இராமாயணம் - 5
ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம்
ஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம்
சேண் உற நீண்டு, மீண்டு,
செவ்வரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானா விதம்
புரண்டு, இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
அம்மொழி புகறலோடும்,
‘நாண் இலள்; ஐயன், நொய்யள்;
நல்லளும் அல்லள் ‘என்றான்.
செவ்வரி சிதறி, வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து, நானா விதம்
புரண்டு, இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
அம்மொழி புகறலோடும்,
‘நாண் இலள்; ஐயன், நொய்யள்;
நல்லளும் அல்லள் ‘என்றான்.
[ சேண் உற நீண்டு மீண்டு - பார்வை நெடுந்தூரம் செல்லுமாறு நீண்டு அப்புறம் செல்ல இடமின்றித் திரும்பி;
செவ்வரி சிதறி - சிவந்த கோடுகள் பரவி;
வெவ்வேறு ஏண் உற மிளிர்ந்து - பலவகைச் சிறப்புப் பொருந்தப் பிறழ்ந்து;
நானாவிதம் புரண்டு இருண்ட வாள்கண் - பல் வேறு வகையாய் மாறித் திரும்பி இருள் போல் கருமைநிறம் கொண்ட வாள் போலும் கண்களோடு;
பூண்இயல் கொங்கை அன்னாள் - அணிகலன் அணிந்த மார்பகங்களை உடைய அச்சூர்ப்பணகை;
அம்மொழி புகறலோடும் - அச்சொற்களைக் கூறியவுடன்;
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றான் - இவள் வெட்கம் இல்லாதவள் பெரிதும் இழிந்தவள். நல்லவள் அல்லாதவள் என்று இராமன் நினைத்தான்.]
தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்
அம்மொழி புகறலோடும் - அச்சொற்களைக் கூறியவுடன்;
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றான் - இவள் வெட்கம் இல்லாதவள் பெரிதும் இழிந்தவள். நல்லவள் அல்லாதவள் என்று இராமன் நினைத்தான்.]
தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக