வியாழன், 30 ஏப்ரல், 2020

1532 சங்கீத சங்கதிகள் - 230

மகா வித்துவான் மறைந்தார்! 

மே 1. ஜி.என்.பி அவர்களின் நினைவு தினம். அவர் மறைவுக்குப் பின் கல்கியில் வந்த அஞ்சலி.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

ஜி.என்.பி: பசுபதிவுகள்

திங்கள், 27 ஏப்ரல், 2020

1531. உ.வே.சா. - 10

வீழ்ந்த ஆல மரம்
கல்கி

ஏப்ரல் 28. உ.வே.சாமிநாதையரின் நினைவு தினம்.
அவர் 42-இல் மறைந்தபின், கல்கியில் வந்த அஞ்சலி.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ] 
தொடர்புள்ள பதிவுகள் :

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

1530. சங்கீத சங்கதிகள் - 229

இசையில் ஒரு கற்புநிலை!
ஆனந்தி 

ஏப்ரல் 27. எம்.டி.ராமநாதனின் நினைவு தினம்.
அவர் 84-இல் மறைந்தபின் 'கல்கி'யில் வந்த அஞ்சலி.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

எம். டி. இராமநாதன்: விக்கிப்பீடியா

சனி, 25 ஏப்ரல், 2020

1529. சங்கச் சுரங்கம்: குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப் பாட்டு 
பசுபதி

 சங்கச் சுரங்கம் -1 ‘ என்ற என் நூலில் இருந்து ஒரு கட்டுரைக் கதை/ கதைக் கட்டுரை! நூல் கிட்டுமிடம்:
LKM Publication, 10, Ramachandra Street, T.Nagar , Chennai - 600017
தொலைபேசி: 044_2814 2241; கைபேசி : 99406 82929. ]
=====

'காதலர் தின'த்தில் 'ட்ரிங்' என்று அடித்ததுமே,  அது என் இளம் நண்பன் அருணாகத் தான்  இருக்கவேண்டும், வழக்கம்போல் அவனுக்கும் அவன் காதலிக்கும் ஏதோ ஒரு 'காதல் தின' 'லடாய்'  என்றும்  நினைத்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன்; சாக்ஷாத் அருணேதான்! அவனுக்கு உற்சாகத்துடன் நூறாயுசு 'வரம்' நான் கொடுப்பதை, நடுவில் தடைசெய்து  அலறினான் அருண். "சார், அதெல்லாம் அப்புறம்  இருக்கட்டும். இன்றைக்கு என்னை நீங்கள் காப்பாற்றா விட்டால், நான் அல்பாயுசு  தான்! என் 'காதல்' வாழ்க்கை இன்றோடு 'ஹோ கயா' ! சமாப்தி ! அழிஞ்சிடும் ! " என்றான்.

விஷயம் இதுதான். ஒவ்வோர் ஆண்டு 'காதலர் தின'த்திலும், வெவ்வேறு கடினமான நிபந்தனைகளைப் போடுவது அவன் காதலிக்கு வழக்கம். இந்தத் தடவை,  நூறு மலர்களின் பெயர்கள் கொண்ட கவிதை ஒன்றை மாலைக்குள் அவளிடம் 
சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறாளாம்.

"இவ்வளவு  தானே! அது உன் சுயமான கற்பனையாய் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே ! நீ பிழைச்சே! போ! நான் அப்படிப்பட்ட ஒரு கவிதை தருகிறேன். உண்மையைச் சொல்லப்போனால்,  இப்படிப்பட்ட கவிதை உலக இலக்கியத்திலேயே தமிழில் தான் இருக்கிறது.  அதுவும் , எனக்குத் தெரிந்து 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்று இது ஒன்றுதான் இருக்கிறது   " என்று அருணைச் சமாதானப்  படுத்தினேன்.

 'அடேயப்பா,  அதென்ன கவிதை' என்று புருவங்களை உயர்த்துகிறீர்களா? சொல்லத்தானே போகிறேன்!

 'குறிஞ்சிப் பாட்டு'  கபிலரின் மிகச் சிறந்த  கவியாரம் . 'பத்துப் பாட்டு'  வரிசையில் 261 அடிகள் உடைய எட்டாவது நூல்.  அதன் இறுதியில் ,  " ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்ததற்குக் கபிலர் பாடியது '  என்று குறிப்பு இருப்பதால், தமிழில் ஆர்வமிருந்த ஒரு வடநாட்டு அரசனுக்குத்  தமிழுக்கே உரிய சிறப்பான அகப்பொருளின் பெருமையை விளக்கக் கபிலர் இயற்றிய பாடல் இது என்பதும் புரிகிறது.

அகப்பொருளை ஐந்து திணைகளாகப் பிரித்தனர் தமிழர். இது தமிழிலக்கியத்திற்கே உரிய ஒரு சிறப்பு. அந்த ஐந்தில் முதல் திணை குறிஞ்சி; குறிஞ்சித் திணையைப்  பற்றிப் பாடும் இலக்கியம் காதலனும், காதலியும் சேர்வதற்குக் காரணமாக
இருப்பவற்றையும், அவர்கள் இன்புற்றிருப்பதையும்  விவரிக்கும்.

" அப்படியானால் , டொராண்டோ  போன்ற மலையற்ற நகரங்களில்  காதலர் சேரமுடியாது என்கிறீர்களா?  நான் ஆல்பெர்டா போன்ற மாகாணத்திற்கு வேலையை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா?" என்று அலறினான் அருண்.

"அசடே! எல்லா இடங்களிலும் காதல் நடைபெறும். ஆனால், இயற்கை பூத்துக் குலுங்கும் மலைப் பிரதேசத்தில் காதலும் செழித்து வளருமல்லவா? அதனால் தான்  " பாட்டுக்கு ஏற்றபடி சுருதி அமைத்துக் கொள்வதுபோல் ,  காதலுக்கு ஏற்ற நிலைக்களனை வகுப்பதால் இலக்கியச் சுவை அதிகரிக்கின்றது " என்று சொல்கிறார்  அறிஞர் கி.வா.ஜகந்நாதன்” என்றேன்.

பாடலின் பொருளைச் சுருக்கிக் கூறத் தொடங்கினேன்.

 " 'அன்னையே! வாழிவேண்டு அன்னை'

என்று தொடங்குகிறது பாடல். தலைவியின் நோய்க்குக் காரணம் தெரியாமல்  வருந்தும் செவிலித் தாய்க்குத் தோழி சொல்வது போல் அமைந்த பாடல். 

களவுக் காதலில் தன் மனத்தைப் பறி கொடுத்த தலைவி , காதலனைச் சில நாளாகப் பார்க்க முடியாதலால், வருந்துகிறாள். தன் காதலை ஊரார் அறிந்தால் என்ன நடக்குமோ  என்ற பயத்தில் அவள் உடலும் மெலிகிறது.

"சார், அந்தக்  காலத்துத் தலைவன் அதிர்ஷ்டக் கட்டை, சார். என் காதலி , நான் ஆறு மாதம் பார்க்கலையென்றாலும்,  தன் உடலைப் பக்கவாட்டுப் பரிமாணத்தில்  நன்றாய்  வஞ்சனை இன்றி  வளர்த்துக் கொண்டே .... வேணாம் , சார் ! நீங்கள் தொடருங்கள் ! "  என்று முனகினான் அருண்.

 தலைவி தோழியிடம் சொல்லியிருந்த காதல் விவரங்களைத் தோழி செவிலித்தாயிடம்  சொல்கிறாள்.   தினைப் புனத்தில் கிளி போன்ற பறவைகளை ஓட்டிவிட்டு, மலையருவியில் நன்றாகக் குளித்துவிட்டு, தங்கள் கூந்தலின் ஈரம் போக உலர்த்திக் கொள்கின்றனர் தலைவியும், தோழியும். பிறகு பாறையின் மேல் பல மலர்களைப் பரப்பினர் .

இந்த இடத்தில். . .

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்குயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மணிச்சிகை,
. . .
என்று தொடங்கிக் கபிலர் 35 அடிகளில் 99 மலர்களின் பெயர்களை மலையருவி போலவே  பொழிகிறார்.

'' அற்புதம்! அற்புதம்!  அந்த அடிகளை மட்டும் எழுதிக் கொடுங்கள்; நான் போகிறேன்"  என்றான் அருண்.

" இருடா, அவசரக் குடுக்கை, பாடலின் மீதியைக் கேட்டால்தான் கொடுப்பேன் " என்று தொடர்ந்தேன்.

 மலர்மாலை அணிந்து அசோக மரத்தின் அடியில் அமர்ந்த பெண்கள் முன், தோன்றினான் தலைவன். வில்லும், அம்புமாய் வந்த அவன் பின் சில வேட்டை நாய்களும் வந்தன. நாய்களைக் கண்டு அஞ்சிய பெண்களுக்கு ஆறுதல் சொல்லி,
தான் வேட்டையாடிய விலங்கு ஏதேனும் அப்பக்கம் வந்ததா என்று வினாவுகிறான் தலைவன் .

"சார் ! நான் இல்லாதபோது ஒரு சொறிநாய்ப்பயல் என் காதலியைத் துரத்துகிறான், சார்" என்று இடைமறித்தான் அருண். "அந்தப் பிரச்சினையை அப்புறம் பார்க்கலாம். நீ பேசாமல் முதலில் 'குறிஞ்சிப் பாட்'டைக் கேள்" என்று அதட்டித் தொடர்ந்தேன்.

அப்போது, மதம் பிடித்த யானை ஒன்று ஓடிவந்தது. அம்பினால் அதை ஓடும்படிச் செய்த தலைவன் , தலைவியைத் தழுவி, அவளை என்றும் பிரியேன் என்று உறுதி சொல்லி, அதற்கோர் அடையாளமாக நீரை கையில் எடுத்து ஒரு  கை குடித்தான். அந்த யானை காரணமாகத் தலைவியும், தலைவனும்
காதலில் இன்புற்றதால், இதைக் 'களிறு தரு புணர்ச்சி' என்பார்கள்.

"சார்! 'சொறிநாய் தரு புணர்ச்சி' என்று ஒன்று இருக்கிறதா, சார்? ஒரு நாள் இல்லாவிட்டால், ஒரு நாள், அந்த சொறிநாய்ப் பயலை செருப்பால் அடித்துத் துரத்தத் தான் போகிறேன் சார் " என்று கத்தி, உணர்ச்சி வசப்பட்ட அருணைத் திரும்பச் சமாதானப் படுத்தினேன். மனத்தில் ஒன்று தோன்றிவிட்டால், அந்தப்
பாதையிலிருந்து அருணை இழுப்பது கடினம்.   

 பகல் முழுதும் காதலியுடன் பொழுது போக்குகிறான் தலைவன். மாலை வருகிறது .இந்த இடத்தில் கபிலர் சொல்லும் மாலை வர்ணனை நெஞ்சைக் கவ்வும் . 

'ஏழு குதிரைகள் கொண்ட  தேரைச் செலுத்தும் சூரியன் மேற்கில் மறைகிறான். மான்கள் கூட்டமாக மரத்தின் அடியில் வந்து சேர்கின்றன. பசுக்கள் 'அம்மா' என்ற குரல் கொடுத்துக் கன்றுகளை அழைத்து, கொட்டில்களில் புகுகின்றன.
பனை மடலின் உள்பக்கம் தங்கும், ஊதுகொம்பு போல் ஒலிக்கும் ஆண் அன்றில் பெண் அன்றில் ஒன்றை அழைக்கின்றது. பாம்புகள் தம் மாணிக்கக் கற்களை உமிழ்ந்து,  அவை கொடுக்கும் ஒளியில், இரை தேடப் புறப்படுகின்றன. இடையர்கள் 'ஆம்பல்'  என்னும் பண்ணில் புல்லாங்குழல் ஊதுகின்றனர். ஆம்பல் மலர்களும் மலர்கின்றன. அந்தணர்கள் அந்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். செல்வர்கள் மனைகளில்  பெண்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். காட்டில் உள்ள வேடர்கள், விலங்குகள் வராமல் இருக்க , பரண்மீது தீக்கடை கோலால் நெருப்பு மூட்டுகின்றனர்.  மலையைக் கருமேகங்கள் சூழ்கின்றன. காட்டு மிருகங்கள் 'கல்'லென்று  முழங்குகின்றன. பறவைகள் கூட்டுக்குள் ஆரவாரிக்கின்றன. ' என்று வர்ணிக்கிறார் கபிலர்.  'குறிஞ்சிப் பாட்டில்' முப்பதுக்கு மேல் அழகான உவமைகள்  உள்ளன என்பர் அறிஞர்கள்.   இதனால் தானோ, என்னவோ, 'குறிஞ்சி  பாடக் கபிலர்' என்பார்கள்.

பிறகு, நாடறிய அவளை முறைப்படி மணம் செய்துகொள்வதாக வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டுப் பிரிகிறான் தலைவன். அதற்குப் பின் ஒவ்வோரு நாளும் இரவில் தலைவியைச் சந்தித்து , பேசிப் போவது தலைவனின் வழக்கம்.
வரும்போது, ஊர்க்காவலர்கள் வந்தாலும், நாய்கள் குரைத்தாலும், நிலாவின் ஒளி  மிகுந்தாலும் காதலியைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றுவிடுவான். அவன் வரும் காட்டு வழியில் உள்ள இன்னல்களை நினைத்துக் கண்ணீர் விடுவாள் தலைவி.

இந்தக் களவுக் காதலின் வரலாற்றைக் கூறி, அந்த இளம் காளைக்குத் தன் தலைவியைத் திருமணம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செவிலித் தாயிடம் ஏற்படுத்துகிறாள் தோழி.   

"பின்னே  என்ன? செவிலித்தாய் பெண்ணின் பெற்றொருக்குச் சொல்வாள். அவர்கள் 'சரி என்று   'பூம், பூம்' மாடுகள் போல் தலையாட்டுவார்கள். 'டும், டும், டும்' தான்... நாகஸ்வரம், மூன்று முடிச்சு, தமிழ்ச் சினிமா முடிவுதான் என்று சொல்லுங்கள்?
என்னைப் போலவா? " என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்த அருணிடம்  அந்த மலர்கள் வரும் பகுதியை மட்டும் எழுதிக் கொடுத்தேன்.

இரவு 11 மணி; நான் நினைத்தபடி அருணிடமிருந்து ஒரு தொலை பேசிச் செய்தி. காதலியிடம் சென்று மலர்களின் பெயர்கள் உள்ள 'குறிஞ்சிப் பாட்டின்' பகுதியைப்
படித்தானாம். ஒரே ஒரு பிரச்சினை தான் முளைத்ததாம். கண்குத்திப் பாம்பு மாதிரி மலர்களின் பெயர்களை எண்ணிக் கொண்டே வந்த காதலி, 'எங்கே? 99  தானே? ஒன்று குறைகிறதே"  என்று அவனை வெளியில் தள்ளிக் கதவைத் தாழ்ப்பாள்  போடப் போனாளாம்.

"அட, ரொம்ப சாமர்த்தியமான பெண்ணாய் இருக்கிறாளே ? எப்படிச் சமாளித்தாய்" என்று வியந்தேன்.

"அதான், 'சரோஜா!' என்று உன் பெயரை முதலில் சொல்லித் தானே இந்த மலர்ப் பட்டியலைப் படித்தேன்! நீயே ஒரு மலர் தானே! உன்னையும் சேர்த்தால் நூறு வந்து
விடுகிறதே " என்று சொன்னேன். " 

“ வாயுள்ள பிள்ளை பிழைக்கும்; உண்மைதான். ஆனால், அடுத்த வருஷம் உன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். உடனே , அடுத்த வருடம் ‘மனைவியர் தினம்’ கொண்டாடும் வழியைப் பார் !”  என்று அருணிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியைக் கீழே வைத்தேன்.

~*~o0O0o~*~

தொடர்புள்ள பதிவுகள் :

சங்கச் சுரங்கம் 

பசுபடைப்புகள்
 
வெள்ளி, 24 ஏப்ரல், 2020

1528. ரா.பி.சேதுப்பிள்ளை - 5

சொல்லின் செல்வர் 

ஏப்ரல் 25. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம்.

அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த அஞ்சலிக் குறிப்பு.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 23 ஏப்ரல், 2020

1527. மொழியாக்கங்கள் - 5

பர்ஸ் போயிற்று, கதை கிடைத்தது! 
சத்யஜித் ரே
தமிழாக்கம்: ரா.வீழிநாதன் 

ஏப்ரல் 23. சத்யஜித் ராயின் நினைவு தினம்.

1975- கல்கி இதழ் ஒன்றில் வந்த அவருடைய கதை.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

புதன், 22 ஏப்ரல், 2020

1526. ஷேக்ஸ்பியர் - 2

வில்லியம் ஷேக்ஸ்பியர் 

ஏப்ரல் 23. ஷேக்ஸ்பியரின் நினைவு நாள்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஷேக்ஸ்பியர்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

1525. சங்கீத சங்கதிகள் - 228

வந்தார்கள், கேட்டார்கள், இசைந்தார்கள்! 
லால்குடி ஜெயராமன்

ஏப்ரல் 22. லால்குடி ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.

 டொராண்டோவிற்கு அவர் வந்திருந்தபோது ,  திருப்புகழ் அன்பரான அவர் தந்தை லால்குடி கோபால ஐயரைப் பற்றியும்,   திருப்புகழ் பலவற்றிற்குக்  குருஜி ராகவன் இசை அமைத்த முறை பற்றியும் அவருடன்  பேசியது நினைவிற்கு வருகிறது. என் மகள் உட்பட மற்ற சில இளம் இசை மாணவர்களுக்கு அவர் தன் பாடல்களில் ஒரு வர்ணமும் ( பௌளி) ஒரு தில்லானா ( மாண்ட்) வும் சொல்லிக் கொடுத்ததைக்  கேட்டதும் பசுமையாக மனத்தில் இருக்கிறது.

1982 'கல்கி' இதழ் ஒன்றில் வந்த கட்டுரை.

1992 கல்கி இதழ் ஒன்றில் வந்த கட்டுரை.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

திங்கள், 20 ஏப்ரல், 2020

1524. சங்கீத சங்கதிகள்- 227

பண்டிட் ரவிசங்கர் 10

உலகப் புகழ்பெற்ற சிதார் இசைக் கலைஞர் ‘பாரத ரத்னா’ பண்டிட் ரவிசங்கர் (Pandit Ravi Shankar) அவர்களின் நூற்றாண்டு இது. ( அவருடைய பிறந்த நாள் ஏப்ரல் 7, 1920) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 வாரணாசியில் (1920) பிறந்தார். இயற்பெயர் ரவீந்திரோ சங்கர் சவுத்ரி. தந்தை, ராஜஸ்தானின் ஜாலாவார் சமஸ்தான திவானாக இருந்தவர். ரவிசங்கர் தனது 10 வயதில், பாரிஸில் அண்ணன் நடத்திய பாலே நடனக்குழுவில் சேர்ந்தார். தனக்கான துறை நடனம் இல்லை என்பதை சீக்கிரமே கண்டுகொண் டார். 1938-ல் இந்தியா திரும்பினார்.

 வாரணாசி அருகே ஒரு குக்கிராமத்தில் ஏறக்குறைய அனைத்து வாத்தியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற உஸ்தாத் அலாவுதீனின் வீட்டில் தங்கி குருகுல முறையில் இசை பயின்றார். இவர் வாசிக்க விரும்பியது சரோட் வாத்தியம். ஆனால், குருதான் சிதார் பயிலச் சொன்னார்.

 குருவின் வாரிசுகளுடன் சேர்ந்து இசை அரங்கேற்றம் இவரது 19-ம் வயதில் ஜுகல்பந்தியாக நடந்தது. பின்னர் தீவிர பயிற்சியால் சிதார் இசை நுணுக்கங்களை வசப் படுத்திக்கொண்டார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்தார்.

 அகில இந்திய வானொலியில் 1949-ல் பணியாற்றினார். உருதுக் கவிஞர் முகமது இக்பாலின் ‘ஸாரே ஜஹான்சே அச்சா’ பாடலுக்கு இசை அமைத்தார். பதேர் பாஞ்சாலி, காபுலிவாலா என சில திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான தனிக் கச்சேரிகள், ஜுகல்பந்திகள் நடத்தியுள்ளார்.

 உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அமெரிக்க ராக் இசைக் கலைஞர் ஜார்ஜ் ஹாரிசன், வயலின் இசைக் கலைஞர் யெஹுதி மெனுஹின் ஆகியோருடன் இவருக்கு ஏற்பட்ட நட்பு இவரது இசைக் கனவுகளின் எல்லைகளை விரிவடையச் செய்தது.

 பாரம்பரிய மரபுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இசையை சிறை வைக்கக் கூடாது. இசைஞானம் இல்லாதவர்கள்கூட கேட்டு ரசிக்கும்படியாக இசை இருக்கவேண்டும் என்ற கருத்து கொண்டவர்.

 யெஹுதி மெனுஹினுன் இணைந்து ‘வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்’ என்ற இசை ஆல்பம் வெளியிட்டார். இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்திய இசைக்கு உலக அங்கீகாரம் கிடைத்தது. இவருக்கு ‘பண்டிட்’ என்ற பெருமையும் கிடைத்தது.

 கேளிக்கை சாயல் அதிகம் இருப்பதையே தன் தனித்துவ பாணியாக ஆக்கிக்கொண்டார். உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள், அமைப்புகளுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகள் நடத்தியதோடு பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.

 1986-1992 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பத்பூஷண், பத்மவிபூஷண், மகசேசே, பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர். கிராமி விருதை 3 முறை வென்றுள்ளார்.

 உலக இசையின் ஞானத் தந்தை, இந்தியப் பாரம்பரிய இசையின் தூதர் என்று போற்றப்படுகிறார். மாஸ்ட்ரோ, பண்டிட் என்று பல்வேறு அடைமொழிகளால் குறிக்கப் படும் இசை மேதை ரவிசங்கர் 92 வயதில் (2012) மறைந்தார்.

[ நன்றி : https://www.hindutamil.in/news/blogs/40785-10-2.html  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ரவி சங்கர்: விக்கிப்பீடியா

சங்கீத சங்கதிகள் 

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

1523. கதம்பம் - 16

சேலம் சி.விஜயராகவாச்சாரியார்

ஏப்ரல் 19. சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் நினைவு தினம்.

'கல்கி' 1943-இல் அவருடைய படத்தை இதழட்டையில் இட்டுக் கௌரவித்திருந்தது .

இதற்குப் பின் அடுத்த வருடமே  அவர் காலமானார்.

இவரைச் " சேலம் வீரர்" என்று, படம் இட்டு, குறிப்பிட்டிருக்கிறார்  வி.எஸ். சீனிவாச சாஸ்திரி  தன் வாழ்க்கையைப் பற்றிய ஒரு  தொடரில்

1998-இல் இந்தியா ஒரு தபால் தலையை வெளியிட்டு இந்த தேச பக்தருக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

தொடர்புள்ள பதிவுகள்:

சேலம் சி. விஜயராகவாச்சாரியார்: விக்கிப்பீடியா

சனி, 18 ஏப்ரல், 2020

1522. ஐன்ஸ்டைன் - 2

அமரர் ஐன்ஸ்டீன்

ஏப்ரல் 18. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நினைவு தினம். 
அவர் 1955-இல் மறைந்தபின், விகடனில்  வந்த அஞ்சலிக் குறிப்பு.

==

விஞ்ஞான உலகிற்குக் கடந்த 18-ந் தேதி (18.4.55) ஈடு செய்ய முடியாத நஷ்ட தினமாகும். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது 76-வது வயதில் அன்று இறைவன் திருவடி சேரலானார்.

பிரபஞ்சத்தின் இயற்கை விநோதங்களைக் கணிதம் மூலம் விளக்குவதில் ஐன்ஸ்டீன் பல அற்புதங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர். அணுசக்தியின் அடிப்படைத் தத்துவத்தைக் கண்டறிந்த முதலாவது விஞ்ஞானி ஐன்ஸ்டீனேயாகும். அவருடைய கோட்பாடுகளின் மீதுதான் இதர விஞ்ஞானிகளும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள். 

ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பிறந்த ஓர் ஏழை யூதர். இளமையில் வறுமைத் துன்பத்தில் உழன்றவர். சாதித் துவேஷம் காரணமாக நாஸி சர்க்கார் அவருடைய அறிவுத் திறமைக்கு ஆதரவளிக்க மறுத்து, அவரை ஒதுக்கி வைத்தது. சாதி வெறியின் இன்னல்கள் தாளாமல் அம்மேதை நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவரது திறமைக்கும் அறிவுக்கும் பிற நாடு கள் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பளித்து, ஆதரவளித்தன. ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் குடி யேறியபோதிலும் தமது தாய் நாடு ஜெர்மனியின்பால் கடைசி வரை அன்பு செலுத்தியே வந்தார்.

அவரது மறைவு உலக விஞ்ஞானத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்
=====
[ நன்றி; விகடன்]

'கலைக்கதிர்' 1956 இதழ்  ஒன்றிலிருந்து ஒரு பக்கம்:

ஐன்ஸ்டீனின் 'சார்புநிலைக் கோட்பாடு'  ( Theory of Relativity) பற்றி ஒரு குறும்பா:

ஐன்ஸ்டைனின் பெரும்விசிறி ஆண்டாள்,
மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்;
. பார்த்தொருநாள் புறப்பட்டு,
. சார்புவழி பறந்துவிட்டு,
முன்னாளில் வீடுவந்து சேர்ந்தாள் ! 

  தொடர்புள்ள மேலும்  சில   குறும்பாக்களை இங்கே படிக்கலாம்.  

தொடர்புள்ள பதிவுகள்;

ஐன்ஸ்டைன்

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

1521. கதம்பம் -15

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

ஏப்ரல் 17. டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் நினைவு தினம்.

1975-இல் அவர் மறைந்தபின், கல்கியில் வந்த அஞ்சலிக் குறிப்பு.

[ நன்றி: கல்கி]

டாக்டர் ராதாகிருஷ்ணன் மறைந்தபின் 'மாமேதைகள் மறைவதில்லை' என்னும் தலைப்பில் ஆனந்த விகடன் தீட்டிய தலையங்கத்தின் கடைசி வரிகள் இவை...

'டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் பயனுள்ள வாழ்வு நாட்டின் எல்லைகளைக் கடந்து, மனித குலத்திற்கே நம்பிக்கை ஒளி வழங்கும் சுடர் விளக்காகும். மனித உள்ளத்தில் உயர் லட்சியங்கள் கொழுந்துவிட்டு எரியும்வரை இந்தச் சுடர் மங்காது; மறையாது!'

[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்: விக்கிப்பீடியா

வியாழன், 16 ஏப்ரல், 2020

1520. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 21

மகத்தான நஷ்டம்

ஏப்ரல் 17. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியின் நினைவு தினம்.
அவர் 1946-இல் மறைந்தபின், கல்கியில் வந்த கட்டுரை.

[ நன்றி: கல்கி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

பி.கு.  
 'கல்கி' அவர்கள் சாஸ்திரியாரின் தமிழ்க் கட்டுரையை விகடன் 40 தீபாவளி மலரில் வெளியிட்டிருக்கிறார். பின்னர்  அதை இங்கிடுவேன் 

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

புதன், 15 ஏப்ரல், 2020

1519. மொழியாக்கங்கள் - 4

வருஷப் பிறப்பு 
மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் 
( தமிழில்: நாடோடி) 

1944 -இல் கல்கியில் வந்த கதை.   மாஸ்தியாரின் கதைகளை  மொழிபெயர்க்க  நாடோடியைக் கேட்டுக் கொண்டவர் ராஜாஜி. பிறகு அவற்றைத் திருத்தி ராஜாஜி கல்கியில் வெளிட்டதாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் நாடோடி.  

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

1518. ரமண மகரிஷி - 2

ஜோதியில் கலந்தார்! 

ஏப்ரல் 14. ரமணரின்  நினைவு தினம்.

1950 'கல்கி' இதழில் வந்த கட்டுரையும், படங்களும்.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: