சனி, 11 செப்டம்பர், 2021

1933. பாரதி பாதையிலே : கவிதை

பாரதி பாதையிலே

பசுபதி


பழமைதள் ளாமல் புதுமையை மொள்ளாமல்

. பண்பாடு வெல்லும்படி

பழகு தமிழிலோர் பாலத்தைக் கட்டுவோம்

. பாரதி சொன்னபடி.   (1)


தேசம் மொழி,இறை என்றமுக் கண்ணால்

. திரிபுரத் தீமைகள்மேல்

மீசைப் புலவன்போல் வீசுவோம் அம்புகள்

. மேதினி மேம்படவே     (2)


தீரத் துடுப்பு, தெளிந்த இலக்குடன்

. சிந்தா நதியினிலே 

ஈர இதயப் படகினை ஓட்டுவோம்

. எம்கவி பாதையிலே      (3)


வாரிதி நீள்மலை வானப் பறவைநம்

. மக்களாய்க் கண்டவன்போல்

பாரெங்கும் நம்மையே பார்த்தால் பகையேது

. பாரதி பாதையது        (4)


சுட்டும் வழிச்சுடர் சுப்பிர மண்யன்

. துருவநட் சத்திரம்டி! 

பட்டை வயிரம்போல் பன்முகம் காட்டுதல்

. பாரதி பாதையடி !       (5) 


தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: