விருது, விளம்பரம், விமர்சனம் !
அக்டோபர் 25. மதுரை மணி ஐயரின் பிறந்த தினம்.
ஒரு விருது!
மணி ஐயருக்குக் “கானகலாதர” என்ற பட்டம் உள்ளது என்பதைப் பலரும் அறிவர். ஆனால், இது எப்போது கிட்டியது? யார் கொடுத்தார்கள்?
கீழே உள்ளது ‘சுதேசமித்திரன்’ 26-12-1943 இதழில் வந்த ஒரு தகவல்.
தஞ்சை சமஸ்தானத்தின் மூத்த இளவரசர் யார்? பெயர் தெரியவில்லை. தெரிந்தவர் எழுதினால் இங்கே சேர்த்துவிடுவேன். ( அவர் பெயர் பாபாஜி ராஜா போன்ஸ்லே என்கிறார் ஒரு நண்பர் )
1948 ’வெள்ளிமணி’ இதழில் வந்த ஒரு விளம்பரம்!
இந்த இசைத்தட்டுகள் எங்கள் வீட்டில் பலவருடங்கள் இருந்தன!
ஒரு விமர்சனம்!
பிரபல இசை விமர்சகர் ‘நீலம்’ ( நீலமேகம் ) 1948 சுதேசமித்திரன் இதழொன்றில் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக