செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சங்கீத சங்கதிகள் -81

ஆபிரகாம் பண்டிதர் - 1


ஆகஸ்ட்  2. ஆபிரகாம் பண்டிதரின் பிறந்த நாள் .

தமிழிசை ஆய்வு வரலாற்றில் இராவ்சாகிப்  ஆபிரகாம் பண்டிதர் ( 1859 -1919) ஒரு தாரகை.  ஆய்வுத் தொடக்கம்.

முதலில் திண்டுக்கல் வயலின் வித்துவான் சடையாண்டி பத்தரிடமும், பிறகு தஞ்சாவூர் இராமசாமி கோவில் நாகசுர வித்துவானிடமும் அவர் இசை கற்றார். சித்த மருத்துவத்தில் வல்லவராய்த் திகழ்ந்த பண்டிதர் முதலில் ஓர் இசை மாநாட்டைத் தன் சொந்த செலவில்  நடத்தினார். இத்தகைய பல மாநாடுகளுக்குப் பின், தன் ஆய்வுகளை “ கருணாமிர்த சாகரம்” என்ற 1000 பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நூலில் (1917) எழுதினார்.  (சுருளி மலை  கருணானந்த  முனிவரிடம் தான் அவர் சித்த மருத்துவம் கற்றார்.)

அவருடைய “கருணாமிர்த சாகரத் திரட்டு” என்ற நூலிலிருந்து சில பக்கங்கள் இதோ!

தென்னிசையின் முன்னோடிகளாய்த் திகழ்ந்த புரந்தரதாசர், தியாகராஜர் போன்றோர் இயற்றிய சில பாடல்களின் மெட்டுக்களில்  90-க்கு மேற்பட்ட தமிழ்ப் பாடல்களை அவர் இயற்றியுள்ளார். உதாரணமாக, அவருடைய “கருணாமிர்த சாகரத் திரட்” டில் வழக்கமான சரளி வரிசை போன்றவற்றிற்குப் பின்  புரந்தரதாசரின் முதல் இரண்டு கீதங்கள் ( ஸ்ரீ கணநாத, குந்த கௌர)  அப்படியே உள்ளன. இசை மரபிற்கு அவர் கொடுத்த மதிப்பு இது.

 மூன்றாவதாய் இன்றும் பல மாணவர்கள் கற்கும் புரந்தர தாசரின் மலஹரி ராக  “ பதுமநாபா பரம புருஷா” என்ற கீதத்தின் மெட்டிற்கேற்பப் பண்டிதர் “ உன்னத வாசா” என்று தொடங்கும் தமிழ்க் கீதம் இயற்றி வெளியிட்டுள்ளார்.  அதைக் கீழ்க்கண்ட பக்கங்களில் பார்க்கலாம்.

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக