சனி, 18 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 27

மதுரை சோமு - 2 

( தொடர்ச்சி ) 


[ நன்றி: தினமணி கதிர் ] 

1971 -ஆம் ஆண்டு. தமிழிசைச் சங்கத்தின் ‘இசைப் பேரறிஞர்’ என்ற விருதைப் பெறுகிறார் மதுரை சோமு. அவருடைய அகாடமிக் கச்சேரியைக் கேட்டு  “சோ என்று கொட்டும் சோமு” என்று தினமணி கதிரில் எழுதுகிறார் சுப்புடு.  அந்த விமர்சனத்தில் ஒரு பகுதி :

சோமு பாடிய காம்போஜி அப்படியே நேரே, இருதயத்தைத் தொட்டது. அது என்ன மூர்ச்சனை ஐயா? காந்தாரத்தை வல்லின மெல்லினமாய் நாதஸ்வர பாணியில் கொடுக்கும்போது மெய் சிலிர்த்து விட்டது. அதே மாதிரிக் குழைவுகள் கொடுக்கும் பொழுது ஆனந்தமாக ‘மஸாஜ்’ பண்ணிக் கொள்வதுபோல் இருந்தது. சோமு ராகத்தை ஒரு பூரண சொரூபமாய் உருவகப் படுத்திக் கொள்கிறார். அவர் கண்ணோட்டமும், கைவீச்சும் அத்தைகைய பிரமையை நமக்கு உண்டுபண்ணுகின்றன. காம்போஜியில் பல இடங்களில் அவர் அந்த ராகத்துடனே இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவருக்கு சங்கீதம் சத்யப் பிரமாணம். “  

அடுத்து, தனக்குப் பிடித்த ஆறு ராகங்களைப் பற்றிச் சோமு அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

[ நன்றி: ராஜு அசோகன் ]

பிரபல எழுத்தாளர் ‘மணியன்’ சோமுவின் தீவிர ரசிகர். அவருடைய ஒரு கட்டுரை இதோ:[ நன்றி: ”இதயம் பேசுகிறது”, ராஜு அசோகன் ] 
கடைசியாக , சிவாஜி கணேசன் -சோமு அவர்களின் ஒரு சந்திப்பைப்
பற்றிய தகவலுடன் , இம்மடலை முடிக்கிறேன்!

[ நன்றி: சினிமா எக்ஸ்ப்ரஸ், ராஜு அசோகன் ] 
பி.கு. : 

இந்தச்  சிவாஜி -சோமு சந்திப்புப் பற்றிய  தகவலை மேலும் விவரமாக ( சரியாக?)  அறிய:
http://maduraisomu.com/somuvaipatri/thiraipadathai.htm 

என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:


1 கருத்து:

sapthagireesan சொன்னது…

பொதுவாகவே சங்கீதம் என்றாலே பிடித்த விஷயம். அதிலும் ஆனந்த விகடனில் வெளிவந்த அந்த காலத்து ஆடல் பாடல் எனக்கு மிகப்பிடித்தவற்றில் ஒன்று. தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.

ஆ. Na . சப்தகிரீசன்

கருத்துரையிடுக