வெள்ளி, 13 ஜூலை, 2018

1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11

தேடி வருகிறது கௌரவம்!
தேவன் + கோபுலு
ஆகஸ்ட் 30, 1942-இல்  ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு  சிறுகதைத் தொடரில் இது 4-ஆவது கதை.  கோபுலுவின் கை வண்ணத்தில் 1958-இல் விகடனில் வந்த சித்திரத் தொடரிலிருந்து.[ நன்றி : நண்பர் ‘ரா’ ; விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

13 கருத்துகள்:

Geetha Sambasivam சொன்னது…

எத்தனை முறை படிச்சாலும் அலுக்குமா? விகடன் இறந்த தேவனுக்குச் செலுத்திய மிக அருமையான அஞ்சலி இது சித்திரத் தொடராக வந்தது தான். வேறு எந்த ஆசிரியரையும் விகடன் இப்படி கௌரவித்ததாய்த் தெரியவில்லை. :)))) நான் கதை வடிவிலும் படித்திருக்கிறேன். சித்திரத் தொடராகவும் படித்திருக்கிறேன். கதையில் இருந்த பங்களூரில் வைரத்தைக் கண்டு பிடிக்கச் செல்வதும், முந்திரிப்பருப்புப் பருப்புத் தேங்காயும் சித்திரத் தொடரில் மிஸ்ஸிங், இப்போதைக்கு இது இரண்டும் நினைவில் வந்தது. :))))

Pas Pasupathy சொன்னது…

மிக்க நன்றி. அந்த இரண்டு கதைகளுக்கு வேறு யாரேனும் ஓவியம் போட்டிருக்கிறார்களா என்று தேடுகிறேன்!

Geetha Sambasivam சொன்னது…

இல்லை ஐயா, சித்தப்பாவிடம் (அசோகமித்திரன்) இரண்டும் இருந்தது. நன்றாகப் பார்த்திருக்கேன். சித்திரத் தொடரில் அந்த இரு கதைகளும் வராது. கதைத் தொடர் முதலில் வந்தப்போ ஓவியர் "ராஜூ"னு நினைக்கிறேன். சி.ஐ.டி. சந்துருவில் இருந்து லக்ஷ்மி கடாக்ஷம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்ஸனம், ராஜத்தின் மனோரதம், ஜானகி, கோமதியின் காதலன் என ஒரு பெரிய பட்டியலே சித்தப்பாவிடம் இருந்தது. எல்லாத்தையும் எடைக்குப் போட்டார் எனத் தெரிந்தப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. நாங்க அப்போ ராஜஸ்தானில் இருந்தோம். அதனால் தெரியாமல் போச்சு! மல்லாரி ராவ்கதைகள்னு தேவன் எழுதின எல்லாமும் படிச்சிருக்கேன். மாலதி தான் கொஞ்சம் சுமார் எனத் தோன்றும்.

Geetha Sambasivam சொன்னது…

அலயன்ஸ் வெளியிட்ட துப்பறியும் சாம்பு புத்தகங்கள் அட்டைப்படம் நடனம் என நினைக்கிறேன். அதுக்கு முன்னால் தேவன் அறக்கொடையினர் வெளியீடாக வந்த நினைவு. மங்கள நூலகமா? நினைவில்லை.

Pas Pasupathy சொன்னது…

1) ஆம், முதலில் “மங்கள நூலகம்” --> துப்பறியும் சாம்பு நூல்கள். 5 பாகம். 1969.
2) 42-இல் விகடனில் படங்கள் ராஜு தான். என் வலைப்பூவில் சில பார்க்கலாம்.
3) நான் சொல்லாமல் விட்டது : ரத்னபாலா இதழில் து.சாம்பு சித்திரத் தொடர் கொஞ்சம் வந்தது. உமாபதி ஓவியம். அந்தத் தொடரில் அந்த 2 கதைகள் உள்ளதா ? தேடுவேன் ! :-)

Geetha Sambasivam சொன்னது…

ரத்னபாலா? கேட்டதில்லை! இயன்றபோது சொல்லுங்க!

Pas Pasupathy சொன்னது…

ரத்னபாலா சிறுவர் மாத இதழ். 79-இல் தொடக்கம் என்ரு நினைக்கிறேன். இதோ ஒரு இணைப்பு , தெரிகிறதா பாருங்கள்! இதே சாம்பு கதையின் முதல் பக்கம்!
https://tinyurl.com/y9ao8thz

Geetha Sambasivam சொன்னது…

நன்றாய்த் தெரிந்தது. படித்தேன். இந்த விஷயம் எனக்குப் புதிது. 79 ஆம் வருஷம்! அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்பதால் ரத்னபாலா என்றொரு புத்தகம் அல்லது வாராந்தரி வந்ததே தெரியவில்லை. தங்கள் பகிர்வுக்கு நன்றி. சிரமம் கொடுத்தமைக்கு மன்னிக்கவும். தேவன் என்றாலே தாண்டிச் செல்ல முடியாது. அதுவும் சாம்பு என்னும் போது! :))))

Pas Pasupathy சொன்னது…

67-க்குப் பின் நான் இந்தியாவிலேயே இல்லை! எனக்கும் இதெல்லாம் முகநூல் நண்பர்களால் கிட்டிய தகவல்கள் தாம்! மேலும் துல்லியமாய், எந்த வருடம் சாம்பு வந்தது, எவ்வளவு கதைகள் போன்ற தகவல்கள் நான் திருப்தி அடையும் அளவுக்குக் கிட்டவில்லை! ஒருநாள் கிட்டும்!

உங்கள் ரசிகத்தன்மைக்கு நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

//67-க்குப் பின் நான் இந்தியாவிலேயே இல்லை!// :))))) அப்போப் பள்ளி மாணவி என்பதால் இத்தனை தேடுதல் ஆர்வம் இல்லை! :) மிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் சிரமம் பார்க்காமல் நேரம் செலவிட்டமைக்கும்.

கே.பாலசுப்ரமணியன் சொன்னது…

கல்கி மறைவுக்குப் பின் கல்கி வளர்த்த தமிழ் என்று தொடராக நெடு நாள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டார்கள்.நான் பம்பாயில் இருந்த போது அவற்றை பைட்டு பண்ண கொடுத்து பிரஸ்ஸில் தொலைத்து விட்டார்கள்.

கே.பாலசுப்ரமணியன் சொன்னது…

கல்கி மறைவுக்குப் பின் கல்கி வளர்த்த தமிழ் என்று தொடராக நெடு நாள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டார்கள்.நான் பம்பாயில் இருந்த போது அவற்றை பைட்டு பண்ண கொடுத்து பிரஸ்ஸில் தொலைத்து விட்டார்கள்.

Pas S. Pasupathy சொன்னது…

கே.பாலசுப்ரமணியன் : நன்ரி. " கல்கி வளர்த்த தமிழ்" -ஐ பின்னர் விகடன் நூலாக வெளியிட்டார்கள் என்று நினைவு.

கருத்துரையிடுக