சில கடிதங்கள் !
நேற்று ( 28 அக்டோபர், 2017) டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் ‘தீபம்’ நா.பா. பற்றிய ஒரு சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது. மேலே உள்ள படத்தில் உரைகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த முனைவர் அ.கோவிந்தராஜு உளவியல் அடிப்படையில் நா.பா.வின் நாவல்களைப் பற்றிப் பேசினார். எழுத்தாளர் தேவகாந்தன் நா.பா.வின் மணிபல்லவம் தொடர்கதையை ஒரு நாவலாகச் செம்மைப் படுத்திக் கொண்டிருக்கும் தன் நூதன முயற்சியைப் பற்றிப் பேசினார்.
பின்னர், உரைகளைப் பற்றிய சில கருத்துகளை நான் தெரிவித்து, கடைசியில் எனக்கும் நா.பா விற்கும் இருந்த கடிதப் போக்குவரத்தைப் பற்றிப் பேசினேன். ( அப்போது நான் யேல் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்தேன்.) ‘தீப’த்தில் நான் எழுதிய இரு கடிதங்களையும், நா.பா. எனக்கு 69/70-இல் எழுதிய இரு கடிதங்களையும் கீழே பார்க்கலாம்.
( இரண்டாம் கடிதம் எழுதும்போது , தீபத்தில் அடிக்கடி எழுதும் ‘ செங்குளம் வீரசிங்கக் கவிராயர்’ என்பவர் நா.பா. தான் என்பது எனக்குத் தெரியாது! :- )

தொடர்புள்ள பதிவுகள்:
நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு தொகுப்பு ; முனைவர் கோவிந்தராஜு
4 கருத்துகள்:
வணக்கம். நா.பா. என்னும் இலக்கிய ஆளுமையுடன் நீங்கள் வைத்துக் கொண்டிருந்த மடல் வழித்தொடர்பு என்னை வியக்க வைக்கிறது. உங்களைச் சந்தித்ததில் பெருமையடைகிறேன்.
ஐயா, நீங்கள் 70 களில் அமெரிக்காவில் இருந்தது கண்டு மகிழ்ச்சி. நான் அப்பொழுது இந்த உலகில் பிறந்திருக்கவில்லை. ஆனால் நான், என் கணவர் மற்றும் மகனுடன்
அமெரிக்காவின் கனக்டிகட்டில் NewHaven அருகில் இருக்கும் Stratford என்னும் இடத்தில் 15 வருடங்களாகக் குடியிருந்தோம். தற்பொழுது Ohio மாகாணத்தில் Cleveland க்கு அருகில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. அறிஞர்களையும், புலவர்களையும் நேரில் சந்தித்ததோ அல்லது உரையாடும் சந்தர்ப்பங்களோ இது வரை நேர்ந்ததில்லை என்றாலும் தங்களது பதிவுகள் அந்த குறையை தீர்த்து வைக்கின்றன. தங்களது உன்னதமான பணிக்கு என்னைப் போன்றவர்கள் மிகவும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.
அன்புடன்,
திலகா சுந்தர்
நன்றி, திலகா. New Haven இல் 5 வருடங்கள் இருந்திருக்கிறேன்!
என்ன ஒரு அழகான கையெழுத்து. அவர் என்னுடைய ஏழாம் வகுப்பு தமிழாசிரியர். மதுரையில். குறிஞ்சி மலர் எழுத ஆரம்பித்த சமயம்.
கருத்துரையிடுக