வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

802. சிறுவர் மலர் - 5

மரியாதை ராமன் கதை 
ஓவியர்: கே.ஆர்.சர்மா 



தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்களை வலையில் படிக்கலாம்!

என்னிடம் உள்ள ஒரு பழைய படக்கதையை இடுகிறேன். இது ‘சுதேசமித்திர’னில் 1937 -இல் வந்த ஒரு தொடர்.  பலருக்கும் தெரிந்த ‘மரியாதை ராமன்’ கதைகள் அங்கே தொடர்ந்து வந்தன. ஓவியர்: கே.ஆர்.சர்மா ( இவர் விகடனின் தொடக்க காலத்தில் அங்கே இருந்திருக்கிறார். என் வலைப்பூவிலும் அவர் 1932-இல் வரைந்த   சார்லி சாப்ளின் படம் உள்ளது!)

மரியாதை ராமன் கதைகளில் எல்லாக் கதைகளும் சிறுவர்க்கேற்றவை என்று நான் சொல்லமாட்டேன்!  ஏற்ற ஒரு கதைப்படத்தை மட்டும் இங்கே இடுகிறேன். ( கதை தெரியாதவர்கள் இங்கே  படிக்கவும் ! -- ஆம், படங்களை மட்டும் படித்தால் கதையை நன்றாய்ப் புரிந்துகொள்ளல் கடினம் தான்!)

இருப்பினும், அந்தப் படக்கதைத் தொடர்..... 1937 -இலேயே இப்படி வந்தது ...என்று அறிந்து கொண்டு அந்த முன்னோடிப் பத்திரிகையையும் , ஓவியரையும் நாம் கௌரவிக்கவேண்டாமா?)  ( இதற்குப் பின் 1938-இல் ”ராயர் அப்பாஜி கதைகள்” என்ற படத் தொடரும் வந்தது ! பிறகு ஒரு நாள் ஒரு மாதிரியை இடுகிறேன்!)

இதோ ஒரு ‘மரியாதை ராமன்’ கதை !



[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவுகள்:
சிறுவர் மலர்

பின் குறிப்பு:
1937-இல் பிரபல   பிரிட்டிஷ்  வார காமிக்ஸ்  இதழ் ‘டேண்டி’ ( Dandy )
தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


1 கருத்து:

Pandiaraj Jebarathinam சொன்னது…

அருமை சித்திரக்கதை மரபு தொடரட்டும்