செவ்வாய், 18 ஏப்ரல், 2017

696. சங்கீத சங்கதிகள் - 117

கண்டதும் கேட்டதும் - 3
‘நீலம்’ 

 எம். எஸ். எஸ் -ஸில் எம்.எஸ். கச்சேரி! 
உண்மையில், இக்கட்டுரையை  இந்தப் பதிவின்  அநுபந்தமாகக் கருதவேண்டும். அங்கே மயிலை சங்கீத சபையில் 40-களில்  நடந்த எம்.எஸ்-ஸின் கச்சேரியைப் பற்றிக் கல்கியில் வந்த ஒரு கட்டுரை இருக்கிறது. மேலே உள்ள படமும் அந்தக் கச்சேரியில் சி.பி.ராமஸ்வாமி ஐயர் பேசுவதைக் காட்டுகிறது.

 எம்.எஸ். தமிழிசைக்குக் காட்டிய ஆதரவால் , சங்கீத அகாடமியில்   ஐந்தாண்டுகளுக்கு எம்.எஸ்ஸின்  இசைக் கச்சேரிகளுக்குத் ‘தடை’ இருந்தது!  இதனால் சதாசிவம் அகாடமிக்குப் போட்டியாய் இருந்த மயிலை சங்கீத சபாவுக்குப் பெரும் ஆதரவு அளிக்கத் தொடங்கினார் . சில ஆண்டுகளுக்குப்  பிறகு இரண்டு சபாக்களும் ஒன்றிணைந்தன, எம்.எஸ். ஸும்  சங்கீத அகாடமியில் பாடத் தொடங்கினார் என்பர். அந்த மயிலை சங்கீத சபா எம்.எஸ்.எஸ். என்றே  அழைக்கப்பட்டது! அதில் கச்சேரிகள் ராகு காலத்திற்கு ஒரு நிமிஷம் முன் தொடங்கின என்பர்!

இதோ எம்.எஸ்.  எம்.எஸ்.எஸ்-ஸில் செய்த கச்சேரியைப் பற்றி ‘நீலம்’
 சுதேசமித்திரன்  5 டிசம்பர் 1943 வாரப் பதிப்பில் எழுதிய ஒரு சிறு மதிப்புரை.

தொடர்புள்ள பதிவுகள்:

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

சங்கீத சங்கதிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக