இராமாயணம் - 16
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்
'சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?'
[ சினத்தொடும் கொற்றம் முற்றி- சினத்தோடு நின்று
வெற்றியை முழுமையாக எய்தி;
இந்திரன் செல்வம் மேவி - இந்திரனுடைய செல்வத்தை அடைந்து;
நினைத்தது முடித்து நின்றேன் - நினைத்ததைச் செய்து முடித்து நின்ற யான்;
நேரிழை ஒருத்தி நீரால் - (இப்போது) பொருந்திய அணிகலன்களை அணிந்த (சீதை என்கின்ற) ஒருத்தியின் காரணமாக,
( அந்நிலையிழந்து);
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் - எனக்கு நீ செய்யத் தக்க இறுதிக் கடன்களை எல்லாம்;
ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் - வருந்தி வருந்தி உனக்கு யான் செய்யும் நிலைமையை அடைந்தேன்;
என்னின் யார் உலகத்து உள்ளார்?- என்னைவிட இழிந்தவர்கள் இவ்வுலகத்து யாருளர்?]
தொடர்புள்ள பதிவுகள்:
பாடலும், படமும்
யுத்த காண்டம், இராவணன் சோகப் படலம்
[ ஓவியம்: கோபுலு ] |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக