வெள்ளி, 13 ஜூன், 2014

கொத்தமங்கலம் சுப்பு -8

ஆசியக் கதைமன்னன் அமரன் பேர் வாழியவே !
கொத்தமங்கலம் சுப்பு 

" என்னை ‘மகராஜனாக இருங்கள்’ என்று வாழ்த்திய அமரர் கல்கிக்கும் வணக்கம் “ --கொத்தமங்கலம் சுப்பு [ பின்னுரை, “பொன்னிவனத்துப் பூங்குயில்’ ]



“ காந்தி மகான் கதையை இந்நாட்டு மக்கள் கூட்டமாக அமர்ந்து ஆர்வத்துடன் கேட்கும் பொழுது ஒவ்வொருவர் முகத்திலும் இந்தியப் பண்பு ஒளிவீசும். அதில் அவரும் உணர்ச்சி வசப்படுவார். இதுவரை இந்த உலகில் எந்தக் கவிஞருக்கும் கிடைக்காத பெரும் பேறு இது“ 
                      --பேராசிரியர் கல்கி ( கல்கி, 6.8.1950 )
”ஸ்ரீ சுப்பு அவர்களே ஒரு ஸ்தாபனம். அவரே பல கலைகளின் உறைவிடம். “ --- பேராசிரியர் கல்கி, ஔவையார் படவிழா, 5-3-54

[ கல்கி,கொ.சுப்பு ]


பேராசிரியர் ‘கல்கி’ மேல் மிகுந்த மதிப்புக் கொண்டவர் கொத்தமங்கலம் சுப்பு. தன்னை மண்வாசனை வீசும் நாட்டுப் பாடல்களை எழுதத் தூண்டியவர்கள் ரசிகமணி டி.கே.சி, கல்கி என்று எப்போதும் பெருமிதத்துடன் பேசுவார் சுப்பு. வரலாற்று நாவல்களின் தந்தையான ’பொன்னியின் புதல்வர்’ ‘கல்கி’க்கு ஓர் அஞ்சலி என்று எண்ணியோ என்னவோ ‘கல்கி’ இதழில், 1967/68 -காலகட்டத்தில் ’பொன்னிவனத்துப் பூங்குயில்’ என்ற ஒரு வரலாற்று நாவலையும் எழுதி இருக்கிறார். [ ‘பூங்குயில் கூவும் ...’ என்ற பாடலையும் இயற்றியவர்  பொன்னியின் புதல்வர் கல்கி அல்லவா? :-) ]

கொத்தமங்கலம் சுப்பு விகடனில் தான் தன் பெரும்பான்மையான பாடல்களை எழுதினாலும், “சித்தத்தைப் பொன்னாக்கும் சித்தர்”, “ சங்கரர் ஏற்றிய தீபம்”, “காமகோடியில் இருகனிகள்” போன்ற சில பாடல்களைக் ‘கல்கி’ இதழ்களில்  எழுதியிருக்கிறார். அப்படிக் ‘கல்கி’யில்  எழுதிய சில பாடல்களில் ஒன்றுதான் நீங்கள் கீழே காண்பது . ‘

கல்கி’ டிசம்பர் 54-இல் மறைந்தவுடன் ‘கல்கி’ இதழில் அவர் எழுதிய கவிதை இது. அவருக்குக் ‘கல்கி’மேல் இருந்த பக்தியும், மதிப்பும் உணர்ச்சி வெள்ளமாய் இக்கவிதையில் வெளிப்பட்டிருப்பதைப் படிக்கலாம்.


[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள் :

கொத்தமங்கலம் சுப்பு



2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

visit: http://ypvn.0hna.com/

Pas S. Pasupathy சொன்னது…

நண்பர் ராஜகோபாலன் ( raja124gopalan@gmail.com) அனுப்பிய கருத்து:
வறட்டு பெயர்களாக வரலாற்று புழுதியில் புதைந்து கிடந்த மா மன்னர் களுக்கு உயிர் கொடுத்து வாழவைத்தவர் கல்கி. தமிழ் நாடு அலெக்ஸாண்டர். தூமாஸ்