நல்வாழ்வு
‘எல்லார்வி’
"எல்லார்வி" ( எல்.ஆர்.விஸ்வநாத சர்மா) கல்கிக்கு அம்மாஞ்சி முறையாவார். இளம் வயதில், "அன்புள்ள அத்தானுக்கு" என்று ஒரு கடிதம் எழுதி, விகடனுக்கு அவர் ஒரு கதையை அனுப்பினார். கல்கி " உறவுக்கும் தொழிலுக்கும் கூட்டுறவு வைக்காமல், நட்பையும் உறவையும் ஒதுக்கி வைத்து, தனி முயற்சியில் முன்னுக்கு வருவது தான் மேல்" என்று பதில் எழுதினார். ரோசத்தில் எல்லார்வி மற்ற பல பத்திரிகைகளில் தன் கட்டுரை, கதைகளைப் பிரசுரித்தார். " எல்லார்வி" என்பவர் யாரென்று தெரியாமலே கல்கியும் அவருடைய சில படைப்புகளை வெளியிட்டார். கடைசிவரை கூச்சத்தினாலும், சமயம் கிட்டாதலாலும் எல்லார்வி தான் யாரென்பதைக் கல்கியிடம் தெரிவிக்க முடியவில்லை என்பது ஒரு சோகம்.

[ நன்றி: "பொன்னியின் புதல்வர்']
. பல சங்கீத வித்வான்களைப் பற்றிய அருமையான நூல்களை எல்லார்வி எழுதியுள்ளார். .இவர் எழுதிய ‘ கலீர் கலீர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ ஆடவந்த தெய்வம்’.
‘அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த படைப்பு இதோ. ( கே.ஸ்ரீ. என்பவரை ஆசிரியராய்க் கொண்ட 'அஜந்தா' 40/50 களில் வந்த ஒரு இதழ்.)
தொடர்புள்ள பதிவுகள்:
1 கருத்து:
கணவன், மனைவிக்குள்ள அருமையான புரிதல் தான் இந்தக் கதையின் அடிப்படையே! அருமை. முன்னரும் படித்திருக்கிறேன். நன்றி.
கருத்துரையிடுக