செவ்வாய், 30 ஜூன், 2020

1574. புதுமைப்பித்தன் - 6

புதுமைப்பித்தன்  மறைவு 

ஜூன் 30. புதுமைப்பித்தனின் நினைவு தினம்.

'சக்தி' இதழில் 48-இல்  வந்த அஞ்சலிக் குறிப்பு:

விகடனில் வந்த அஞ்சலி:

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத் தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களி டையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேக மில்லை
=====

கல்கியில் வந்தது

புதுமைப்பித்தன் 'காஞ்சனை' என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை;

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்: 
புதுமைப்பித்தன்

திங்கள், 29 ஜூன், 2020

1573. தி.ஜானகிராமன் - 6

மயில்சாமியின் தேவை
தி.ஜானகிராமன் 

ஜூன் 28. தி.ஜா.வின் பிறந்த தினம்  தி.ஜா. நூற்றாண்டு தொடங்குகிறது.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

தி.ஜானகிராமன்

ஞாயிறு, 28 ஜூன், 2020

1572. வந்தேமாதரம் - 2

தேசத்திற்கு ' வந்தே மாதர' மந்திரம் தந்த ரிஷி பங்கிம் சந்திரர்.
ஸ்ரீ அரவிந்தர்

ஜூன் 27. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்த தினம்.

இந்த இழையில் 'வந்தே மாதரம்' தொடர்புள்ள சில அரிய கட்டுரைகளை இட எண்ணம். முதலில் பங்கிம் சந்திரரை நினைவு கூர்வோம்.  அரவிந்தர் எழுதிய ஓர் அரிய கட்டுரை இதோ. 'வந்தேமாதரம்' நூற்றாண்டு விழா மலர் ஒன்றில்  (1976) வந்தது.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வந்தே மாதரம்

சனி, 27 ஜூன், 2020

1571. ச.து.சுப்பிரமணிய யோகி - 4

பாலபாரதி யோகியார்
பி.எஸ்.ராமையா

ஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

ச.து.சுப்பிரமணிய யோகி

புதன், 24 ஜூன், 2020

1570. சங்கீத சங்கதிகள் - 237

இசை உலகின் மகாராஜா!
வீயெஸ்வி

ஜூன் 24மகாராஜபுரம் சந்தானத்தின் நினைவு தினம்.

அவர் டொராண்டோவிற்கு 81-இல்  முதன் முறை வந்தபோது, எங்கள் வீட்டில் அவரும், அவர் மனைவியும் தங்கிய போது நடந்தவை யாவும் மனத்தில் பசுமையாக இன்னும் இருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன், நான் சென்னையில் இருந்தபோது, நான் வானொலியில் அடிக்கடி   கேட்ட  அவருடைய ஒரு இசைத்தட்டு என் நினைவுக்கு வந்தது. எப்போதும் அவருடைய அந்தப் பாடல்தான் ஒலிபரப்பாகும்.  அது    " கந்தா குகா..." என்று தொடங்கும் ஒரு ராகமாலிகை.  ( அவர் டொராண்டோவிற்கு வந்தபோது அதை எழுதியவர் யாரெனக் கேட்டேன். அவருக்கும் தெரியாது. யாரோ ஒருவர் அவர் தந்தையிடம் கொடுத்தார் என்பது தான் அவர் நினைவு.)   அந்த  விருத்தத்தை டொராண்டோக்  கச்சேரியில்  பாட வேண்டினேன். பாடினார்,   முன்பு நான்  கேட்டவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட  ராகங்கள் ( பிருந்தாவன சாரங்கா, மோகனம், தர்பாரி கானடா, பஸந்த் பஹார் )  கொண்ட ஓர் அற்புத  மாலையாக  அது இருந்தது!   கடைசி ராகம் முடித்த சூட்டில், தன் சாகித்யமான ஒரு பஸந்த் பஹார் தில்லானாவும் பாடிச் சபையினரை பிரமிக்க வைத்தார்.

 இன்னொரு முறை  டொராண்டோவில்  ஒரு 4 மணி நேரக் கச்சேரி.  நேயர் விருப்பங்கள் வந்து கொண்டே இருந்தன. பாடிக்கொண்டே போனார்.   சீட்டுகள் மேடைக்கு வருவது ஓய்வதாய் இருக்கவில்லை.

உடனே  பாடத் தொடங்கினார்: " விளையாட இது நேரமா? " ( டி.என்.பாலாவின் சாகித்யம்) ( ஷண்முகப்ரியா)

 சபையே அதிர்ந்தது கைதட்டல்களால்!

எங்கே எப்படி  எதைப் பாடவேண்டும் என்பதை அளந்து வைத்திருந்தார் சந்தானம்.

அவர் கார்விபத்தில் 92-இல்  அகாலமரணம் அடைந்த பின் விகடனில் வந்த அஞ்சலி.
======

"சங்கீத உலகத்துல நாலு தலை முறை எனக்குத் தெரியும். சந்தானம் மாதிரி இதுவரை யாரும் அத்தனை உசரத்துக்குப் போனதில்லே; அத் தனை பிரபலம் அடைந்ததில்லே!" என்றார் செம்மங்குடி.

"மகாராஜபுரம் சந்தானம் ஒரு சகாப்தம்! ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவிதத்தில் எவரெஸ்ட்டை யெல்லாம் தாண்டி ஒரு உயரத்துக்கு அவர் போய்விட்டார். இனிமே அப்படியொரு அபார சாதனையை யாராலும் நிகழ்த்தமுடியாது!" என்றார் லால்குடி.

ரசிகர்களின் நாடித்துடிப்பை நூறு சதவிகிதம் அறிந்து வைத்திருந்தார் மகாராஜபுரம். கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் காலி நாற்காலிகள் மட்டுமே அதிகம் இருந்த ஒரு கால கட்டத்தில், புயலாக நுழைந்து அரங்கத்தில் கூட்டம் அலைமோதச் செய்த பெருமை சந்தானத்துக்கு உண்டு.

கடைசி கச்சேரி...

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி, சுவாமி தயானந்தா சரஸ்வதியின் பிறந்த ஊர். அங்கு இருக்கும் தயானந்தா மேல்நிலைப் பள்ளியில், சென்ற மாதம் 23-ம் தேதி, மாலை 4 மணி அளவில் சந்தானத்தின் கச்சேரி ஏற்பாடாகி யிருந்தது.

கச்சேரியின் முடிவில் அன்று 'மங்களம்' பாடாமல், 'வாழிய செந்தமிழ்' பாடலைப் பாடினாராம் சந்தானம். 'வந்தே மாதரம்' என்று அந்த (கடைசி) கச்சேரியை முடித் துக் கொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மஞ்சக் குடியிலிருக்கும் தயானந்தாவின் அம்மாவைச் சந்தித்து வணங்கிவிட்டு கும்பகோணம் செல்லும் வழியில் உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சந்தானம். சுவாமி தரிசனம் முடிந்ததும், அங்கு தரப் பட்ட புளியோதரை பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, ஓட்டல் திரும்பி யிருக்கிறார். பிறகு, மெட்ராஸ் பயணம்; அதுவே அவரது இறுதிப் பயணமானது!

தன் தந்தையிடம் பாட்டு கற்றுக் கொள்ள வந்த ஞானத்தைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண் டவர் சந்தானம். இப்போது, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானத்துக்குச் சென்ற ஞாயிறன்று காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. விபத்துக்குப் பிறகு, முழு நினைவு இன்னும் திரும்பவில்லை.

"எங்கோ பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் அடிபட்டிருப்பதாகவே அம்மா நினைத்துக்கொண்டு இருக்கிறார். 'அவர் எப்படி இருக்கார்? வேளாவேளைக்கு அவருக்கு வேண்டியதெல்லாம் கொடுங்க' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்றார் மகன் ராமச்சந்திரன். விபத்து நடந்தது ஞானத்துக்கு நினைவில்லை. கணவர் இறந்து போய்விட்டது இன்னமும் இவருக்குத் தெரியாது.
====
 [ நன்றி : விகடன் ] 

 தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

செவ்வாய், 23 ஜூன், 2020

1569. 'சிட்டி' சுந்தரராஜன் - 5

வால் நட்சத்திரம்
சுப்ர.பாலன்

ஜூன் 24. ‘சிட்டி’ அவர்களின் நினைவு தினம்.

முதலில், கல்கியில் வந்த அஞ்சலி.

'அமுதசுரபி'யில்  2006-இல் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியது.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

'சிட்டி' சுந்தரராஜன்

திங்கள், 22 ஜூன், 2020

1568, தாகூர் - 5

இரண்டு வீரர்கள்
தாகூர் 

சக்தி இதழில் 1942-இல் வந்த கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தாகூர்

வெள்ளி, 19 ஜூன், 2020

1567.சுரதா - 3

வரலாற்றுத் தொடர்ச்சி! 
கலாபாரதி 

ஜூன் 19. சுரதா அவர்களின் நினைவு தினம்.

ஒரு மலருக்காக 2006-இல் நான் எழுதியது:

கவிபாரதி தாசன்தனை ஆசானெனக் கொண்டு
நவமாய்க்கவி சிலை,ஊர்,தெரு கல்வெட்டென யாத்துக்
கவினார்திரைப் படப்பாடலில் தமிழ்த்'தேன்மழை' பெய்த
உவமைக்கவி சுரதாவுடை ஒல்காப்புகழ் வாழி! 

' கல்கி'யில் வந்த அஞ்சலி.

சுரதா 2006-இல் மறைந்தபின் 'அமுதசுரபி'யில்  திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை:

' சிவாஜி' இதழில் சுரதா 46-இல் எழுதிய ஒரு கவிதை.

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்: 

வியாழன், 18 ஜூன், 2020

1566. கதம்பம் - 25

சேலம் வீரரின் தீரப் போராட்டம்
ஆர்.டி.பார்த்தசாரதி

ஜூன் 18. சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் பிறந்த தினம்.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

சேலம் சி.விஜயராகவாச்சாரியார்
சேலம் சி. விஜயராகவாச்சாரியார்: விக்கிப்பீடியா

புதன், 17 ஜூன், 2020

1565. சத்தியமூர்த்தி - 14

நகர சுகாதாரம், குடும்ப வாழ்க்கை, கிளப் வாழ்க்கை
எஸ். சத்தியமூர்த்தி 

1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த மூன்று கடிதங்கள்.

பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி

திங்கள், 15 ஜூன், 2020

1564. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 4

துரும்பின் ஆவேசம்

மஞ்சேரி எஸ்.ஈச்வரன் 

'சக்தி' இதழில் 1944-இல் வந்த கதை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவு:

மஞ்சேரி எஸ். ஈச்வரன்