வியாழன், 12 மே, 2016

பாடலும் படமும் - 11; சங்கீத சங்கதிகள் -74

ஆசாரியர் அவதாரம் 

பாபநாசம் சிவன் 


1962  மே மாதம்
. சங்கர ஜயந்தியை ஒட்டிய ’கல்கி’ இதழில்  வந்த பாடல் இது.
பாபநாசம் சிவன் அவர்களின் கிருதி.   படம் வினு அவர்களுடையது. விரைவில் வரையப்பட்ட சிறிய படம் தான். இருப்பினும் நுணுக்கம் நிறைந்தது.


வினுவின் இயற்பெயர் வேங்கடராமன். பத்து வருடங்கள் தினமணி கதிரில் பணி. பிறகு கல்கியில் சேர்ந்தார். கோகுலம் இதழில் இவர் வரைந்த வண்ணப் படக் கதைகள் பிரபலமானவை.  அண்ணா சாலையில் உள்ள குதிரை வீரர்களின் சிலைகள் வினுவின் ஓவியக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்  பட்டது என்பர்.


சிவன் பாடலில் ராகம்-தாளம் குறிப்பிடப் படவில்லை. ஆனால்,  பாடல் நூலிலிருந்து அவை சங்கராபரணம் - தேசாதி தாளம் என்று அறிகிறோம்.



[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும் 

பாபநாசம் சிவன்

வினுவின் பொன்னியின் செல்வன் சித்திரங்கள்

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை: