ஞாயிறு, 17 ஜூன், 2018

1096. பாடலும் படமும் - 34

இராமாயணம் - 6
ஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்



[ ஓவியம் ; கோபுலு ]


காணா இது, கைதவம்
     என்று உணராள்;
பேணாத நலம்
     கொடு பேணினளால்-
வாழ்நாள் அவ்
     இராவணன் மாளுதலால்,
வீழ் நாள் இல் அறம்
     புவி மேவுதலால்




 [ அவ் இராவணன் வாழ்நாள் - அந்த இராவணனின் ஆயுட் காலம்;
மாளுதலால் - முடிய இருப்பதனாலும்; 
வீழ் நாளில் - அவன் மரணமுறுகிற நாளில்; 
அறம் புவி மேவுதலால் - தருமம் பூமியில் செழிக்க இருப்பதனாலும்; (சீதை); 
காணா - பொன்மானைக் கண்டு; 
'இது கைதவம்' என்று உணராள் - 'இது வஞ்சனை வேடம்' என்று உணராதவள் ஆனாள்;
பேணாத - ஆதரித்தற்கு ஒவ்வாத; 
நலம் கொடு பேணினள் - அழகில் ஆர்வம் கொண்டு (மாயமானை) விரும்பி நின்றாள். (ஆல் - அசை) ]

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: