வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கொத்தமங்கலம் சுப்பு - 4 : ராசரத்தினம் நாதசுரத்திலே ...

 ராசரத்தினம் நாதசுரத்திலே 
கொத்தமங்கலம் சுப்புஆகஸ்ட் 27. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம். 

சென்னையில் 1953 சங்கீத ஸீஸன்.

புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளைக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு. ‘ஆனந்த விகடனில்’ வழக்கமாக வரும் ஆடல் பாடல் பகுதியில் இப்படி ஒரு குறிப்புக் காணப்படுகிறது:

“அசாதாரணமான கற்பனையுடன் இன்ப நாதத்தைப் பொழிந்து ரஸிகர்களை மூன்று மணி நேரம், மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பம் போல், மெய்ம்மறக்கச் செய்துவிட்டார் ஸ்ரீ ராஜரத்னம். இந்த சங்கீத விழாவுக்கே இந்தக் கச்சேரி ஒரு தனி சோபையை அளித்தது என்று கூடச் சொல்லலாம் .” திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரியை ரேடியோவில் கேட்டுப் பரவசமடைந்த கொத்தமங்கலம் சுப்பு உடனே எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பிய  கவிதை இதோ:[நன்றி: ஆனந்த விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள் :

சீசன் 53 -1
சீசன் 53 -2
சீசன் 53 -3

கொத்தமங்கலம் சுப்பு

டி.என். ராஜரத்தினம் பிள்ளை 10

4 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஐயா!
கற்றாரைக் கற்றார் காமுறுவர் என்பதுபோல், ராசரெத்தினம் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்தை சுப்பு அவர்கள் அனுபவித்து
கவி யாத்துள்ளார்.
இன்று இந்த உன்னத கலையின் நிலை வேதனை தருகிறது. நடிகன் பிள்ளை நடிகனாக விரும்புகிறான், அரசியல்வாதியும் அப்படியே, சங்கீத வித்துவான்கள் கூட வாரிசை உருவாக்குகிறார்கள்.
ஆனால் இந்த நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வாரிசை உருவாக்க இப்போது ஆர்வம் காட்டுவதில்லை. இக்கலை சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை. அதன் அருமையை இன்றைய தலைமுறை உணரவில்லை. ஏன்? இசையை அறிந்தோர் கூட சாதி ரீதியாக இந்த உன்னதகலையை ஒதுக்குகிறார்கள்.
மாதம் பூராக நடக்கும் மார்கழி இசை விழாவில் ஆரம்ப நாளன்று ஒரு சில மணி நேரம் ஒதுக்குகிறார்கள்.
மனம் வேதனையாக இருக்கிறது.
சேக் சின்ன மொலானாவுக்கு பின் ஒரு காத்திரமான வித்துவானை உருவாக விடவில்லையே இவ்விசைச் சமூகம்.
வாய்பாட்டு, வீணை, வயலின், மென்டலின், ஏன் சக்ஸ்சபோனுக்கு கூட இன்றைய தலைமுறை முண்டியடிகிறது.
இந்த உன்னத மங்கள இசையைச் சீண்டுவாரில்லை.
எங்கள் ஈழத்திலும் போர்ச் சூழலால் அனுபவம் மிக்க வித்துவான்கள் சரியான வருவாயின்றி ,அவர்கள் காலத்தை முடித்துவிட்டார்கள்.
புதிய தலைமுறை இப்போதே தலையை உயர்த்துகிறது. ஆனால் பழைய எழுச்சியை அடைய அவர்கள் கடக்க வேண்டிய காலமதிகம்.
அதனால் இக்கலையின் தாயகமாம் , தமிழகம் விழித்தால் இக்கலை தொடர வாய்ப்புண்டு. இல்லாவிடில் நம் கண்முன்னே
இக்கலை அழியக் கூடிய சூழலே!
இணையத்தில் , நடிகர் திலகத்தின் தம்பி சண்முகம் அவர்கள் திருமணத்தன்று காரைக்குறிச்சி அருணாசலம் அவர்கள்
3 மணி நேரத்துக்கு மேல் வாசித்த அந்த இனிய நாதம், இன்று எந்த திருமணத்தில், விழாவில் ஒலிக்கிறது. அன்று அந்த சபையில் இருந்தோர் இசையறிந்தோர், இன்று!!!
இவ்வுன்னத கலையின் எதிர்காலம் மிக மனவேதனையைத் தருகிறது. உலகில் ஒரு தமிழரசு இதற்காகவாவது தேவை!

Melasevel group சொன்னது…

அவருடைய தோடி ராக விஸ்தாரமான ஆளாபரனையும் கீர்த்தனையும் நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம்

வடலிப்பாதை சொன்னது…

தவில் வித்துவான் யாழ்ப்பாணம் தெட்சணமூர்த்தியின் வாசிப்பைக் கேட்டு சுப்புடு எழுதிய விமர்சனத்தை இன்னொருமுறை வாசிக்கவேண்டுமென்பது என் விருப்பம். இது உங்களிடம் இருந்தால் இந்த வலைப்பூவில் பதிவீர்களா?

Pas S. Pasupathy சொன்னது…

எங்கே , எப்போது எழுதினார்? கிட்டினால் பதிவிடுவேன்.

கருத்துரையிடுக