வியாழன், 7 ஜூலை, 2016

ஆனந்தசிங்: காட்டூர்க் கடுங் கொலை -1

 காட்டூர்க் கடுங் கொலை -1 

ஆரணி குப்புசாமி முதலியார் 

ஜூலை 7.  ஆர்தர் கானன் டாயிலின் நினைவு தினம்.கானன் டாயிலின் ‘  Adventure of  Black Peter'  என்ற ஷெர்லக் ஹோம்ஸ் கதையை  ஆரணியார் மொழியாக்கத்தில் இதோ  படிக்கலாம் !  :

கதைகளில்  ஆரணியார்  வைக்கும் பெயர்கள் அருமையாய் இருக்கும்!
காட்டு:   Black Peter -க்கு அவர் வைத்த பெயர் பள்ளியூர் கரியன்!

(    இதைப்போலப்  பல ஆண்டுகளுக்கு முன் Harry Black and the Tiger - என்ற  ஆங்கிலத் திரைப்படத்தை “ ஹரிஹரக் கறுப்பனும் பயங்கரப் புலியும்” என்று மொழிபெயர்த்துத் தமிழ்நாட்டுச் சினிமா அரங்குகளில் காட்டியது சிலருக்கு நினைவிருக்கலாம்!  )

==================  

முதல் அத்தியாயம்

ஆனந்தஸிங் பணத்திற் காசைப்பட்டுச் செல்வந்தர்கள் விஷயமாய்த் தொழில் செய்யப்போவதில்லை. நடந்த குற்றத்தின் தன்மை அவன் மனதைத் தூண்டத் தக்கதா யிருக்கவேண்டும். கண்டு பிடிக்கக் கஷ்டமா யிருக்கும் ஒரு குற்றத்தைப் பற்றிப் போலீஸார் உதவி செய்யும்படி வேண்டிக்கொண்டால் அவன் சற்றும் சுய நலமாவது கைமாறாவது கருதாமல் சிரத்தையோடு அவர்களுக் குதவிபுரிவான். ஒரு காலத்தில் அவன் அந்த நகரத்தில் ஐந்திடங்களில் ஐந்து வெவ்வேறு பெயர்களோடும் வெவ் வேறு மாறு வேடங்களோடும் சஞ்சரித்து வந்தான். அச் சமயம் இரண்டு மூன்று அதிசயமான கொலைகள் நடந்திருந்தன. யாராரோ முரட்டு மனிதர்கள் அவன் வாசஸ்தலத்திற்கு வந்து ஆனந்தஸிங்கின் மாறு பெயர்களில் ன்றைக் கூறி அவனைக் கேட்பார்கள்.

விஸ்வநாதருக்கு அவன் எந்தவிடத்தில் என்ன வேலை செய்கிறான், எந்தக் குற்றத்தின் சம்பந்தமாய் வேலை செய்கிறான் என்று தெரியாது. எந்த இரகசியமும் தக்க சமயத்தில் தன்னிடம் கூறுவானென்று அவருக்குத் தெரியும் , ஆகையால், அவனே கூறுமுன் அவர் வலிய வந்து எந்த இரகசியத்தைப் பற்றியும் அவனைக் கேட்பதில்லை. இவ்வாறிருக்கையில் ஒருநாள் காலையில் வெளியில் சென்ற ஆனந்தஸிங், விஸ்வநாதர் அவனுக்காக நெடுநேரம்  போஜனத்திற்கு காத்துக் கொண்டிருந்து கடைசியில் உண்ண உட்கார்ந்தபோது அறைககுள் வந்தான். அவன் அக்குளில் பயங்கரமான வேலாயுதம் போன்ற ஒரு நீண்ட ஈட்டியைக் குடைபோல் இடுக்கிக்கொண்டிருந்தான்.
அதைக் கண்ட விஸ்வநாதர் வியப்பும் பயமுமடைந்து, “இதென்ன  ஆனந்தஸிங்!  இதை அக்குளில் வைத்துக் கொண்டு பட்டப்பகலில் இந் நகர் வீதிகளின் வழியாகவா டந்து வந்தாய்?"

ஆனந்த:-- நான் வண்டிகளில் கசாப்புக் கடைக்குக் சென்று வந்தேன்.
விஸ்வநாதர் வியப்போடு 'கசாப்புக் கடைக்கா? “  என்றார்.

ஆனந்த: - ஆம் மிக்க பசியோடு வருகிறேன். சாப்பாட்டிற்கு முன் தேகாப்பியாசம் செய்வது இணையற்ற பயனை யளிக்கிறதல்லவா? ஆயினும் நான் எவ்விதமான அப்பியாசம் செய்துவிட்டு வந்தேன் என்பதை மட்டும் நீ ஊகித்துக் கூறக்கூடுமா?

விஸ்வ:- முடியாது.

ஆனந்த:-- அரை மணிக்கு முன்பு மட்டும் நீ கசாப்புக் கார சந்தில் 4-வது கடையின் பின் பக்கத்திலுள்ள கூடத்திற்கு வந்து பார்த்திருந்தால், அங்கு மேல் தூலத்திலுள்ள ஒரு கொக்கியில் ஒரு இறந்த பன்றி கட்டித் தொங்கவிடப் பட்டிருப்பதையும், ஒருவன் இந்த ஈட்டியால் அதை யூடுருவக் குத்தப் பலமான பிரயத்தனம் செய்துகொண் டிருந்ததையும் பார்த்திருப்பாய். அப்படிக் குத்திக்கொண் டிருந்தவன் நான்றான். ன் சொல் பார்ப்போம்?


விஸ்வ:- சற்றேனும் எனக்கு விளங்கவே யில்லை. என் அப்படிச் செய்துகொண்டிருந்தாய்?

ஆனந்த-'ஏனெனில் அதற்கும் காட்டூர்க் கொலைக்கும் ஒருவித சம்பந்தம் இருக்கிறதென்று என் மனதிற் பட்டிருக்கிறது. அந்த நிதானத்தை அறிந்துகொண்டேன்,' ன்றான்.

ஆனந்தஸிங் அவ்வாறு கூறி வாய் மூடுமுன் அறையின் கதவு திறக்கப்பட்டதும் போலீஸ் உடை தரித்த ஒருவன் உள்ளே வந்தான். அவனைக் கண்ட ஆனந்தஸிங், 'ஆ இன்ஸ்பெக்டர் அண்ணுராவ் ! வா! வா! உன் தந்தி இரவுதான் வந்தது. நீ வரும் வேளை நெருங்கிவிட்ட தென்றே நான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வா! போஜனம் செய்ய,’ என்றான். அண்ணுராவ் என்பவனுக்குச் சுமார் முப்பது வயதிருக்கும். அவன் மிக்க சுறு சுறுப்பும் சூக்கும அறிவுமுடையவன். ஆனல் குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் இன்னும் பிரக்யாதி பெறவில்லை. தக்க குற்றங்களும் இதுகாறும் சம்பவிக்கவில்லை. இவன் நல்ல பிரக்யாதி பெறுவானென்று ஆனந்தஸிங் நம்பியிருக் தான். அதனாலேயே அவன் மேல் மிக்க விசுவாசம் காட்டி வந்தான். அச்சமயம் அவன் முகம் வாடி இருளடைந்திருந்தது. அவன் ஆனந்தஸிங்கை நோக்கி,

வந்தனம், நான் வருமுன்பு போஜனம் செய்து கொண்டே வந்தேன். நான் இக்கொலைப்பற்றி ரிபோர்ட் செய்வதற்காக நேற்றே நகரத்திற்கு வந்தேன்." என்றான்.

ஆனந்த:- என்னவென்று ரிபோர்ட் செய்தாய்?

அண்ணுராவ் மனச் சோர்வோடு, “ என்னென்று? ஜெயமடையவில்லை யென்றுதான் ரிபோர்ட் செய்தேன்."

ஆனந்த :- கொஞ்சமேனும் உளவு அகப்படவே இல்லையோ?

அண்ணு: - ஒன்றுமே யில்லை. –

ஆனந்த-அடடா! அப்படியானால் நான் வந்து பார்த்தே தீரவேண்டும்.

அண்ணு-அந்தோ! நீ ப்படியேனும் வரவேண்டுமென்றே கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கோ ஒன்றுமே புலப்படவில்லை. தயவுசெய்து வந்து கொஞ்சம் உதவி செய்தால் பெரிய புண்ணியமாகும்.

ஆனந்த:- சரி, சரி. இதுவரையில் அகப்பட்டிருக்கும் சாக்ஷியங்களை யெல்லாம் முன்னமே பத்திரிகைகளில் பார்த்துக்கொண்டேன். கொலை நடந்த விடத்தில் புகையிலைப்பை யொன்றிருந்ததாய்க் கூறப்படுகிறதே அதில் ஒன்றும் உளவில்லையோ?” என்றான்.

தைக் கேட்ட அண்ணுராவ் ஆச்சரிய மடைந்து, ”அதில் என்ன இருக்கிறது? அது அவனுடையதே. பையின் உட்பக்கம் அவன் பெயரின் முன் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் பை ஸீல் என்ற ஜல சரத்தின் சர்மத்தால் செய்யப்பட்டது. அவன்றான் அந்த ஜலசங்களை வேட்டையாடிப் பிடிக்கும் தொழிலிலேயே யிருந்தவன்.என்றான்.

ஆனந்த-அது சரிதான். புகையிலைப் பை மட்டும் இருந்ததேயன்றி சுங்கான் இல்லையே.

அண்ணு:-இல்லை, தேடிப் பார்த்தோம். சுங்கான் ஒன்றேனும் அங்கில்லே. ஆனல் அவன் அடிக்கடி சுங்கான் பிடிப்பவனல்ல. எப்போதேனும் ஒரு வேளையே பிடிப்பவன். அப்படி யிருந்தும் ஒரு சமயம் யாராவது தன் சினேகிதர்கள் வந்தால் உதவுமென்று கையிருப்பில் கொஞ்சம் புகையிலே வைத்துக்கொண்டிருந்திருப்பான்.

ஆனந்த-அதிற் சந்தேகமில்லை. அப்படியே யிருக்கவுங் கூடும். ஆயினும் நானாக யிருந்தால் அந்தப் பையிலிருந்து தான் என் ஆராய்ச்சியைத் தொடங்கியிருப்பேன். இதோ யிருக்கிற நமது நண்பர் விஸ்வநாதருக்கு இச்சம்பவம் இன்னும் தெரியாது. நானும் பத்திரிகைகளில் பார்த்ததே யன்றி வேறில்லை. ஆகையால் தயவுசெய்து நடந்த சங்கதியை ஆதியோடந்தமாய்ச் சுருங்கக் கூறின் நலமாயிருக்கு மென நினைக்கிறேன்,” என்றான்.

அண்ணுராவ் தன் ஜேபியிலிருந்த ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு 'இதோ சில குறிப்புகளிருக்கின்றன. இறந்தவன் சரிதையைத் தெரிந்த வரையில் சுருக்கமாகக் கூறுகிறேன்,” என்று கூறத் தொடங்கினான்:

இறந்தவன் பெயர் பள்ளியூர்க் கரியன். அவனுக்கு வயது 60 இருக்கும். ஸீல்கள் திமிங்கிலங்கள் இவற்றை வேட்டையாடிப் பிடிப்பதில் மிக்க துணிகரமான தீரன். அவன் நெடுநாள் திமிங்கில வேட்டையாடும் கடல்யாளிஎன்ற கப்பலுக்குக் கப்பித்தானா யிருந்தான். சில வருடங் கள் கழித்து அந்த வேலையை விட்டுவிட்டு இரண்டொரு வருடங்கள் யாத்திரை செய்து கடைசியில் காட்டூரில் கொஞ்சம் பூமி வாங்கிக்கொண்டு அக்கிராமத்தின் ரத்தில் தனியே ஒரு வீடு கட்டிக்கொண்டான். அங்குபோய்ச் சேர்ந்து இப்போது ஆறு வருடங்களாகின்றன. அங்கேயே அவன் மடிந்து இன்று சரியாய் ஏழு நாட்களாகின்றன.

அவனிடத்தில் சில அசாதாரணமான குணங்களுண்டு. சாதாரணமாய் மெளனமாய் சந்தோஷமில்லாம லிருப்பவன். அவன் குடும்பத்தில் அவன் மனைவியும், சுமார் 20 வயதுடைய ஒரு குமாரத்தியும், இரண்டு வேலைக்காரிகளுமே யிருக்கிறார்கள். வேலைக்காரிகள் அடிக்கடி மாறிக் கொண்டே யிருப்பார்கள். ஏனெனில் அக் குடும்பத்தில் அவனுடைய கொடூர நடவடிக்கைகளால் சற்றேனும் சந்தோஷமென்பதே கிடையாது. சில வேலைகளில் அவனுடைய கொடிய டக்கைகள் ஒருவராலும் பொறுக்க முடியாமற் போம். அவன் ஓயாத குடியன். வெறி அதிகமாய்விடும் சமயங்களில் மகா கொடிய இராசக்ஷதனிலும் பயங்கரமானவனாய் மாறிவிடுவான். ஒவ்வொரு சமயங்களில் தன் மனைவியையும் புத்திரியையும் வீட்டருகிலுள்ள தோட்டத்தைச் சுற்றிச்சுற்றித் துரத்தியடிப்பான். அவன் போடும் கூச்சலைக் கேட்டு சமீபத்திலுள்ள கிராமத்தார் யாவரும் பயந்து அலறி நித்திரையை விட்டெழுந்து கொள்வார்கள்.

ஒருநாள் அவனுடைய இரக்கமற்ற கொடிய நடக்கைகளைக் கண்டித்து அவனுக்கு ற்புத்தி புகட்ட முயன்ற அக்கிராம குருவை அடித்துவிட்டான். முடிவாய்க் கூறுகிறேன் அவனைப்போன்ற அபாயகரமான துஷ்டன் வேறொருவனைப் பார்ப்பது அரிதினும் அரிதேயாகும். அவன் கடல்யாளி," என்ற கப்பலுக்குத் கப்பித்தானா  யிருந்தபோதும் அப்படித்தா னிருந்தான். கப்பலிலிருந்தவர்களெல்லாம் அவனைக் கண்டால் துஷ்ட மிருகத்தைக் கண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இவனுக்குக் கரியன் என்பதற்குப் பதில் கருங்காலன்' (கறுப்பு எமன்) என்று மாறுபெயர் வைத்தார்கள். அவன் கறுப்புத் தாடியும் காண்போரனைவர்க்கும் பயத்தை யுண்டாக்கு மென்பதில் சந்தேகமேயில்லை. யாவருக்கும் அவன்மேல் முழுதும் வெறுப்பே. அவன் இவ்வாறு கொடூரமாய்க் கொலையுண்டதற்காகப் பரிதாபம் காட்டுகிறவர்கள் ஒருவரேனுமில்லை.

மரண விசாரணையைப் பற்றிய ரிபோர்ட்டில் அவனுடைய கப்பலறையைப்பற்றிய விவரத்தை யறிந்து கொண்டிருப்பாய். உன் சினேகர்க்கு அது தெரியாது. அவன் தன் வீட்டிற்குச் சுமார் நூறு நூற்றைம்பது கெஜ துரத்திற் கப்பால் மரப்பலகைகளால் கப்பலிலுள்ள கப்பித்தானுடைய அறையைப்போலவே ஒரு அறை கட்டிக் கொண்டான். அங்குதான் அவன் இரவில் சயனித்துக் கொள்வது. அது 16-அடி நீளம் 10-அடி அகலம் உள்ளது. அதன் பெயர் கடலறை. அதன் சாவியை அவன் ஜேபியிலேயே வைத்திருப்பான். வேறு யாரும் அதற்குள் நுழையலாகாது. அதன் பக்கங்களில் சிறு சாளரங்கள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றிலும் திரை யிடப் பட்டிருந்தது. அத்திரைகள் ஒருபோதும் நீக்கப்படுவதே யில்லை. அச்சாளரங்களில் ஒன்று இராஜ பாட்டையைப் பார்த்தாற்போ லிருக்கிறது. இரவில் சாளரத்தில் தீப வெளிச்சம் தெரிகிறபோது வழியில் போகும் ஜனங்கள் 'அடடா இந்தக் கருங்காலன் இந்த இரவில் என்ன செய்கிறான்,' என்று ஒருவர்க்கொருவர் வியப்போடு பேசிக்கொள்வார்கள். அச் சாளரந்தான் மரண விசாரணையில் சொல்ப உளவைக் காட்டிற்று.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கல் தச்சன் இரவு சுமார் ஒரு மணிக்குப் பாதை வழியாய்ச் செல்லும்போது, அச்சாளரத்தின் திரையில் தீபவெளிச்சம் நன்றாய்ப் பிரகாசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான். அத்திரையில் ஒரு மனிதன் தலையின் நிழல் தெரிந்ததாகவும் அது தாடியுடைய தலையென்றும், னால் அது கரியன் முக மல்லவென்று தாடியின் வித்தியாசத்தால் நன்றாய்த் தெரிந்த தென்றும் அவன் பிரமாணிக்கமாய்க் கூறினான். திங்கட் கிழமை யவன் இதைக் கண்டது. கொலை நடந்தது புதன் கிழமை.

கொலை டந்ததற்கு முன்னாளாகிய செவ்வாய்க்கிழமை கரியன் மிக்க மூர்க்கக் குணத்திலிருந்தான். அன்று. வெறிக்கக் குடித்து மிக்க பயங்கரமான ஒரு கொடூர காட்டு. மிருகம்போ லிருந்தான். அவன் வீட்டை நோக்கி வரும் சத்தத்தைக் கேட்டால் வீட்டில் இருக்கும் யாவரும் நடு நடுங்கிப்போப் பயத்தால் தூர ஒட்டம் பிடிப்பார்கள். அன்றி இரவு வழக்கம்போல் கடலறைக்குள் போப் விட்டான். இரவு சுமார் இரண்டு மணிக்கு அவன் பயங்கரமான ஒரு கூச்சல் போட்டான். அது வீட்டிலிருப்பவர்களுக்குக் கேட்டது. ஆனல், அவன் அதிகமாய்க் குடித்திருக்குங் காலங்களில் அவ்வாறு சத்தங் கேட்டதைப்பற்றி யாரும் கவலையெடுத்துக் கொள்ளவில்லை. காலையில் அவன் அறையின் கதவு சற்று திறந்திருப்பதைக் கண்டு வியப்புற்றார்கள். யாவர்க்கும் அவனிடமிருந்த பயத்தால் பகல் பன்னிரண்டு மணி வரையில் ஒருவராவது அந்த அறைக்குள் நுழையத் துணியவில்லை. கடைசியில் சுமார் பன்னிரண்டு. மணிக்கு பலவித சத்தங்களிட்டுப் பார்த்து, உள்ளிருந்து ஒரு சந்தடியும் கிளம்பாதிருக்கவே ஒருவன் எட்டிப் பார்க்கத் துணிந்தான். எட்டிப் பார்த்தவர்களெல்லாம் அங்கிருக்கும் காட்சியைக் கண்டதே வீறிட்டலறிக் கிராமத்திற்கு ஒட்டம் பிடித்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் நான் அங்கு சென்று விசாரணை செய்ய ஆரம்பித்தேன்.

நான் கூடியவரையில் சற்றுக் கலவரமடையாத மனமுடையவனே யென்பது உனக்குத் தெரிந்த விஷயமே. அப்படி யிருந்தும் நான் அவ்வறைக்குள் எட்டிப் பார்த்ததே திடுக்கிட்டு  மனங்கலங்கிவிட்டேன். அறை முழுதும் ஈக்களும் வண்டு முதலியவைகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. தரையும் சுவர்களும் ஆடறுக்கும் தொட்டிபோல் எங்கும் இரத்தமயமாயிருந்தது. அவன் அதற்குக் கப்பலறையென்று பெயர் வைத்தது போல் அது கப்பல்களில் கப்பிக்கானிருக்கும் அறை எப்புடி யிருக்கிறதோ அப்படியேயிருக்கிறது. அதற்குள் சென்றால் கப்பலுக்குள் ஒரு அறையிலிருப்பதுபோலவே தோன்றும். அறையின் ஒரு கோடியில் ஒரு தொட்டி யிருந்தது. ஒரு கப்பற் பெட்டி, பூமிப் படங்கள, கடலில் வழிகாட்டும் படங்கள், கடல்யாளிஎன்ற கப்பலின் படம் ஒன்றுஒரு அலமாரியில் வரிசையாய் புத்தகங்கள், எல்லாம் ஒரு கப்பலில் கப்பித்தான் அறையில் எப்படி யிருக்குமோ
அப்படியே யிருந்தன. அறையின் மத்தியில் கறுப்பன் அவன் முகம் வேதனையோடு மேலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. விசாலமான
மார்பில் ஒரு எறி ஈட்டி குத்தப்பட்டிருந்தது. ( அது ஒரு பலமான பெரிய ஈட்டி. அதன் கைப்பிடி முனையில் நீண்ட ஒரு கயிற்றைக் கட்டிக் கடலில் திமிங்கிலத்தின் மேல் வீசி றிந்து வேட்டை யாடுவார்கள்.) அந்த ஈட்டி அவன்
முதுகில் ஊடுருவிப் பின் பக்கமிருந்த பலகையில் இறங்கி யிருந்தது. அவன் தேகம் அந்த ஈட்டியால் பலகையில் தைக்கப்பட்டிருந்தது. அவன் கூச்சலிட்ட போதே பிராணன் நீங்கி விட்டிருக்கும். நீர் ஆராய்ச்சி செய்கிற மார்க்கங்களை நானறிந்து கொண்டிருக்கிறேனாதலால் அதன்படி ஜாக்கிரதையாய்ப் பார்த்தேன். சவத்தை அப்புறப்படுத்த அனுமதி யளிக்கு முன் அறையின் கீழ்ப் பக்கமும் வெளிப்புறங்களிலும் கால் அடிகள் ஏதாவதிருக்கின்றனவோ வென்று மிக்க ஜாக்கிரதையோடு பார்த்தேன்.  காலடிகளொன்றும் அகப்படவில்லை."

ஆனந்தஸிங்:-  உனக்கு ஒரு காலடியும் அகப்பட வில்லையோ?” என்றான்.

அண்ணு-"ஆம், உண்மையாகவே ஒரு காலடியு மில்லை,”

ஆனந்த: - என் அன்புள்ள அண்ணு ராவ்! நான் எத்தனையோ குற்றங்களை ராய்ச்சி செய்து கண்டுபிடித் திருக்கிறேன். ஆனால் பறக்கும் ஐந்துவால் செய்யப்பட்ட குற்றம் நான் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. குற்றம் செய்பவன் இரண்டு கால்களால் நடக்கிறவரையில் காலடி யாவது ஏதாவது ஒருவிதக் குறியாவது இருந்தே தீரும். சாத்திர யுக்தியோடு அதைக் கண்டு பிடிக்கக் கூடும். இவ்வாறு அறை முழுதும் இரத்தக் கறையாக்கியிருக்கும் இத்தகைய கொலை நடந்த விடத்தில் நமக்கனுகூலமான உளவேனும் அகப்படவில்லையென்பது நம்பத்தக்கதல்ல எப்படி யிருந்தாலும் மரண விசாரணையிலிருந்து சில விஷயங்களை கண்டு பிடிக்காமல் விட்டு விட்டாயென்று தெரிகிறது,' என்றான்.

அண்ணுராவ்:- முகவாட்ட மடைந்து, உம்மை அந்தச் சமயமே
வந்து அழைத்துக்கொண்டு போகாமல் முட்டாள் தனம் செய்த விட்டேன். இப்போததைப்பற்றி விசனிப்பதில் பயனில்லை. ஆம், அந்த அறையில் விசேஷமாய்க் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருந்தனவென்றே இப்போது புலப்படுகிறது. ஒன்று கொலையில் உபயோகப்பட்ட அந்த எறியீட்டி, அது அங்கிருந்த சுவரிலிருக்கும் மரச் சட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அச் சட்டத்தில் இன்னும் இரண்டு ஈட்டிகளிருக்கின்றன. ஒன்று மாட்டியிருந்த டம் காலியாயிருக்கிறது; அந்த ஈட்டியின் கைப்பிடியில் கடல்யாளி' என்று செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றால் கொலை செய்தவன் திடீரென்று வந்த கோபத்தால் அப்படிச் செய்தா னென்றும் அந்த ஆத்திரத்தால் கைக்குச் சட்டென்று எட்டிய ஆயுதத்தை எடுத்துக்கொண்டா னென்றும் தெரிகிறது. கொலை நடந்தது இரவு இரண்டு மணியாயினும் கறுப்பன் அந் நேரத்திலும் சாதாரண உடையணிந்து கொண்டிருந்தபடியால் யாரையோ சந்திக்க அவன் எதிர் பார்த்துக்கொண்டிருந்தான் என்று தெரிகிறது மேஜை மேல் ஒரு புட்டியில் ரம்சாராயமும் இரண்டு கிண்ணங்களும் வைத்திருந்த சம்பவங்கூட அதை நிரூபிக்கிறது.

ஆனந்த- ஆம். இதே இரண்டு உத்தேசங்களும் அங்கீகரிக்கத் தக்கனவே. அறையில் ரம்புட்டி தவிர வேறு சாராய வகைகளேதேனு மிருந்தனவோ?

அண்ணு-ஆம். கப்பற்பெட்டியில் பிராந்தி விஸ்கி இவை இரண்டு மிருந்தன. அந்த இரண்டு புட்டிகளும் நிறைந்தே இருந்தபடியால் அவை உபயோகிக்கப்பட வில்லை. ஆதலால் அச்சங்கதியால் நமக்கொரு பயனுமில்லை.

ஆனந்த-அப்படியாயினும் அதில் கொஞ்சம் விசேஷ மிருக்கவே யிருக்கிறது. ஆயினும், இதில் சம்பந்தப்பட்தாய் உனக்குத் தோன்றும் வஸ்துக்கள் இன்னும் என்னென்ன அங்கிருந்தனவோ அவற்றைக் கூறு பார்ப்போம்.

அண்ணு-மேஜைமேலிருந்த அந்தப் புகையிலைப் பை யிருக்கிறது.

ஆனந்த-அது மேஜையின் எந்தப் பக்கத்திலிருந்தது?

அண்ணு-அது மேஜையின் மத்தியிலிருந்தது. அது ஸீல் தோலால் செய்யப்பட்டது. அதன் மேல் மடிப்பின் உட்பக்கம் ப" என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அப்பையில் கப்பலாட்கள் உபயோகிக்கும் காரமான இரண்டு அவுன்ஸ் புகையிலை யிருந்தது. –

ஆனந்த-பேஷ் இன்னுமென்ன?” என்றான்.

அண்ணுராவ் தன் ஜேபியிலிருந்த ஒரு பழைய நோட் புத்தகத்தை எடுத்தான். அதன் மேற்புறம் கரடுமுரடானதாய் அழுக்குப் படிந்திருந்தது. உள் கடிதங்கள் நிறம் மாறி விருந்தன. முதல் பக்கத்தில் "ஐ. அ. ந.என்று எழுதப் பட்டு 1873-வருடத்தில் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

ஆனந்தஸிங் அதை வாங்கி மிக்க விசனத்தோடு பார்வையிட்டான். அண்ணுராவும் விஸ்வநாதரும் அவன் பின்னால் இரு புறமும் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பக்கம் சி.பி. என்று ழுதப்பட்டிருந்தது-பிறகு சில பக்கங்களில் எண்ள் எழுதப்பட்டிருந்தன. இன்னும் சில ஊர்களின் பெயர்களிருந்தன.
ஆனந்தஸிங் . 'இவற்றால் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்,' என்று கேட்டான்

அண்ணுராவ் இவை பாங்கிப் பத்திரங்களைப்பற்றிய கணக்குக் குறிப்புகள் என்று தெரிகிறது. ஐ. அ. ந.' என்பது ஒரு பாங்கி தரகனுடைய பெயரென்றும் சி. பி. ர. என்பது அவனுடைய ஆசாமியின் பெயரென்றும் நினைத்தேன்,' என்றான்.

ஆனந்தலிங், சி. பி. ர.என்பது ஒரு ஆசாமி என்று நினைப்பதற்கு பதிலாய் சிங்கப்பூர்-பினங்-ரயில்வே என்று கருதிப்பார்," என்றான்.

இதைக் கேட்ட அண்ணுராவ் ஆகாஹா என்று தன் துடைமேல் தட்டிக்கொண்டு என்ன முட்டாளாய்ப் போய்விட்டேன்! ஆம் ஆம். அப்படித்தான். சந்தேகமில்லை. இனி ஐ. அ. க. என்ற பெயரை மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும். நான் முன்னமே பாங்கிப் பட்டி புத்தகங்களை யெல்லாம் பார்த்தேன். குறித்த வருடத்தில் இப் பெயர்க ளகப்படவில்லை. ஆயினும், இது முக்கியமான உளவென்று. மட்டும் தெரிகிறது. பெரும்பாலும் இந்தப் பெயர் அறைக்குள் வந்த மனிதனுடையதா யிருக்கலாமல்லவா? இகனால் இக் கொலைக்குக் காரணம் பணமென்று தெரிகிறது." என்றான்.

ஆனந்த- இந்த இரண்டு விஷயங்களும் நான் ஒப்புக் கொள்ளத் தக்கனவே. இப் புத்தகம் மரண விசாரணையில் வெளி வராதபடியால் நான் கொண்டிருந்த சித்தாந்தத்தை இது மாற்றத் தக்கதாயிருக்கிறது. இதில் குறிக்கப்பட்ட பத்திரங்களில் எதையேனும் கண்டு பிடிக்க முயன்றாயா?

அண்ணு-ஆபீஸில் அதைப்பற்றி விசாரித்துக்கொண் டிருக்கிறார்கள். ஆனால், வெளி நாடுகளுக்கு எழுதிச் சங்கதிகளை அறியவேண்டி யிருப்பதால் சில வாரங்கள் செல்லுமென்று நினைக்கிறேன்.

ஆனந்தஸிங் பூதக் கண்ணாடியால் அந்த நோட் புத்தகத்தை நன்றாய்ப் பார்த்து, “ ஆ இங்கென்ன நிறம்?" என்றான். அண்ணு ராவ், “ இது இரத்தக் கறை. இப் புத்தகத்தை கீழே இருந்து கண்டெடுத்தேன்,' என்றான்.

ஆனந்தஸிங் 'நீ எடுக்கும்போது இக் கறை புத்தகத்தின் மேற்பக்க மிருந்ததா?”  வென்றான், அண்ணுராவ் கீழ்ப்பக்கம் என்றான்.

ஆனந்தலிங் அப்படியானால் கொலை டந்த பிறகு இது கீழே விழுந்திருக்கவேண்டும். என்றதற்கு அண்ணுராவ் ஆம் கொலையாளி கலவரத்தோடு ஒடிய போது இது தவறிக் கீழே விழுந்து விட்டது.என்றான்.

ஆனந்த-இதிற் கண்ட உத்திரவாதப் பத்திரங்களில் ஒன்றேனும் இறந்தவனிடத்தில் இருந்தகப்படவில்லையே.

அண்ணு:-இல்லை.

ஆனந்த-இக்கொலை களவிற்காக நடந்திருக்குமா?

அண்ணு-இல்லை. ஒரு பொருளேனும் எடுக்கப்பட வில்லை!

ஆனந்த-ஆகா! இது மிக்க அபூர்வமான விஷயமே; அங்கு ஒரு கத்தி யிருந்ததல்லவா?

அண்ணு-ஆம். ஒரு உறைபோட்ட கத்தி. அது உறையிலேயே இருந்தது. மரித்தவன் கால்மாட்டில் கிடந்தது. அது அவனுடையதே என்று அவன் மனைவி கூறுகிறாள்.

ஆனந்தஸிங் சற்று நேரம் சிந்தித்த பின், ”சரி. அந்த ஸ்தலத்தை நேரில் பார்க்கவேண்டியதே,” என்றான். அதைக் கேட்ட அண்ணுராவ் சந்தோஷ சத்தமிட்டு, “ தயவுசெய்து வரவேண்டியதே இப்போதுதான் என் மனதிலிருந்த பெரும்பாரம் நீங்கியது," என்றான்.


ஆனந்தஸிங்:  ”ஒரு வாரமாய்விட்டது. நீ மட்டும் அன்றே வந்திருந்தால் எவ்வளவோ சுலபமாயிருந்திருக்கும். ஆயினும் இப்போது நான் வருவது முழுதும் பயனற்றதாய்ப் போய்விடாதென்றே எண்ணுகிறேன். விஸ்வநாதரே! தாங்களும் வரவேண்டியதே வண்டி வருவதுதான் தாமதம். கால் மணி நேரத்தில் புறப்படலாம்: என்றான். 

( தொடரும்) 

தொடர்புள்ள பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக