செவ்வாய், 3 மே, 2016

சுஜாதா - 1

பாமரருக்கும் படித்தவருக்கும் கணிப்பொறி : நூல் 
இராதாகிருஷ்ணன், சுஜாதா 

மே 3. சுஜாதாவின் பிறந்த தினம்.

முதலில் விக்கியின்  சுஜாதா  கட்டுரையின் நூல்கள்  பட்டியலில் தேடினேன்.  கிட்டவில்லை.

கூகிள் ஆண்டவனிடம் முறையிட்டேன். ஒரு நூற்குறிப்பு  கிட்டியது.

கொஞ்சம் மகிழ்ச்சி.ஆனால்  என் நண்பர்  கணிப்பொறியியல் பேராசிரியர் அமரர் தி.இராதாகிருஷ்ணன் சுஜாதாவுடன் எழுதிய ஒரு நூல் பற்றிய மற்ற விவரம்  எதுவும் சிக்கவில்லை. அதனால், அவரைப் பற்றியும், அந்த நூலைப் பற்றியும் எழுதவேண்டும் என்ற முடிவின் விளைவே இந்தப் பதிவு!

தமிழார்வம் மிக்கவர் இராதாகிருஷ்ணன். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எனக்கு மூன்று ஆண்டுகள் ஜூனியர்; பிறகு கான்பூர் ஐ.ஐ.டியில் முனைவர் படிப்பு.  கனடாவில் மாண்ட்ரியாலில் உள்ள கன்கார்டியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராய்த் திகழ்ந்தவர்.
( அவரைப் பற்றிய ஒரு பதிவை இங்கே படிக்கலாம்.)

 குமுதம் வாரப் பதிப்பில் வந்த அவருடைய கட்டுரைகளைச் சுஜாதா அவர்களின் துணையுடன் சீர்செய்து இந்தப் புத்தகத்தை 1996-இல் அவர் வெளியிட்டார்.

இனி அவரே  நூலின் சில பக்கங்கள் மூலம் பேசட்டும்!

தொடர்புள்ள பதிவுகள்:

திருப்புகழ் பற்றிச் சுஜாதா

சுஜாதா

[ நன்றி: ரேகா இராதாகிருஷ்ணன் ] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக