வியாழன், 7 பிப்ரவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 15

தியாகராஜரும் தமிழும் 
பசுபதி


”ஸங்கீத ஸரிகமபதநி”  என்ற இசை-நாட்டிய மாத இதழைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பற்றி ரா.கி. ரங்கராஜன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.

“ கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று 'ஸங்கீத ஸரிகமபதநி'. நல்லி குப்புசாமி செட்டியார் இதன் தலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயொழிய அப்படியொன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.) ரொம்ப மேதாவித் தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்கீத மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது. “ 


என்று தொடங்கி எழுதியிருக்கிறார்.  சாதாரணமாக இந்த இதழில் ஜோக்குகள் வருவதில்லை. ஆனால், பாருங்கள்! நானும் பல இதழ்களைப் படித்திருக்கிறேன். என் கண்ணில் படாத ஒரு ஜோக் ரா.கி.ரங்கராஜனின் கண்ணில் பட்டிருக்கிறது! 

 'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

 'சரி, நீ என்ன பண்ணறே?'

 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'

அது சரி,”தியாகராஜரும் தமிழும்” என்ற கட்டுரைக்கு வருவோம்.இது ”ஸரிகமபதநி” பத்திரிகையில் டிசம்பர் 98-இல் வெளியானது. மீண்டும் ஒருமுறை 2005-இல் வெளியிட்டார்கள் . ( இந்தக் கட்டுரையின் கடைசியில் என் வெண்பா-முயற்சி ஒன்று மூலத்தில் இருந்தது. இப்போது பார்த்தால், அது வெண்பா இல்லை என்று தெரிந்தது :-((! அதனால் அதை ‘சென்ஸார்’ செய்துவிட்டு இன்னொரு முயற்சியைக் கட்டுரைக்குப் பின் சேர்த்துள்ளேன்:-))!) மற்றபடி அந்த முழுக் கட்டுரையும் , அந்த இதழின் அட்டைப்படமும் இதோ! 

( கட்டுரையை ஆசிரியரிடம் அனுப்பியபோது, எஸ்.ராஜம் அவர்களிடம், கோபால கிருஷ்ண பாரதி தியாகராஜரைச் சந்திப்பது போல் ஒரு சித்திரம் வரையச் சொல்லி, அதை வாங்கிப் பிரசுரிக்க விண்ணப்பித்தேன்; கட்டுரையில்  நான் விரும்பிய இருவரும் உள்ளனர்; ஆனால் ஒன்றாக இல்லை!  ) 





இசையுலக மாளிகையில் இன்றுபலர் நல்ல
பசையுடனே வாழ்வதற்குப் பாடல் பலஎழுதக்
காசெதுவும் கேட்காத கண்ணியனை ஸ்ரீத்யாக
ராசனென ஏத்துதல் நேர். 


[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள் 

7 கருத்துகள்:

உண்மை விளம்பி சொன்னது…

சரியான சப்பைக் கட்டு.
தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழில் ஒரு வரி கூடப்
பாடாதவருக்கு. தீட்சதரும் சாஸ்திரிகளும் எவ்வளவோ தேவலை.
கோபால பாரதி பாடியதைக்கேட்டு இவருக்கும் தீந்தமிழில் பாடினால் என்ன
என்று தோன்றியது போலும். பாவ மன்னிப்பாக BMK ஆகப்பிறந்து தன் பாடல்களை
தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். பாவம் சீண்டுவாரில்லை

Pas S. Pasupathy சொன்னது…

:-)) நான் ஆங்கிலம், பிரென்ச் பேசும் கனடாவில் தான் வசிக்கிறேன். என்னமோ தெரியவில்லை தமிழில் தான் கவிதை எழுதுகிறேன்! நாளைக்கு என்னை எவ்வளவுபேர் திட்டப் போகிறார்களோ, தெரியவில்லை!

Sethu Subramanian சொன்னது…

I agree with uNmai viLambi to a certain extent. Thyagaraja could have at least composed one sample Thamizh kriti. But his knowledge in Thamizh was very minimal restricted to a few words of conversation with his neighbors. Also his neighbors might have accommodated him by speaking to him in Telugu. Shyama Sastri's mother tongue was Thamizh per the account of RaviSridhar. Even MD wrote only two lines in Thamizh in his maNipravALa kriti "sri abhayAmbhA...". As for BMK's tamizhAkkam of T's kritis, the translation was done by his (ex?) wife abhayAmbikA (it states so on the sleeve). So T did not redeem himself after all by being reborn as BMK, technically speaking.

Sethu Subramanian சொன்னது…

Pas:
Are you sure people will castigate you only "tomorrow" for writing poems in Thamizh? How about today? Just kidding!

Pas S. Pasupathy சொன்னது…

nAradA சொன்னது…
>.Pas:
>.>Are you sure people will castigate you only "tomorrow" >>for writing poems in Thamizh? How about today? Just >>kidding!

:-)))))

Pas S. Pasupathy சொன்னது…

அருணா சாயிராம் “ சும்மா சும்மா வருமா சுகம்” என்ற கனம் கிருஷ்ணய்யரின் பாடலைப் பாடுவதை
https://www.youtube.com/watch?v=c_SgdoVeTuk&noredirect=1
-இல் கேட்கலாம்.

Unknown சொன்னது…

faux pas by both poets