வெள்ளி, 18 மார்ச், 2016

சித்திர விகடன் - 1

ஓவியத் துறையில் விகடன் ! : சில மைல்கற்கள்   விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர், திரு வாசனின் பேரன், பா.சீனிவாசன் மற்றும் ஆனந்தவிகடன் ஆசிரியர் ஆர். கண்ணன் ஆகியோர் டொராண்டோவில் அக்டோபர் 12-ஆம் தேதி, 2015  அன்று  பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சந்திரஹாசம்என்ற கிராபிக் நாவல்  (A Graphic Novel)  ( வரைகலைப் புதினம் ) அறிமுக விழாவில் உரையாற்றினார்கள். 

டொராண்டோவில் உள்ள மார்க்கம் நகரசபையின் சபா மண்டபத்தில் 2015 அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்நூல் அறிமுக விழா இடம்பெற்றது.[ கலாநிதி நா.சுப்பிரமணியன், பா.சீனிவாசன், பசுபதி ] 

[ ஒரு நினைவுப் பரிசு தருகிறார் பா.சீனிவாசன் ] 
தமிழ் நாட்டில் ஓவியத் துறை வரலாறும், வெகுஜனப் பத்திரிகைகளில் அத்துறையின் வளர்ச்சியும்  ஆழமாக ஆய்வு செய்யப் படவேண்டிய  களங்கள். இத்துறையில் விகடனின் பங்களிப்புகள் பற்றியும் நிறையச் சொல்லலாம். அதனால், இந்த நிகழ்ச்சியில்  நான் ”ஓவியத் துறையில் ஆனந்த விகடனின் பங்களிப்பு” என்ற தலைப்பில் **ஒரு சிறிய உரை**யாற்றினேன். நேர அருமை கருதி, விகடனின் ஓவியப் பயணத்தில் ஒரு சில மைல்கற்களை மட்டும் அப்போது எடுத்துரைத்தேன். 

அப்போது நான் குறிப்பிட்ட சில ‘விகடன்’ ஓவியர்கள்:  ( இவர்களைப் பற்றி விவரமாக எழுத வேண்டும். பார்க்கலாம்! ) 

..மாலி ---
 . . . சில்பி . . . 
. . . கோபுலு . . .


**அந்த 9 நிமிஷ உரையின் காணொளிக் காட்சி இதோ: 
[ நன்றி: விகடன், அகில் சாம்பசிவம் ] 


அல்லது
https://youtu.be/4T9qUWR2PkU

விழா நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கட்டுரை :
[ நன்றி: தமிழர் தகவல் ] 

மேலும் சில படங்கள்:

[  படங்களுக்கு நன்றி: திருச்செல்வம்,  அகில் சாம்பசிவம் ]  

2 கருத்துகள்:

King Viswa சொன்னது…

அருமையான பதிவு சார்.

தாமதமானாலும், தக்க சமயத்தில் வந்த பதிவைப் பாராட்டுகிறேன்.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, King Viswa.

கருத்துரையிடுக