வியாழன், 18 பிப்ரவரி, 2016

ராஜாஜி -3

பரம்பொருள்

ராஜாஜி 

பிப்ரவரி 18. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தினம்.

நான் சென்னையில், தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யின்  ஒரு மாணவன் என்பதில் மிகவும் பெருமை உள்ளவன்.

  நான்  அப்போது சில காலம் நடத்திய ஒரு கையெழுத்துப் பத்திரிகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சிறப்பிதழும் வெளியிட்டேன்! ;-)

இதோ அதன் முகப்பு:


1950-இல் ராஜாஜி ‘கல்கி’ யில் தொடர்ந்து ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற கட்டுரைத் தொடரை எழுதினார்.  நினைவில் உள்ளது. அவற்றைத் தொகுத்து ராமகிருஷ்ண மடம் பின்னர் ஒரு நூலாய் வெளியிட்டது.
அந்த நூல் எனக்கு பிப்ரவரி 26,1953-இல்  ஒரு பரிசாய்க் கிட்டியது!  அப்போது நூலின் விலை ரூ.1-4-0 !

 1950-வரை ராஜாஜியின் வீட்டின் அடுத்தவீட்டில்  தான் ( பஸ்லுல்லா ரோடில்) நாங்கள் குடியிருந்தோம்! பக்கத்து வீட்டுக்காரரின் நூல் எனக்குப் பரிசாய்க் கிடைப்பது ஒரு சுவைதானே!
அந்த நூலிலிருந்து ராஜாஜி எழுதிய முன்னுரையையும், முதல் கட்டுரையையும் இங்கிடுகிறேன்!    [ நன்றி: கல்கி, ராமகிருஷ்ண மடம் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

3 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

bandhu சொன்னது…

மூன்றாம் பக்கத்தைக் காணவில்லை சார். தயவு செய்து அதை பதிவு செய்ய முடியுமா? உங்கள் சேவை எனக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. மிக்க நன்றி!

Innamburan S.Soundararajan சொன்னது…

படித்துத் தெளிந்து சேமித்துக்க்கொண்டேன். உங்கள் பணி மகத்தானது, ஐயா.

கருத்துரையிடுக