புதன், 10 ஆகஸ்ட், 2016

சாவி -15 : வெள்ளிமணி

வெள்ளிமணி
 ஆகஸ்ட் 10.  ’சாவி’ யின் பிறந்த நாள். இது ( 2016)  ‘சாவி’ ( சா.விஸ்வநாதன்) யின்  நூற்றாண்டு வருடம்.

சாவி தொடங்கிய பல பத்திரிகைகளில் ‘வெள்ளிமணி’யும் ஒன்று. 1947-இல் தொடங்கிய வாரப் பத்திரிகை இது.  ’கல்கி’யின் துணைப் பத்திரிகை போல் நடக்கும் என்ற குறிப்புடன் தொடங்கிய இதழ்.  கல்கி, டி.கே.சி, ராஜாஜி, பி.ஸ்ரீ என்று பலரும் அதில் எழுதினர். ‘நவகாளி யாத்திரை’யில் காந்தி காலில் விழுந்து ஒரு வயதான மாது கதறியதைக் கேட்ட சாவி ‘ வத்சலையின் வாழ்க்கை’ என்ற கதையையும் இதில்தான் எழுதினார். வாரா வாரம் சின்ன அண்ணாமலையும் எழுதுவார்.  ( ‘கல்கி’ யே சில காரணங்களால் ’கல்கி’யை விட்டு விலகி ‘வெள்ளிமணி’யில் சேர்வதாக இருந்தார் என்கிறார் ராணிமைந்தன் ‘ சாவி -85’ நூலில்! )

1948-இல் சாவி “ என் ஆசிரியர்” என்ற பெயரில் ‘கல்கி’ யின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். ஆனால், கல்கி உடனே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பின்னர் பணப் பிரச்சினைகள். சிறிது நாளுக்குப் பின், ‘வெள்ளிமணி’ ஓசை நின்று விட்டது.  கல்கியும் கல்கியிலேயே இருந்துவிட்டார்!

 பத்திரிகையின் ஓர் அட்டை,   இரண்டு ( தலையங்கம் வந்த) பக்கங்கள் , சாவி ஒரு நூலில் எழுதிய ‘ வெள்ளிமணி’ தொடங்கிய அனுபவக் கட்டுரை ஆகியவற்றை இங்கே இடுகிறேன்.


( கல்கி தெய்வயானை என்ற கதை எழுதியிருந்தார் இந்த இதழில் )


[ “ மதுரையில் வசித்த ஓவியர் சந்தனுவின் ஓவியத் திறமையை அறிந்து, அவரை சென்னைக்கு வரவழைத்து அதிக சம்பளத்தில் தன் ‘வெள்ளிமணி’ பத்திரிகைக்கு கார்ட்டூனிஸ்ட்டாக நியமித்தார் சாவி. “ - ரவி பிரகாஷ் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சாவி படைப்புகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக