திங்கள், 7 மே, 2018

1055. பாடலும் படமும் - 30

இராமாயணம் - 2
பாலகாண்டம், கடிமணப் படலம்





இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ்வரு போதில்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்.

[ இடம்படு     தோளவனோடு  -  இடம்  அகன்ற  தோளினனான

இராமனோடு;  
இயை  வேள்வி  தொடங்கிய  -  அவ்வச்சயமத்திற்கு
ஏற்றவாறு  ஓமம் முதலிய   வைதிகச்   சடங்குகளைச்  செய்வதற்காகத்
தொடங்கப்  பெற்ற;  
வெம்கனல் சூழ்வரு போதின் - வெம்மையுடைய (வேள்வித்) தீயைச் சுற்றி வருகின்ற பொழுதில்; 
மடம்படு சிந்தையள்(பெண்மைக்குரிய)  பேதைமைக்  குணம்   (இயல்பாய்)   அமைந்த மனத்தினளான   சீதை;    
மாறு    பிறப்பின்    உடம்பு    உயிரைத் தொடர்கின்றதை  ஒத்தாள் - மாறி மாறி வருகின்ற இயல்பினையுடைய பிறவிகளில்  (உயிர்  உடம்பைத்   தொடர்கின்ற  வழக்கத்திற்கு மாறாக) உடம்பு   உயிரைத்   தொடர்கின்றதைப்   போல.   இராமனைப்  பின் தொடர்ந்தாள்.]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

கருத்துகள் இல்லை: