ஞாயிறு, 4 நவம்பர், 2012

தீரக்கனல் : கவிதை

தீரக் கனல்
பசுபதி

அம்மன் தரிசனம்’ 2001- ஆம் ஆண்டு தீபாவளி மலரில்  வெளிவந்த
ஒரு கவிதை.நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க 
அரிமாவென  எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்; 
பரியோட்டிட வருவேன்துணை எனும்பாமையை நோக்கிச் 
சிரித்தேசரி என்றானவன் திரிகாலமும் தெரிந்தே.  (1) 

மாபாதகன் அசுரேசனின் மாயக்கொடும் போரில்
கோபாலனும்  சோர்வுற்றபின் குதிரைக்கயி  றேந்திக்
கோபாக்கினி  நிறையம்பினால் கொடுங்கோலனை  மாய்த்த 
தீபாவளி வீராங்கனை சீபாமையை மறவோம்.   (2) 

அறவாழ்வினில் அரைப்பங்குடன் ஆணுக்கொரு நிகராய்ப்
பெரும்போரினில் நரகன்வதம் பெண்மைக்கொரு வெற்றி;
விறலாயிழை வில்லேந்திய வீரச்செயல் போற்றும் 
திருநாளொளிர் தீபச்சுடர்  தீரக்கனல் அன்றோ?  (3).    


~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்6 கருத்துகள்:

KAVIYOGI VEDHAM சொன்னது…

மிக அற்புதம் நண்பரே.உங்கள் படம் அதைவிட
அழகு.வாழ்க,
யோகியார் வேதம்

சு.பசுபதி சொன்னது…

நன்றி, கவியோகி வேதம் அவர்களே.

Soundar சொன்னது…

சத்தியபாமை இடது கைப்பழக்கம் உடையவர் என்ற குறிப்பு இலக்கியத்தில் இருக்கிறதா? சித்திரத்தில் காட்டப்பட்டுள்ள செய்தியை வைத்துக் கேட்கிறேன். அன்றி இவர் இருகைகளாலும் (ambidextrous) அம்பெய்த வல்லவரா?

சௌந்தர்

சு.பசுபதி சொன்னது…

@Soundar

நான் படித்ததில்லை. ( ‘சவ்யசாசி’ அல்லள் என்றும் நான் படித்ததில்லை! )

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Subbaiyar Ramasami சொன்னது…

படமும் அதிகரிணிப் பாடலும் அழகு

இலந்தை

கருத்துரையிடுக