உடையவர் சிவஞானம்

கரும்பு கிடைச்சும் கடிச்சுத் தின்னா 
   கன்னித் தமிழன் சிவஞானம்
விரும்பி யிருந்தா கிடைக்கும் பதவியை
   வீசியெறிந்தவர் சிவஞானம் 

பாட்டும் கூத்தும் அரசியலுக்குப் 
   பகைமை என்று சொல்லாமல்
நாட்டுக் கின்பம் தருபவர் எல்லாம்
   நல்லவர் என்றே சொல்லிடுவார்

ஓட்டைக் கேட்கும் கூட்டத்திலுமே
   ஒருவரையும்தான் வையாமல்
நாட்டுக்குழைக்கும் கட்சியிலுள்ள 
   நல்லதை மதிக்கும் சிவஞானம். 

நன்னியை மறவாத் தமிழன் என்று
   நாமும் பெருமை கொண்டிடவே 
கன்னித் தமிழின் தொண்டன் தமக்குப் 
  பொன்னில் ஆடை போற்றிடுவோம். 

[ நன்றி : சாட்டை, தமிழம் வலை ]

தொடர்புள்ள பதிவுகள்:

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அற்புதவரிகள்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-