மனம் போன போக்கில்
பசுபதி
’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை.
மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக்
கனமிகு சித்ரம் என்பார் -- கிளியே!
காலத்தின் கோல மடீ! (1)
பசுபதி
’கோபுர தரிசனம்’ 2012 தீபாவளி மலரில் வெளியான ஒரு கவிதை.
மனம்போன போக்கினிலே மையைத் தெளித்துவிட்டுக்
கனமிகு சித்ரம் என்பார் -- கிளியே!
காலத்தின் கோல மடீ! (1)
காலம் எனும்கருத்தில் காலன் பதுங்குவதை
ஞாலம் அறிந்து கொண்டால் -- கிளியே!
நன்மை பிறக்கு மடீ! (2)
நன்மை தருமுணவு நாக்கில் இனிக்காமல்
இன்பம் தராத தேனோ? -- கிளியே!
என்ன கொடுமை யடீ! (3)
என்னதவம் செய்ததோ இந்தியத் தேசமென்பேன்
தென்னிசை என்னும் செல்வம் -- கிளியே!
தேனினும் தித்திப் படீ! (4)
தேனெனப் பேசுபவர் தேர்தல் முடிந்தபின்பு
பூனை யெனப்பதுங்குதல் -- கிளியே!
புனைசுருட் டில்லை யடீ! (5)
புனைவும் அனுபவமும் புற்றீசல் போல்தொ டர்ந்தால்
நனவுறை ஓடை ஆமோ? -- கிளியே!
நாறிடும் குட்டை ஆமோ ? (6)
நனவோடைப் பாதையில்நான் அஞ்சு பகைவரிடை
மனம்போன போக்கில் சென்றால் -- கிளியே!
மலையுச்சி சேர்வே னோடீ? (7)
கண்டவழி செல்மனத்தைக் கட்டுப் படுத்துவது
சண்டிக் குதிரை மேலே -- கிளியே!
சவாரி முயற்சி யடீ! (8)
அலைமோதும் வாழ்வினிலே அமைதி இலாத சேற்றில்
மலரும் மவுனம் என்பார் -- கிளியே!
மனமடங்கிப் போன பின்பே! (9)
மனம்முழுதும் போனால்தான் போக்குப் புலப்படுமோ?
மனத்தினைப் போக்கிடவே -- கிளியே!
மார்க்கத்தைச் சொல்லுவையோ? (10)
தொடர்புள்ள பதிவுகள் :
3 கருத்துகள்:
இதை வாசித்ததையிட்டு மிக மகிழ்வு.
இறையருள் கிடைக்கட்டும்.
இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல பகிர்வு
மிக மிக உன்னதமான கருத்து கொண்ட கவிதை. வாழ்க நண்பர் பசுபதி!
கவியோகி வேதம்
கருத்துரையிடுக