புதன், 25 டிசம்பர், 2013

சங்கீத சங்கதிகள் - 22

சங்கீத சீசன் : 1954 - 2






முந்தைய பதிவு:

( தொடர்ச்சி) 

‘ஆடல் பாடல்’ என்ற தலைப்பில்  பேராசிரியர் ‘கல்கி’ விகடனில் பல கலை விமர்சனங்களை முன்பே எழுதியிருந்தாலும், ‘கர்நாடகம்’ என்ற புனைபெயருடன் அவர் ‘ஆடல் பாட’லை எழுதத் தொடங்கியது 1933-இல் தான் என்கிறது ‘விகடன்’ நூல் “காலப் பெட்டகம்”. ’கல்கி’ 1940 -இல் விகடனை விட்டுப் போனபிறகும், ‘ஆடல் பாடல்’ கட்டுரைகள் தொடர்ந்து விகடனில் பல வருடங்கள் வெளியாகின. (ஆனால், அவை யாரால்/எவர்களால் எழுதப் பட்டன என்பது எனக்குத்  தெரியவில்லை! )

இதோ 54- சங்கீத சீசன் பற்றிய இரண்டாவது நீண்ட (11 -பக்கங்கள் !)  ‘ஆடல் பாடல்’ கட்டுரை. ‘பொக்கிஷம்’ என்று ஒரு அருந் தொகுப்பை விகடன் அண்மையில் வெளியிட்டது போல், இத்தகைய எல்லாக் கட்டுரைகளையும், படங்களையும் சேர்த்து, ‘விகடன்’ ஓர் ‘ ஆடல் பாடல் பொக்கிஷம்’ என்ற தொகுப்பை வழங்கினால் அது  விகடன் செய்யும் பெரும் தொண்டாகும் என்பது என் கருத்து, வேண்டுகோள். சங்கீதப் பிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்! 













[ நன்றி: விகடன் ]
( தொடரும் ) 

 [  If you have trouble reading from an image, double click and

 read comfortably. Or right click on each such image and choose

 'open image in a new tab' , Then in the new tab , and, if

 necessary, by using browser's  zoom facility to increase the

 image size also,  can read with comfort. One can also download

 each image to one's computer and then read with comfort using

 browser's zoom facility ]

3 கருத்துகள்:

Dr.V.K.Kanniappan சொன்னது…

அருமையான செய்திகள். நினைவலைகள். நன்றி. வாழ்த்துகள்.
டாக்டர்.வ.க.கன்னியப்பன்

bandhu சொன்னது…

இன்றைய ஜாம்பவானான ஆர் கே ஸ்ரீகண்டன் பற்றி ஜூனியர் ஸ்லாட்டில் இவர் மட்டுமே தேறுவார் என்று படித்தபோது முறுவலிக்காமல் இருக்க முடியவில்லை!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. அனைத்தும் பொக்கிஷம்.

sapthagireesan சொன்னது…

1954-Music season-Many thanks to you for preserving this issue and releasing it to the Music lovers. A notable absence among the Seniors was Chembai whose Bell-Metal Voice had suffered a temperory phase of lull only to be regained in 1962-63. Also happy to see photos of young faces of many doyens of today !