செவ்வாய், 15 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 11

வான சஞ்சாரம் 

இசைத்தேனீ 

[ வி.வி.சடகோபன் ] 


’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் பல அருமையான இசை, சினிமா விமரிசனங்களை  எழுதியதை யாவரும் அறிவர்.

விகடனை விட்டு விலகி 41-இல் ‘கல்கி’ இதழைத் தொடங்கிய ‘கல்கி’ அவர்கள் அந்த இதழிலும்  தன் இசைப்பணியைப் பலவிதங்களில் ... எழுத்தாளராய், ஆசிரியராய்..தொடர்ந்தார். 1938-இல் சென்னை வானொலி தொடங்கியபின், ரேடியோவில் வரும் கச்சேரிகளின் விமரிசனங்களும் ‘கல்கி’ இதழில் ‘வான சஞ்சாரம்’ என்ற தலைப்பில் வரத் தொடங்கின.  ( இதை எழுதிய ‘இசைத்தேனீ’ யாரென்று எனக்குத் தெரியவில்லை.)

[ காரைக்குடி சாம்பசிவ ஐயர் ]

எடுத்துக்காட்டாக, 40-களில் வந்த இரு கட்டுரைகள் கீழே உள்ளன. காரைக்குடி சாம்பசிவ ஐயர், துறையூர் ராஜகோபால சர்மா, வி.வி.சடகோபன், செங்கோட்டை கங்காதரன் போன்றோரின் ரேடியோக் கச்சேரிகளைக் குறிப்பிடும் இக் கட்டுரைகள் ரேடியோவின் இசைப் பணிக்கும், விமரிசனக் கலையின் வளர்ச்சிக்கும்  நல்ல எடுத்துக் காட்டுகள்.




இரண்டாம் கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும் செங்கோட்டை கங்காதரன் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள். இவர் எஸ்.ஜி.கிட்டப்பாவிற்கு மருமான். சென்னையில் , வாணிமகாலில் 50-களில் நடந்த ‘பாரதி விழாக்களில்’ இவர் பாடிக் கேட்டிருக்கிறேன். 

இதோ செங்கோட்டை கங்காதரனின் ஒரு படம்:

[ செங்கோட்டை கங்காதரன் ]

 இவர் 1944-இல் ஸ்ரீமதி கிருஷ்ணவேணி அம்மையாரை வரதக்ஷிணை இன்றிக் கதர்த் திருமணம் புரிந்து கொண்டார். 

 இவருடன் கூட வரும் செங்கோட்டை    சகோதரிகளும் அருமையாகப் பாடுவார்கள். அவர்கள் ஒரு பாரதி விழாவில் , “’அன்னை! அன்னை! ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை! “ என்று 50-களில் பாடியது என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது 

பின் குறிப்பு:

இக்கட்டுரையைப் படித்த நண்பர் வி.ஐயா அவர்கள் “இசைத் தேனீ என்ற பெயரில் எழுதியவர் பிரபல இசை,நடன விமர்சகர் ஈ.கிருஷ்ண ஐயர் என்று தெரிவிக்கிறார்.  நடனத்திற்குச் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தைக் கொடுத்ததில் கிருஷ்ண ஐயரின் பங்கு அதிகம். 

[ நன்றி: கல்கி]


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

ரங்கன் சொன்னது…

செங்கோட்டை கங்காதரன் -

என் அம்மாவின் பெரிய தகப்பனார் ' பட்டம்மா ( என் தாயார் பெயர் பட்டம்மாள் ) உன்னை செங்கோட்டை கங்காதரனிடம் பாட்டு கத்துக்க ஏற்பாடு பண்ணப் போறேம்மா - அப்புறம் நீயும் இன்னொரு பட்டம்மாளா கர்நாடக உலகில் கொடி கட்டி பறக்க போகிறாய் ! ' என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டாராம். அவர்கள் அப்போது ராணிப்பேட்டையில் இருந்தனர் - இதற்காக சென்னை வந்து தங்குவதற்கு கூட ஏற்பாடுகள் நடந்து விட்டன. ஆனால் என் தகப்பனார் ( மிகவும் பிரமாதமாக பாடுவார் - ஆனால் மேடை கச்சேரிகள் எதுவும் செய்ததில்லை ) கல்யாணம் நடக்கும் முன்பு ஒரு பெண் ஆம்பளை கிட்ட பாட்டு கத்துண்டா ஊர் உலகம் என்ன நினைக்கும் என்று பேசி அதை நிறுத்திவிட்டார். கடைசீ வரைக்கும் என் அம்மா கொடி கட்டித்தான் பறந்தாள் - மடி துணியை 'கொடியில்' .காய போடுவதில்..... !!!!!

Pas S. Pasupathy சொன்னது…

@ரங்கன். நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.