வெள்ளி, 18 மே, 2018

1066. ஆ.ரா.இந்திரா -1

பெண்டிர் நிலை
ஆ.ரா.இந்திரா

‘உமா’ இதழில் 1956-இல் வந்த ஒரு கட்டுரை.

ஆ.ரா.இந்திரா 2016-இல் மறைந்தபோது, திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது:

கம்பரும் ஹோமரும் உள்ளிட்ட பல ஒப்பாய்வு நூல்களை எழுதியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வராக இருந்தவர். ரா.பி. சேதுப்பிள்ளையின் நேரடிப் பார்வையில் கம்ப ராமாயணச் சிறுபாத்திரங்கள் குறித்து ஆய்வு செய்தவர். கம்ப ராமாயணத்திலும் சிலப்பதிகாரத்திலும் ஆழங்கால் பட்டவர் . 34 ஓரங்க நாடகங்கள் எழுதியவர். தமிழ் போலவே ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
====

விகடனில் அவர் எழுதி சித்திரலேகா படங்கள் வரைந்த ‘சித்திரச் சிலம்பு’ பிரபலமானது.


1 கருத்து:

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக மிக நன்றி திரு பசுபதி ஐயா.
திருமதி இந்திரா எனக்குத் தமிழையும் ,கம்பனையும் அறிமுகம் செய்தவர்.
நேரில் ஒரே ஒரு வருடம் கற்ற இராமாயணப் பாடல்களை இன்னும் மறக்க வில்லை.

அவர் மறைந்த செய்தியும் தெரியாது.

அத்தனை அருமையான பேச்சாளர். பரதனையும்,குகனையும் அவர் அறிமுகப் படுத்தும் படலம்
அப்படியே மனதில் நிற்கிறது.

என்னுடைய இந்த நாள் நல்ல நாள். தமிழ் குருவின் அருள் கிடைத்தது.

கருத்துரையிடுக