வெள்ளி, 23 நவம்பர், 2012

லா.ச.ராமாமிருதம் -2: சிந்தா நதி - 2

19 . மணிக்கொடி சதஸ் - 2
லா.ச.ரா

தொடர்புள்ள முந்தைய கட்டுரை:

மணிக்கொடி சதஸ் -1முதலில், இந்தத் தொடருக்கு ஓவியங்கள் வரைந்த உமாபதி அவர்களைப் பற்றிச் சில வார்த்தைகள். ’கல்கி’ , ‘பூந்தளிர்’ போன்ற பல இதழ்களிலும் நிறைய வரைந்திருக்கும் இவரைப் பற்றி அதிகம் விவரங்கள் எனக்குக் கிட்டவில்லை. கடைசியில், 20-ஆண்டுகளுக்கு முன் , “கல்கி’யில் வந்த ஒரு குறிப்புக் கிட்டியது:

 படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தபோதே   ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார் இளைஞர் உமாபதி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவரைக் குடும்ப வியாபாரத்தைப் பொறுப்பேற்க நெருக்கின. வியாபாரக் கணக்குப் புத்தகத்தின் ஓரமெல்லாம் படம் போட்டுத்   துணை வணிக அதிகாரியின் கோபத்துக்கு உள்ளானார் உமாபதி. “நீ உருப்பட மாட்டாய்” என்று அவரால் ‘ஆசி’ கூறப் பெற்றவர், முதன் முதலில் ராஜாஜியைக் கார்ட்டூனாக வரைய , ஹிந்துஸ்தான் இதழின் அட்டைப்படத்தில் அது பிரசுரமாயிற்று. ‘கல்கி’ நடத்திய அமரர் சந்திரா நினைவுப் போட்டியில் பங்கேற்றுப் பரிசும் பெற்றார். பல்லாயிரக் கணக்கில் படங்களும், கேலிச் சித்திரங்களும் வரைந்துள்ள இவரை ஒரு ‘குவிக் ஆர்டிஸ்ட்’ என்கிறது ‘கல்கி’க் குறிப்பு.

‘சிந்தா நதி’த் தொடரில் லா.ச.ரா ‘மணிக்கொடி சதஸை’ப் பற்றி எழுதிய இரண்டாவது கட்டுரை இதோ.

=====

பின் குறிப்பு : 1)  மாஸ்டர் விட்டல் = முதல் இந்தியப் பேசும் படமான ஆலம் ஆரா ( 1931) -இன் கதாநாயகன்.

2) ’சுமங்கல்யன்’ ‘அபூர்வ ராகம்’ கதைகள் லா.ச.ரா -வின் ‘பச்சைக் கனவு’ தொகுப்பில் உள்ளன. ‘துறவு’ ?

3) ” தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல்” என்று லா.ச.ரா. குறிப்பிடும் ‘இதயநாதம்’ என்ற இசை நாவலை எழுதிய சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையை எழுதியுள்ளார் லா.ச.ரா. அப்படியே செல்லப்பா, பிச்சமூர்த்தியையும் பற்றி. இவை ’உண்மையின் தரிசனம்’ என்ற லா.ச.ரா தொகுப்பில் உள்ளன.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

லா.ச.ராமாமிருதம் படைப்புகள்

1 கருத்து:

Angarai Vadyar சொன்னது…

Thank you for the information about artist Umapathy. I believe that any one can learn how to draw well at any age. I am a living proof. A year ago, when I was 79, I started learning how to to draw faces from YouTube lessons and the used books I bought from
amazon.com. I am very happy with my progress and I enjoy the envy of my acquaintances. Ananth Sundararajan.