செவ்வாய், 20 செப்டம்பர், 2016

டி. ஆர். ராஜகுமாரி - 1

டி.ஆர்.ராஜகுமாரி 
அறந்தை நாராயணன்செப்டம்பர் 20.  டி.ஆர். ராஜகுமாரியின் நினைவு தினம்.

சென்னையில்  மாம்பலத்தில் வசித்த பல நடிகர்கள், நடிகையருள் இவரும் ஒருவர். இவர் வீட்டு மாடியிலிருந்து  ( ஹபிபுல்லா ரோட்?)  மாஞ்சா போட்ட  அழகான பட்டங்கள்  பறக்கப்  படுவதும் , அவற்றை ’அறுக்க’ நண்பர் பட்டாளம் ‘பதில்’ பட்டங்களைப் பறக்க விட்டதும் நினைவுக்கு வருகிறது !

பாண்டி பஜாரில்  அவர் கட்டிய  ‘ராஜகுமாரி’ தியேட்டரில் நாங்கள் பார்த்த தமிழ், ஆங்கிலப் படங்கள் ஏராளம்!   பல வருடங்களுக்கு அந்த பஸ் ஸ்டாண்ட் ‘ ராஜகுமாரி பஸ் ஸ்டாண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது!


[ நன்றி: தினமணி கதிர் ]
தொடர்புள்ள பதிவுகள்:
நட்சத்திரங்கள்

9 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

S.V.V. சொன்னது…

..அந்த வடஇந்திய யாத்திரை விளம்பரம்... வெகு சுவாரஸ்யம்....

உங்கள் பதிவுகள் சர்க்கரைப் பொங்கல் என்றால், இது மாதிரியான சங்கதிகள் சுவையான முந்திரிப் பருப்புகள் தான்... (என்ன இந்த முறை ஒரே ஒரு முந்திரிதான்...)

பெயரில்லா சொன்னது…

சிறு வயதிலே சில ஆண்டுகள் 'புது' மாம்பலத்திலே (தி. நகர்) வசித்ததிலே, நடிகர்களையும் அவர்கள் இல்லங்களையும் காண்பதும், விருந்தினருக்கு ஸ்டார் இல்லங்களைக் காட்டுவதும் சுவையான அனுபவங்கள்...

ராஜகுமாரி தியேட்டர் கட்ட ஆரம்பித்ததிலிருந்து, திறப்பு விழா (ப்ரிமியர்) வரை ஒரே பர பரப்புத்தான்!

முதல் படம் எம். என். நம்பியார் நடித்த திகம்பர சாமியார். எவ்வளவு பெரிய வரை பட விளம்பரம் (போஸ்டர்) என்று வியந்தோம்! வாஸன் சந்திர லேகாவுக்காக முரசு நடனத்தையும் காட்டி போஸ்டர்களைப் பெரியதாய்ப் படைக்கும் விளம்பர உத்தியைக் கையாண்டார். பிறர் பின்பற்றினர்!

பசுமையாகப் பழைய நினைவுகளைக் கொணர்வதிலே, பழைய எழுத்தின் வன்மையை அசை போட வைப்பதிலே, பசுபதிக்கு நிகர் இல்லை என்பேன்...அரசி

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, அரசி. திகம்பர சாமியாருக்குப் பின் ‘ ராஜா விக்ரமா’ ...கெம்பராஜ் நடித்தது. கெம்பராஜின் வீடு ( குதிரையுடன்) வெங்கடநாராயணா ரோடில் இருந்தது என்று நினைவு.

பெயரில்லா சொன்னது…

அப்படியா? அவர் குதிரை வைத்திருந்தாரா, அல்லது அந்த வீதியிலே குதிரைகள் வரிசையாய் அணி வகுத்து ஓடுவது போல் வளைந்தமைந்த வராந்தா கைப் பிடிச் சுவரைக் கொண்ட வீட்டைப் பற்றிச் சொல்கிறீரா? அப்படியென்றால், எம். கே. டி அந்த வீட்டிலிருந்த போது, அவரை அந்த வராந்தாவிலே சந்தித்ததுண்டு. "பாப்பா!" என்று அழைத்தாலும், பெரியவர்களுக்கு அளிக்கும் மரியாதை அவர் பேசும் சொற்களிலும் இனிதே ஒலிக்கும்...

Pas S. Pasupathy சொன்னது…

குதிரையில் அவர் மகள் வீட்டின் முன்புறம் சவாரி செய்து, குதிரையைப் பழக்குவதைப் பார்த்திருக்கிறேன். எம்.கே.டி எங்கள் தெருவில் இருந்த எம்.ஏ.வேணு வீட்டிற்கு ரிக்‌ஷாவில் வருவதை ( சிவகாமி படம் சமயம்) பார்த்திருக்கிறேன். எம்.கே.டி எந்த வீட்டில் இருந்தார்? இப்போதைய தி.நகர் “சாரதா மடம்” அப்போது எம்.கே.டி அல்லது அவர் சோதரர் கோவிந்தராஜ பாகவதர்(?) வீடோ, குதிரை லாயமோ என்று சொல்வர்.

பெயரில்லா சொன்னது…

நீர் கூறும் சாரதா மடம் எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியாது! அங்குதான் இருந்திருக்க வேண்டும். வீடு என்பது மட்டுமல்ல. அந்த வராந்தாவில் அவர் அமர்ந்திருப்பதையும் சில முறை பார்த்திருக்கிறேன்.

பெரிய நடிகரோடு பேசிக்கொண்டிருக்கிறோமென்ற பர பரப்பு இருந்தாலும், அவருடைய அழகிய குரலும், அதில் ஒலித்த கம்பீரமும் மறக்க முடியவில்லை. இவரையா சிறைச்சாலைக்கு அனுப்பினார்கள், என்ற உணர்வுஅவரைப் பார்க்கையில் மேலோங்கும். ஆகையினால்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பளிச்சென்ற நினைவு!

வரிசையாக ஓடிக்கொண்டிருக்கும் அலுமினம் பெய்ன்ட் அடித்த குதிரைகள். பச்சை நிறம் அதை சுற்றி. மரக் கைப்பிடியும் உண்டென்று நினைக்கிறேன்...

Pas S. Pasupathy சொன்னது…

சாரதா மடம் தற்போதைய முகவரி 15/7 , ராகவையா ரோட். கோபதி நாராயணசாமி சாலை + ராகவையா சந்திப்பின் பக்கம் . ( பெண்கள் விடுதியாய் இயங்குகிறது) . ராமகிருஷ்ணா மடத்தின் பொறுப்பு. இப்போது இதற்குப் பக்கத்தில் ராகவேந்திர மடம் இருக்கிறது.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

என் மனம் கவர்ந்த இரண்டு நடிகையருள் முதல்வர். அடுத்தவர் சாவித்திரி.

கருத்துரையிடுக