புதன், 26 டிசம்பர், 2018

1201. சென்னையில் மார்கழி : கவிதை

சென்னையில் மார்கழி
பசுபதி
[ சிவன் ( இடது பக்கத்தில் இரண்டாவது) ] 


மார்கழி காலையில் பாபநாசம் சிவனின் பஜனை கோஷ்டி போன்ற பல குழுக்கள் கபாலி கோவிலைச் சுற்றி வரும்.   சென்னை போகும்போது , நானும் சில முறை சென்றிருக்கிறேன். அருமையான அனுபவம்!

சபாக் கச்சேரிகளோ --- கேட்கவே வேண்டாம்! இல்லை, இல்லை! கேட்கத்தான்  வேண்டும்! :-)


கனமும் நயமுமாய் பிருகா கமகமும்
. களிப்பை இறைத்திடும் பண்ணிசை
இனிய 'சரிகம பதநி'ச் சுரங்களை
. இசைக்கும் இளையரின் தீங்குரல்
பனியின் குளிர்ச்சியில் இறையைப் பணிந்திடும்
. பஜனைக் குழுக்களின் ஊர்வலம் 
கனலின் பொறிகளாய் கடங்கள் முழவுகள்
. கலந்து வழங்கிடும் போஜனம்  

தொடர்புள்ள பதிவுகள் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக