ஞாயிறு, 1 ஜூலை, 2018

1107. பாடலும் படமும் - 36

இராமாயணம் - 8
கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம்


[ ஓவியம்: கோபுலு ]


ஓடை வாள் நுதலினாளை
      ஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர்
      ஆடக நவ்வி ஆனார்;
வாடைஆய், கூற்றினாரும்,
      உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உருக்
      கொளக் கிடைத்த அன்றே?
    
[ ” மாரீசனார் - (முன்பு) மாரீசனார்; ஓடை வாள் நுதலினாளை -
(என்னை வருத்த) பொன்பட்டம் அணிதற்குரிய நெற்றியையுடைய சீதையை;
ஒளிக்கலாம் உபாயம் எண்ணி - வஞ்சனையால் கவர்ந்து மறைப்பதற்குரிய
வழியை ஆலோசித்து; நாடி - அறிந்து; ஓர் ஆடக நவ்வி ஆனார் - பொன்
மயமானதொரு மான் வடிவம் கொண்டார்; கூற்றினாரும் - (இப்பொழுது)
யமனாரும்; வாடை ஆய் - (என்னை வருத்த) வாடைக்காற்றாக;உருவினை மாற்றி வந்தார் -தன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்தார்;கேடு சூழ்வார்க்கு -கெடுதி செய்ய நினைப்பார்க்கு;வேண்டும் உருக்கொளக் கிடைத்த அன்றே -வேண்டிய
வடிவங்களெல்லாம் எடுக்க முடிந்தன அல்லவா?”  (என்னே கொடுமை
என்றவாறு இராமன் வருந்துகிறான் ) 

தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்

2 கருத்துகள்:

கருத்துரையிடுக