திங்கள், 14 மார்ச், 2016

பைங்கணித எண் பை : கவிதை

பைங்கணித எண் பை 

பசுபதி

மார்ச் 14 (3/14) கணித எண் 'பை 'யின் தினம். 
உலகக் கணித தினம்.
மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின்
பட்டென்று பம்பிடுவாள் பை.

* வெண்பாவின் முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பான  3.14-ஐக் குறிக்கிறது. குறிப்பு:
தமிழில் பை என்பதற்குப் பல பொருள்கள் உண்டு.

தமிழ் அகராதி சொல்கிறது: 
பை² pai
n. < பசு-மை. [M. pai.] 1. Greenness, freshness; பசுமை. (பிங்.) 2. Colour; நிறம். (W.) 3. Youth; இளமை. பைதீர் பாணரொடு (மலைபடு. 40). 4. Beauty; அழகு. (திவா.) பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன். 33). 5. Strength, vigour; உடல்வலி. நும் பைதீர் கடும் பொடு (பெரும்பாண். 105)
,
அவற்றில் ஒன்று ‘அழகு” .

** வட்டத்தின் சுற்றளவு  = 2 x பை x ஆரம்
    விட்டம் = 2.ஆரம்

[ ‘திண்ணை’ மின்னிதழில் மார்ச்  17, 2003 அன்று வெளியான கவிதை

தொடர்புள்ள பதிவுகள்:

4 கருத்துகள்:

Arima Ilangkannan சொன்னது…

கணித விளக்கக் கவிதை அருமை!
- அரிமா இளங்கண்ணன்

Soundar சொன்னது…

2*Pi*R என்னும் ஃபார்முலாவை நினைவில் கொள்ள ஒரு யுக்தி யோசித்தேன். பையப் பைய ஆர் இங்கே வளைந்து வருவது?
அதாவது, இரண்டு பை, அப்புறம் ஆர் என்று கொண்டால், தொடர்ந்து வருவது வளைவு.

சௌந்தர்

V.Subramanian சொன்னது…

ஓம்.
’பை’ கணிதத்தில் ஒரு அலகு. சிற்பிகளின் அனுபவக் கல்வியில் வரும் ஒரு பாடல்:
வளையதைக் கிளையதாக்கி, கிளையதை எட்டதாக்கி, எட்டில் மூன்றைத் தள்ளி நின்றது .
வளையது = வட்டத்தின் சுற்றளவு, கிளையதாக்கி = இரு சமபாகமாக்கி, நெற்றிக்கனம் = விட்டம் (இரண்டு ஆரங்கள்), நின்றது = மீதமாக இருந்தது.
ஒரு உருளையின் விட்டத்தைக் கணக்கிட ஒரு கயிற்றின் மூலம் உருளையின் சுற்றளவைக் எடுத்துக்கொண்டு, அந்தக் கயிற்றை இரண்டு சமபாகமாக மடித்துக்கொள்ளவும். அந்த மடிப்பை எட்டு பாகங்களாகப் பிரித்து, அந்த எட்டு பாகத்தில் மூன்று பாகத்தை நீக்கிவிட்டு ( மீதமுள்ள) அளவே அந்த உருளையின் விட்டமாகும்.
வெ.சுப்பிரமணியன் ஓம்

Pas S. Pasupathy சொன்னது…

அருமை!

கருத்துரையிடுக