ஞாயிறு, 18 ஜூலை, 2010

'தேவன்': நினைவுகள் - 1

விகடனின் மகத்தான நஷ்டம்!

[ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.

தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுகே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனைபேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகிவிட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.

[நன்றி: ஆனந்த விகடன்]

விகடனில் வந்த முழுக் கட்டுரை இதோ:  ( நன்றி: லக்ஷ்மண்குமார் ராஜு )

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன் நினைவு நாள், 2010

2 கருத்துகள்:

Thangamani சொன்னது…

திரு.பசுபதி அவர்களுக்கு,
சிறந்த படைப்பாளிகள் அவர்கள் படைப்பைப் போலவே
சிரஞ்சீவித்துவம் பெற்றவர்கள்!
ஒருசிலர் நினைவில் பசுமையாக இருந்தாலும்
சிரஞ்சீவித்துவமாக வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்!
இன்னும் உங்கள் நினைவுகளை சுவையாக எழுதலாமே!

அன்புடன்,
தங்கமணி

சு.பசுபதி சொன்னது…

நன்றி, தங்கமணி அவர்களே.

நேரம் கிட்டும்போதெல்லாம் மடலிட முயல்வேன்.

கருத்துரையிடுக