கணையும் கானமும்
மூலம்: Henry Wadsworth Longfellow ( லாங்ஃபெல்லோ)
தமிழில்: பசுபதி
( அமுதசுரபி 2004 தீபாவளி மலரில் வெளியான கவிதை )
கணையும் கானமும்
***
விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில்
. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை
கண்பின் தொடர முடியாத -- கடிய
. . கதியில் கணையும் பறந்ததுவே.
விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில்
. . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை.
கண்வலு நுட்பம் எவர்க்குண்டு -- பறந்த
. . கானப் பயணம் தொடர்வதற்கு?
கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் -- உடையாக்
. . கணையை ஆல மரமொன்றில்
கண்டேன் மீண்டும் முழுப்பாடல் -- என்றன்
. . நண்பன் ஒருவன் இதயத்தில் .
The original poem:
Arrow and the Song, The
by Henry Wadsworth Longfellow
I shot an arrow into the air,
It fell to earth, I knew not where;
For, so swiftly it flew, the sight
Could not follow it in its flight.
I breathed a song into the air,
It fell to earth, I knew not where;
For who has sight so keen and strong,
That it can follow the flight of song?
Long, long afterward, in an oak
I found the arrow, still unbroke;
And the song, from beginning to end,
I found again in the heart of a friend.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக