திங்கள், 29 செப்டம்பர், 2014

பாடலும் படமும் - 8 :அபிராமி அந்தாதி -2

அபிராமி அந்தாதி -2
நவராத்திரி சமயத்தில் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அபிராமி பதிகம் இரண்டையும் பலர் படிப்பதும், பாடுவதும் உண்டு.  கடினமான ‘கட்டளைக் கலித்துறை’ என்ற  கவிதை இலக்கணத்தில் மிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தி, அதே சமயத்தில் பக்தி உணர்ச்சியைப் பொழிந்தும் பாடியிருக்கிறார் அபிராமி பட்டர். 

அவரைப் போற்றி நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு வெண்பா’


 கட்டளைக்க லித்துறைக்குக் கட்டமின்றி யுக்திசொல்லிப் 
பட்டரன்று தந்தனர்சொற் பெட்டகத்தை -- துட்டரஞ்சும் 
பத்திரையைப் பத்திரவில் பத்திசெய யுக்திசொலும் 
வித்தகரின் நற்கவிதை மெச்சு.

[ பத்திரவு = தசரா ] 

அபிராமி அந்தாதியிலிருந்து இரு பாடல்கள் . கோபுலுவின் 

 கோட்டோவியங்களுடனும், திருமதி தேவகி முத்தையாவின் 

விளக்கங்களுடனும். 

[ நன்றி : இலக்கியப் பீடம் ]
தொடர்புள்ள பதிவுகள் :

3 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
தொடருங்கள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

vjpremalaha சொன்னது…

அருமையான பதிவுகள்

Unknown சொன்னது…

பத்திரையாம் பத்தினியாம் பாதமலர்ப் பாமாலை
உத்திமிகும் அந்தாதி ஒப்பில்லாச் செய்யுளாய்த்
தித்திக்குஞ் செந்தமிழில் செப்பிவைத்த நேர்த்திதனை
முத்தாய் உரைத்தார் உயர்வு !

கருத்துரையிடுக