வெள்ளி, 4 மே, 2018

1050. கி. கஸ்தூரிரங்கன் -1

தமிழனின் மூளை ஏற்றுமதி 
கி.கஸ்தூரிரங்கன்


[ நன்றி: சொல்வனம் ] 
மே 4. எழுத்தாளர், இதழியலாளர் ( ‘கணையாழி’ ஆசிரியர் )  கி.கஸ்தூரிரங்கனின் நினைவு தினம்.

“  'கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் விமர்சனப் பாங்கில், பலவிதப் பிரச்சினைகள் குறித்தும் தீபத்தில் கட்டுரைகள் எழுதியிருக் கிறார். தமிழ் நாட்டில் குடும்பப் பத்திரிகைகள், தமிழ் மொழியின் காவலர்கள், தமிழ் நாட்டின் நாளிதழ்கள், புதிய அலைக்கலைஞர்கள், தமிழர்கள் இரு வகை, தமிழ் இலக்கியத்தில் புதுமை, முற்போக்கும் பிற்போக்கும், மக்கள் ரசனைக்காக, தமிழ் எழுத்தாளர்கள், நாணயம் என்ன விலை ஆகிய தலைப்புகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், சூடும் சுவையும் நிறைந்து, படிப்போரை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன “
                                - வல்லிக்கண்ணன், “தீபம் யுகம்”

68-69 -இல் நான் ‘தீபம்’ இதழின் அமெரிக்க சந்தாதாரராய் இருந்தேன்!
அப்போது நான் சேமித்து வைத்திருந்த   ஒரு சிறு ‘தீபம்’ கட்டுரை இதோ!
மேலும் சில உண்டு! இணையத்தில் இவருடைய படைப்புகளை நான் காண முடியவில்லை! எனவே என்னிடம் உள்ள சில கட்டுரைகளைப் பின்னர் இங்கிடுவேன். ( இவருடைய படைப்புகள் நூலாய்த் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளதா? அறிந்தோர் சொல்லவும்.)தொடர்புள்ள பதிவுகள்:

கி. கஸ்தூரிரங்கன் : விக்கிப்பீடியா

3 கருத்துகள்:

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

இன்றைக்கும் சரியாக பொருந்தும்படியான கருத்துகளை எழுதியிருக்கிறார்

sivakumark சொன்னது…

தினமணிகதிரில் என நினைக்கிறேன் ‘யுதோப்பியா‘ என்று ஒரு தொடர்கதை எழுதியதாக நினைவு.... பாண்டிச்சேரி ஆசிரம பின்னணியில்...

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி @sivakumark . அவர் ஐந்து தொடர்களைக் கதிரில் எழுதினார் என்று படித்திருக்கிறேன். கி.பி.2084 என்பது ஒன்று என்று நினைவு.

கருத்துரையிடுக