திங்கள், 22 அக்டோபர், 2018

1169. பாடலும் படமும் - 48

நாத போதகன் 


[ ஓவியம்: எஸ்.ராஜம் ]அக்டோபர் 21. முத்துசாமி தீக்ஷிதரின் நினைவு தினம்.

வைத்ய நாதன் செல்வன் (1) பேரில் 
. வாழ்ந்த நாத போதகன்
சத்தி பூஜை வேத மந்த்ர 
. சாத னைகள் செய்தவன்
வித்த ரித்த ராக பாவம் 
. மேவு வீணை வித்தகன்
முத்து சாமி தீக்ஷி தர்க்கு 
. முன்ன ரென்வ ணக்கமே !   ( பசுபதி ) 

(1)  வைத்தீஸ்வரன் கோவிலில் முருகன் பெயர்: முத்துக் குமரன். அவன் பெயரைத்தான் தீக்ஷிதருக்கு அவர் பெற்றோர் வைத்தார்கள்.  தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக