ஞாயிறு, 31 மே, 2020

1550. குறும்பாக்கள்: 12-14

குறும்பாக்கள்: 12-14
பசுபதி'சந்தவசந்த'க் கவியரங்கத்தில் ( 2018) வெளியானவை.

12.
பங்களாக்கச் சேரியென்றார் சேட்டு
பாகவதர் சென்றுவிட்டார் கேட்டு !
. . மாடியறை உட்புகுந்தார்
   பாடகரோ ஏமாந்தார்
அங்கிருந்த கச்சேரி சீட்டு!  

13
பாட்டுக் கணக்கில்புலி  சாம்பு
பார்த்தவர்முன் பேசிடுவான் வீம்பு
. . வேம்புவென்ற பெண்பார்த்தான்
. . வியந்தவளை  மணம்செய்தான்
வீட்டுக் கணக்கிப்போ  வேம்பு!

14
பாடகருக் கிசைநடுவே தாகம்
பானமொன்றும் கிட்டாத சோகம்
. . சீடனுக்குப் புரியவில்லை
. . செயலெதுவும் தெரியவில்லை
பாடிவிட்டார் காபியென்ற ராகம் !  

15. 
இலக்கியத்தில் நகைச்சுவையும் உண்டு
இல்லையென்று சொல்லுபவன் மண்டு!
   பலவகையாய்க் குறும்பாக்கள்
   கலகலப்புக் கதைகவிதை
பலமாகச் சிரித்திடுவீர் விண்டுநாம்
பரிசாக நகைக்களிப்போம் செண்டு !

தொடர்புள்ள பதிவுகள்:

குறும்பாக்கள்

கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக