வியாழன், 23 ஜனவரி, 2014

சங்கீத சங்கதிகள் - 28

அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி! ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் நினைவு தினம்.

பொதுவாக, ஒரு பிரபல பாடகர் தன் குருவல்லாத இன்னொரு பிரபல வித்வானுக்குப் பின்னால் உட்கார்ந்து தம்பூராவில் ஸ்ருதி போட்டுக் கொண்டே பாடுவது அபூர்வம் தான்! அப்படி இருக்கும்போது, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரான செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் எப்போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு ஸ்ருதி போட்டு, கூடவே பாடினார்? மேலே படியுங்கள்!
[ செம்மங்குடி; நன்றி: விகடன் ]

1944-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம். வழக்கம்போல் சென்னையில் இசை விழா நடந்து முடிந்த சமயம். ஜனவரியில் அடுத்து வரும்  தியாகராஜ ஆராதனைக்கு மும்முரமாய் ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. முதலில் ஆராதனை மஹோத்சவ சபைக்கு வேண்டி இருந்தது என்ன ? வேறென்ன ? வைடமின் ‘ப’ , பணம்தான்! “நிதி சால சுகமா” என்று பாடினால் விழா நடத்த முடியுமா?

உத்சவ நிதிக்காகத் தஞ்சாவூரில் 15 கச்சேரிகள் நடக்கின்றன. யாரெல்லாம் பாடினார்கள்? ( யாரெல்லாம் பாடவில்லை என்பதும் முக்கியம் தானோ? ) இதோ, அப்போது “விகட”னில் வந்த ஒரு விளம்பரத்தைப் பாருங்கள்!
( அரியக்குடி, செம்மங்குடி, மகாராஜபுரம் பாடினார்கள் என்பதைக் கவனிக்கவும்! )

பிறகு என்ன? 45-இல் நடந்த தியாகராஜ ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த கட்டுரையில் ( செல்கள் ஏப்பமிட்டபின் மிச்சமிருக்கும் !)  ஒரு பக்கம் இதோ!


பி. கு.1 : 

உங்களுக்கு ஒரு ‘போனஸ்’ : மேலேயுள்ள ராஜுவின் அற்புத நகைச்சுவைச் சித்திரம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புள்ள, ‘க்ளாஸிக்’ துணுக்கு என்பேன்! ஏன் தெரியுமா? 1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு, சப்பாத்தி போன்ற கோதுமை உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயம் வந்தது. இதைப் பற்றி வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்குத் தான் மேலே உள்ள கார்ட்டூன்!

பி.கு 2.
’ஜோக்’கைப் பார்த்த ஒரு நண்பர் அந்த இதழ் முழுவதிலும் இத்தகைய பல துணுக்குகள் இருந்தன என்று தெரிவிக்கிறார். அவர் சொன்ன இன்னொரு துணுக்கும் இதோ!

பி.கு.3:
அரிசிப் பஞ்சம் நீடித்தது. 1951-இல் “சிங்காரி” படம். தஞ்சை ராமையாதாஸின் பாடல் பிரதிபலிக்கிறது.

ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா -இந்த 
உலகினில் ஏது கலாட்டா
உணவுப் பஞ்சமே வராட்டா
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா

பாட்டை இங்கே கேட்கலாம் :

2:49 / 3:55 ORU JAANN VAYIREY ILLAADAA SSKFILM033 K N REDDI, KR @ SINGHKAARI

தொடர்புள்ள பதிவுகள்:
( 44 , 46 -ஆம் ஆண்டுகளில் நடந்த ஆராதனைகள் பற்றி ) 
தியாகராஜ ஆராதனைகள் : 40-களில்

சங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்

4 கருத்துகள்:

Innamburan S.Soundararajan சொன்னது…

1945- இல் இரண்டாம் உலகப் போர் காரணத்தால், தமிழ்நாட்டில் அரிசிப் பற்றாக் குறை ஏற்பட்டு

~என்னுடைய தாயார் இது பற்றி தன் சுயசரித்திரத்தில் கூறியிருக்கிறார்.

பதிவு அபாரம்.

sapthagireesan சொன்னது…

இரண்டாவது உலக மஹாயுத்தத்ின் போது வாரமொருமுறை ரேஷனில் கோதுமைக்கு பதிலாக டபல் ரொட்டி யும் கொடுப்பார்கள். பெரிய குடும்பத்திற்க்கு வாங்கிவரும்போது பெரிய பை நிறைந்து விடும். பிறகு இல்லத்தில் அதை எலிகளிடமிருந்து காப்பதும் இல்லத்தரசிக்கு ஒரு சவால் !


உலகப்போர் கடுமையாக நடந்துகொண்டிறந்தபோது, திருவையற்று உத்சவத்திற்க்கு தஞ்சையில் sangeethakkalaa வல்லுநர்களே நிதி சேகரித்து பங்களூர் nagarathnammaa அவர்கள் ஆரம்பித்துவைத்த பரம்பரையை தொடர்ந்த செய்தி மிகவும் போற்றும்படியாக உள்ளது.


தங்களுக்கு மனமார்ந்த நன்றி.


ஆ. ந. sapthagireesan

era.murukan சொன்னது…

main course-ஏ பிரமாதம். ராஜு கார்ட்டூன் போனஸ் dessert. நன்றி ப்ரொபசர் சார்

Ganesan Srinivasan சொன்னது…

அருமையான செய்திகளும், நகைச்சுவைத் துணுக்குகளும்! வரலாற்றுப்பொக்கிஷமாய்க் காத்திடுக!

கருத்துரையிடுக